சினிமாத் துளிகள்


இப்படியும் ஒரு கொண்டாட்டம் 

.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் உட்பட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான படம் சர்கார்.
 இந்த படத்தின் 100வது நாள் விழாவை கொண்டாட ஈரோடு மாவட்டத்தில் பிரபல தியேட்டரில் வரும் 17 ஆம் தேதி காலை 7 மணிக்கு சர்கார் மீண்டும் திரையிடப்பட்டு கொண்டாடப்படவுள்ளதாம்.
 இது எப்படியிருக்கு?   


இப்படியும்  ஒரு நிலைமை

வரிசையாக படங்களில் நடித்து வரும் நடிகர்களில் ஒருவரான விஜய் ஆண்டனி அடுத்ததாக மெட்ரோ திரைப்பட இயக்குனருடன் ஒருப் படத்தில் இணைந்து பணியாற்ற உள்ளார்.
விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் படம் தெலுங்கில் சக்கைப்போடு போட்டது. அதுவரை தனக்கு ஏற்றக் கதாபாத்திரத்தில் நடித்து வந்த விஜய் ஆண்டனி அதன் பின் மசாலா ரூட்டில் இறங்கினார். தெலுங்கு ரசிகர்களையும் கவர எடுத்த இந்த முடிவு தமிழ் ரசிகர்களிடம் இருந்து அவரைத் தள்ளி வைத்தது.
வரிசையாக அவர் நடித்த காளி, அண்ணாதுரை, திமிரு புடிச்சவன் ஆகியப் படங்கள் படுதோல்வி அடைந்தன. இதனையடுத்துக் கவனமாகப் படங்களைத் தேர்வு செய்யும் விஜய் ஆண்டனி இப்போது மக்கள் ஆதரவைப் பெற்ற மெட்ரோப் பட இயக்குனர் ஆனந்த கிருஷ்ணனோடுக் கைகோர்த்துள்ளார்.
பெயர் சூட்டப்படாத இந்த படம் ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாக இருக்கிறது. இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும்.

 கர்ணன் வேடத்தில் விக்ரம் 

தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மூன்று மொழிகளில் கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய் செலவில் மகாவீர் கர்ணா என்றப் படம் உருவாகி வருகிறது. இதில் இந்தியாவின் உச்ச நட்சத்திரங்கள் பலர் நடிக்க, கர்ணன் வேடத்தில் விக்ரம் நடிக்க இருக்கிறார். இப்படத்தை மலையாள இயக்குனர் ஆர்.எஸ்.விமல் இயக்குகிறார். இப்படத்தின் வசனங்களைப் பல எழுத்தாளர்கள் எழுதுகின்றனர். அதில் தமிழ் வடிவத்துக்கான வசனங்களை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதுகிறார். இப்படத்தை அமெரிக்காவைச் சேர்ந்த யுனைடெட் ஃபிலிம் கிங்டம் நிறுவனம் தயாரிக்கிறது..
விக்ரம் இல்லாத மற்ற நடிகர் நடிகைகளின் காட்சிகளைப் படக்குழு இதுவரைப் படமாக்கி வந்தது. இந்நிலையில் கடாரம்கொண்டான் பட வேலைகளை முடித்துள்ள விக்ரம் இப்போது கரணா படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து இப்படத்தின் இயக்குனர் ஆர்.எஸ்.விமல்கடைசியாக அந்த நாள் வந்துவிட்டது. தொடங்கியது மகாவீர் கர்ணா. தலைசிறந்த நடிகரான சீயான் விக்ரமுக்கு முதன்முறையாக ஆக்ஷன் சொன்னது மிகுந்த மகிழ்ச்சியளித்தது. நன்றி கடவுளேஎனக் கூறியுள்ளார்.

🎥🎥🎥🎥🎥தொகுப்பு:கயல்விழி,பரந்தாமன் 🎥🎥🎥🎥🎥

0 comments:

Post a Comment