திரைக்காக சில புதினங்கள்


த்ரிஷா: முன்னணி நடிகர்களின் படங்களில் நடிப்பதை தவிர்த்து கமர்சியல் படங்களிலிருந்து சற்று விலகி கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கும் படங்களில் தொடர்ந்து நடித்து கொண்டிருக்கிறார் த்ரிஷா. இந்நிலையில் அடுத்ததாக திரிஷா நடிப்பில் கர்ஜனை, பரமபதம் விளையாட்டு போன்ற படங்கள் தொடர்ந்து வெளியாக ரெடியாகிக் கொண்டிருக்கிறது. அத்துடன் ,ஏழு வருடங்களுக்கு பிறகு விஷால் நடிப்பில், நாய்க்கு முக்கிய வேடம்  உள்ள ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம் திரிஷா.

 

சிவகார்த்திகேயன்: இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் அறிவியல் சார்ந்த படம் அயலான். இப்படத்தின் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடித்துள்ளார். கருணாகரன், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்கள்.

 

பிரகாஷ்ராஜ்:நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால், ஆர்யா இணைந்து நடிக்கும் ''எனிமி'' படத்தில்  பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் இணைந்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

 

விஷால்: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஷால். இவர் நடிப்பில் தற்போது சக்ரா திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் நிறைவடைந்தது. பின்னணி வேலைகள் முடிவடைந்தவுடன் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. அதுபோல் விஷால் நடிப்பில் உருவாகி வரும் மற்றொரு படம் துப்பறிவாளன் 2. இந்த படத்தை விஷாலே இயக்கிவருகிறார். மேலும்  நடிகர் விஷால் திமுகவில்  இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இணைந்தால் முக்கிய பொறுப்பு கொடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

சூர்யா: இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள படம் வாடிவாசல். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கவுள்ளார்.

 

லட்சுமி ராமகிருஷ்ணன்: லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்துக்கு 'ப்ளூ இங்க்' எனத் தலைப்பிட்டுள்ளனர். நிகழ்ச்சி தொகுப்பாளர், நடிகை, இயக்குநர் என பல்வேறு தளங்களில் இயங்கி வருபவர் லட்சுமி ராமகிருஷ்ணன். 'ஆரோகணம்', 'நெருங்கி வா முத்தமிடாதே', 'அம்மணி' மற்றும் 'ஹவுஸ் ஓனர்' உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

 

எஸ்.பி பாடசாலை: இந்தியாவில் நெல்லூர்  இசை அரசுப் பாடசாலைக்கு மறைந்த பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்களின் பெயரை சூட்டி கெளரவிக்க  ஆந்திர மாநில அரசு முடிவு செய்துள்ளது.

 

இலங்கைக்கலைஞன்: தமிழ்நாடு - சென்னையில் கடந்த ஐப்பசி மாதம் 25ஆம் தேதி முதல் கார்த்திகை மாதம் 22ஆம் தேதி வரை சிறப்பாக நடைபெற்ற திரைப்பட விழாவில் இலங்கை கலைஞன் விமல்ராஜின் ''வெள்ளம்''குறுந்திரைப்படம் விருதினை பெற்றுள்ளது.

 

'கன்னிராசி' தடை: நடிகர் விமல் நடிப்பில் வெளியாக இருந்த 'கன்னிராசி' திரைப்படத்தை வெளியிட, விநியோக பண மோசடிகள் காரணமாக   சென்னை நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

 

தனுஷ்: நடிகர் தனுஷ், தமிழ் மட்டுமின்றி பாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் தமிழ் மற்றும் ஹிந்தி மொழி படத்தின் தமிழ்த் தலைப்பு 'வால் நட்சத்திரம்' என அறியப்படுகிறது.

தொகுப்பு:செ.மனுவேந்தன்


0 comments:

Post a Comment