சிரிக்க... சில நிமிடம்

நகைச்சுவை=ஜோக்ஸ்



-01-

மனைவி: "என்னை உங்களுக்கு எப்போது மிகவும் பிடிக்கும்?"

கணவன்: "நீ தூங்கும்போது!"

 

-02-

கணவன்: "இன்று சமைத்த சாப்பாடு ரொம்ப அருமை!"

மனைவி: "போங்க, ஏமாற்றப் பார்க்காதீர்கள். இது நேற்றைய மிச்சம்!

 

-03-

தந்தை: "பெரியவனானால் என்ன ஆவாய்?"

மகன்: "நான் உங்களைப் போல் வேலைக்குச் செல்லாமல் வீட்ல இருந்து அம்மாவை கடிச்சுக்கொண்டு இருப்பேன்!"

 

-04-

ஆசிரியர்: "மழை பெய்தால் என்ன நன்மை கிடைக்கும்?"

"மாணவன்: "சார், பள்ளிக்கு விடுமுறை கிடைக்கும்!"

 

-05-

ஆசிரியர்: "அமெரிக்காவைக் கண்டுபிடித்தது யார்?"

மாணவன்: "சார், கொலம்பஸ்."

ஆசிரியர்: "அடுத்த கேள்வி, கொலம்பஸைக் கண்டுபிடித்தது யார்?"

மாணவன்: "அவருடைய அம்மா தான் சார்!"

 

-06-

வாடிக்கையாளர்: "இந்தச் சட்டை துவைச்சா சாயம் போகுமா?"

ஜவுளிக்கடைக்காரர்: "கண்டிப்பா போகாதுங்க. ஏன்னா, துவைச்சதுக்கு அப்புறம் சட்டையே இருக்காது, வெறும் நூல் மட்டும்தான் இருக்கும்!"

 

-07-

வாடிக்கையாளர்: "ஆடித் தள்ளுபடில 50% தள்ளுபடினு போர்டு வச்சிருக்கீங்க, ஆனா விலை டபுளா இருக்கே?"

கடைக்காரர்: "விலையை டபுள் பண்ணிட்டு 50% குறைக்கிறதுதான் எங்க பிசினஸ் சீக்ரெட்!"

 

-08-

கணவன்: "உள்ளே போய் ஒரு மணி நேரம் ஆகுது, இன்னும் சட்டை செட் ஆகலையா?"

மனைவி: "சட்டை செட் ஆயிடுச்சுங்க, ஆனா  ரூம் கண்ணாடி முன்னாடி செல்ஃபி எடுக்கிறேனுங்க! கொஞ்சம் இருங்க!

 

-09-

கடைக்காரர்: "ஐந்து ரூபாய் சில்லறை இல்லைங்க, அதுக்கு பதிலா ஒரு சாக்லேட் வச்சுக்கோங்க.

"வாடிக்கையாளர்: "அடுத்த முறை வரும்போது சாக்லேட்டைக் கொடுத்துட்டு காய் வாங்கிக்கலாமா?"

 

-10-

கிளையண்ட்: "நம்மிடம் வலுவான ஆதாரங்கள் ஏதும் இல்லையே, எப்படி ஜெயிப்பது?"

வக்கீல்: "ஆதாரங்களை விட, நீதிபதிக்கு இன்று காலை வீட்டில் சண்டை நடக்காமல் இருக்க வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொள்!"

 

-11-

கிளையண்ட்: "இந்த வழக்கு எவ்வளவு காலம் நடக்கும்?"

வக்கீல்: "என் இரண்டு மகளவை சீதனம் முதல் திருமணம் வரை உள்ள செலவுகள் நிறைவடையும்வரை  தம்பி!"

 

-12-

எதிர்த்தரப்பு வக்கீல்: "நீ சொல்வது முற்றிலும் பொய்!"

சாட்சி: "இல்லை சார், நான் உண்மையைத்தான் சொல்கிறேன். வேண்டுமென்றால் என் வக்கீலிடம் கேட்டுப் பாருங்கள், அவர்தான் எனக்கு இந்த உண்மையைச் சொல்லிக் கொடுத்தார்!"

 

-13-

ஜூனியர் வக்கீல்: "சார், வாதாடும்போது பெரிய சட்டப் புத்தகத்தை ஏன் கையில் நாம் வைத்திருக்க வேண்டும்?"

சீனியர் வக்கீல்: "நீதிபதிக்குச் சட்டம் தெரியவில்லை என்றாலும், நாம் பெரிய புத்தகத்தை வைத்திருப்பதைப் பார்த்துப் பயப்படுவார்!"

 

-14-

போலிஸ்: "ஐயா, திருடன் கைரேகை எதுவும் வைக்காமல் கிளவுஸ் (Gloves) போட்டுத் திருடியிருக்கிறான்."

வக்கீல்: "அப்படியென்றால், என் கிளையண்டின் கைரேகை அங்கு இல்லை என்பது உறுதியாகிவிட்டது. அவரை விடுதலை செய்யுங்கள்!"

 

-15-

போலிஸ்: "உண்மையைச் சொல், அந்த நகையை எங்கே மறைத்து வைத்திருக்கிறாய்?"

திருடன்: "சார், யூடியூபில் (YouTube) 'நகையை ஒளித்து வைப்பது எப்படி' என்று தேடிப் பார்த்தேன், அவர்கள் சொன்ன இடத்தில் தான் வச்சிருக்கேன்!"

 

-16-

வக்கீல் 1: "நீதியின் கண் ஏன் கட்டப்பட்டிருக்கிறது தெரியுமா?"

வக்கீல் 2: "தெரியுமே, சட்டம் செய்யும் அநியாயங்களைப் பார்க்க முடியாமல் தான் அது தன் கண்ணைக் கட்டிக் கொண்டுள்ளது!"

 

-17-

காதலி: "அங்கே பாருங்கள், என் அப்பா நம்மையே பார்த்துக் கொண்டு பூங்காவிற்குள் வருகிறார்!"

காதலன்: "பயப்படாதே... நாம் இருவரும் சண்டை போடுவது போல் கத்த ஆரம்பிப்போம். அவர் வழக்கம்போல் என்னைத் திட்டாமல் உன்னைத்தான் திட்டுவார்!"

 

-18-

காதலன்: "பூங்காவில் இருக்கும் எல்லா மரத்தோடும், செடியோடும் செல்ஃபி எடுத்து முடித்துவிட்டாய். அடுத்து என்ன?"

காதலி: "அங்கே ஒரு நாய் படுத்திருக்கிறதே, அதனுடன் ஒரு 'க்யூட்' செல்ஃபி எடுக்க வேண்டும், கொஞ்சம் பிடித்துக் கொள்கிறீர்களா?"

 

-19-

மனைவி: "அங்கே பாருங்கள், அந்த ஜோடி எவ்வளவு அழகாகப் பேசிக் கொள்கிறார்கள்!"

கணவன்: "ஆமாம், அவளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று நினைக்கிறேன். அதனால்தான் அவன் இன்னும் சிரித்துப் பேசுகிறான்!"

 

-20-

மனைவி: "ஏங்க, வாக்கிங் போகும்போது ஏன் இவ்வளவு வேகமாக ஓடுகிறீர்கள்?"

கணவன்: "பூங்காவிற்குள் நுழைந்தவுடனேயே என் பழைய கடன் காரன் ஒருவன் வாக்கிங் வருவதைப் பார்த்துவிட்டேன், அதான்!"

 

-21-

சிறுவன் 1: "டேய், நீ எங்கே ஒளிந்திருக்கிறாய் என்று எனக்குத் தெரியும், வெளியே வா.

"சிறுவன் 2 (புதரிலிருந்து): "பொய் சொல்லாதே, நான் இன்னும் என் கண்ணையே மூடிக் கொள்ளவில்லையே, அப்புறம் எப்படி உனக்குத் தெரியும்?"

 

-22-

பாட்டி: "பூங்காவிற்கு வந்து இரண்டு மணி நேரம் ஆகிறது, வீட்டிற்குப் போகலாமா?"

தாத்தா: "இருடி, நான் யாரைக் கூட்டிட்டு பூங்காவிற்கு வந்தேன்னு யோசிச்சுட்டே இருக்கேன். நல்ல வேளை நீயே ஞாபகப்படுத்திட்ட!"

 

-23-

மேலாளர்: "அலுவலகம் மூடும் நேரம் வந்தும் இன்னும் மேசையில் தலை வைத்துத்  தூக்கமா?"

ஊழியர்: "சார், தூக்கத்தில் வீடு போற மாதிரி ஒரு கனவு கண்டேன். அதான் வீடு போயிற்றேன் எண்டு நினைச்சு நிம்மதியா இங்கேயே தூங்கிட்டேன்!"

 

-24-

மேலாளர்: "நீ வேலைக்குச் சேர்ந்து ஒரு வாரம் ஆகிறது. இன்னும் ஒரு தப்பு கூட செய்யவில்லையே, எப்படி?"

ஊழியர்: "சார், நான் இன்னும் வேலையையே ஆரம்பிக்கவில்லையே!"

 

-25-

நண்பன் 1: "அவனுக்கு எப்படிப் பதவி உயர்வு கிடைத்தது?"

நண்பன் 2: "மேனேஜர் ஜோக் சொல்லும்போது ஆபீஸிலேயே இவன்தான் சத்தமாகச் சிரிப்பான், அதான்!"

தீபம் நகைச்சுவை

0 comments:

Post a Comment