நம்மை நெருங்கி வரும் புதுமைகள்

 அறிவியல்=விஞ்ஞானம் 

கொசுக்களை தடுக்கும் கவசம்


மர ஆலைக்  கழிவிலிருந்து தயாராகின்றன சி.என்.சி எனப்படும் செல்லுலோஸ் நேனோ படிகங்கள்.

 இதனுடன் கிளைசெராலை சேர்த்து, பீய்ச்சி அடித்தால், மனித தோல் மீது ஒரு கண்ணாடி படலம் போன படியும். இப்படலத்தின் மீது கொசு அமர்ந்து வளவு முயன்றாலும் துளையிட்டு மனித தோலை எட்ட முடியாது.

 

 இதன் மூலம் பெண் கொசுக்களுக்கு மனித ரத்தம் கிடைக்கும் வாய்ப்பு 80 சதவீதம் குறைத்து, அவற்றின் இனப்பெருக்க வாய்ப்பை கணிதமாக தடுக்கலாம் என்கின்றனர், இதை கண்டுபிடித்துள்ள ஹீப்ரு ஜெருசேலம் பல்கலைக்கலை விஞ்ஞானிகள்.

 

வெளிச்சம் தரும் சுவர்க் கல்!...


கண்ணாடி கட்டிகளை வைத்து சுவர்களை உருவாக்குவது தற்போது ஏற்கப்பட்டுள்ளது. ஆனால் அதைவிட வலுவான
,அதே சமயம் நல்ல வெளிச்சத்தை உள்ளே அனுமதிக்கும் ஒரு புதிய பொருளை சுவிட்சலாண்டை சேர்ந்த 'ஏம்ப்பா'ஆராய்ச்சி குழும விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

 

 மிகவும் மென்மையான  'சிலிக்கா ஏரோஜெல்' துகள்களையும் கண்ணாடி தகடுகளையும் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த புதிய வகை கல்லுக்கு 'ஏரோபிரிக்ஸ்' என விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர்.

 

   'ஏரோபிரிக்ஸ்' ஆறு பகுதியிலும் 'சிலிக்கா ஏரோஜெல்' கண்ணாடி தகட்டினால் ஒட்டப்பட்டுள்ளது. ஆனால் இவற்றை அடக்கினால் பழமையா கட்டுமான பொருட்களை விட, அதிக பலவை தாங்கும் திறன் கொண்டவர்களாக இருக்கின்றன.

 

 அதிக வெளிச்சத்தை  ஏரோபிரிக் சுவர் உள்ளே விட்டாலும், வெப்பத்தை அனுமதிப்பதில்லை. எண்ணாடி தகட்டினால் ஒட்டப்பட்டுள்ளது. ஆனால் இவற்றை அடக்கினால் பழமையா கட்டுமான பொருட்களை விட, அதிக பலவை தாங்கும் திறன் கொண்டவர்களாக இருக்கின்றன.

 

 அதிக வெளிச்சத்தை  ஏரோபிரிக் சுவர் உள்ளே விட்டாலும், வெப்பத்தை அனுமதிப்பதில்லை. எனவே பகலில் மின் விளக்கு செலவும், ஏசி போடும் செலவும் மிச்சமாகிறது. கட்டுமானத்துக்கு வரவிருக்கும் ஏரோ பிரிக்ஸ் பற்றி 'ஜேர்னல் ஒப் பில்டிங் இன்ஜினியரிங்' என்ற ஆய்விதழ்  மிகவும் மெச்சி உள்ளது.னவே பகலில் மின் விளக்கு செலவும், ஏசி போடும் செலவும் மிச்சமாகிறது. கட்டுமானத்துக்கு வரவிருக்கும் ஏரோ பிரிக்ஸ் பற்றி 'ஜேர்னல் ஒப் பில்டிங் இன்ஜினியரிங்' என்ற ஆய்விதழ்  மிகவும் மெச்சி உள்ளது.

 

வைரஸ் வைத்தியர்...

பல கெட்ட பக்ரீறியாக்கள் தங்களைக் கொல்லவரும் ஆன்ட்டிபயாடிக் மருந்துகளை எதிர்க்க பழகிவிட்டன.

 

 இந்த சிக்கலை தீர்க்க வைரஸ்களை ஏன் பயன்படுத்தக்கூடாது? என மருத்துவர்கள் பரிசோதிக்க துவங்கியுள்ளனர்.

 

சில இயற்கை வைரஸ்களும், ஆய்வகத்தில் மரபணு  திருத்தப்பட்ட சில வைரஸ்களும் இந்த வேலையை சிறப்பாக செய்யுமென ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த சிறப்பு வைரஸ்கள்,  மருந்து எதிர்க்கும் பாக்டீரியாக்களை குறி வைத்து தாக்குகின்றன. ஆனால் நல்ல கிருமிகளை தாக்காமல் விட்டுவிடுகின்றன.

 அடுத்ததில் ஆண்டுகளில் வைரஸ் வைத்தியம் பரவலாகி விடும்.

 

விலகும் நரையின் திரை...

மனித முடி ஏன் கருப்பு நிறத்தை மெல்ல இழந்து, வெண்மையாக மாறுகிறது?

 இதைப் பற்றிய திட்டவட்டமான விளக்கம் இப்போதுதான் விஞ்ஞானிகளால் தர முடிந்தது.

 முடியின் வேர்கால் பகுதியில் இருக்கும் இது வேறு அறைகளுக்கிடையே 'மெலோனோசைட்' என்ற 'ஸ்டெம்' செல்கள் போவதும் வருவதுமாக இருக்கும். அப்போது அவை கருப்பு நிறமிப்  புரதங்களை விட்டுச் செல்லும். ஆனால் மேலோனோ சைட் செல்கள் ஒரே பக்கத்தில் சிக்கிக் கொண்டால், அவற்றால் கருப்பு நிறமிகளை கொடுக்க முடிவதில்லை. எனவே அந்த முடி வெள்ளையாகவே வளர்கிறது.

 

கடலடி 'போன்' தரும் சுனாமி எச்சரிக்கை!...


அணு ஆயுத சோதனைகளை கட்டுப்படுத்தும் சர்வதேச ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக
1996 இல் கடலுக்கடியில் நீரிலும் இயங்கும் ஹைட்ரோபோன் களின் வலை பின்னல் நிறுவப்பட்டது.

 இது சேகரித்து வரும் கடலடி நில அதிர்வு தகவல்களை எடுத்து கார்டிப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர்.

 

 இந்த ஆய்வின் இறுதியில் கடந்த சில ஆண்டுகளில் பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்களின் ஆழத்தின் நிகழ்ந்த இருநூறு நில நடுக்கங்களை விஞ்ஞானிகளால் துல்லியமாக அடையாளம் கண்டுபிடிக்க முடிந்தது. இதில் சுனாமிகளை உருவாக்கிய நான்கு கடலடிப் பூகம்பங்களும் அடக்கம்.

 

 இதன் மூலம் ஹைட்ரோபோன்களின் தகவல்களை, சுனாமி முன்னெச்சரிக்கைக்கும் பயன்படுத்தலாம் என கார்டிப்  விஞ்ஞானிகள் உறுதியாக தெரிவித்துள்ளனர். பிற சுனாமி எச்சரிக்கை கருவிகள் சுனாமி நகர துவங்கிய பிறகு எச்சரிக்கை செய்வதால், கடலோர மக்கள், மீனவர்கள் இடம்பெயர்வதற்கான அவகாசம் கிடைப்பதில்லை.

 

 ஆனால் கடல் அடி ஹைட்ரோ போன்களால் துல்லியமாக முன்கூட்டியே சுனாமியை கணிக்க முடிவதால், பல உயிர்கள் காக்கப்படும். எனவே இனி கடல் அடி ஹைட்ரோபோன் வலைப்  பின்னலின் தகவல்களையும், கடற்கரை நாடுகள் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

தொகுப்பு:செ.மனுவேந்தன்


0 comments:

Post a Comment