"தமிழர் சமயமும் அதன் வரலாறும்”: பகுதி: 17

[ஒரு அலசல்- தமிழிலும் ஆங்கிலத்திலும்]



சுமேரிய படைத்தல் புராணத்தின் படி, குறைபாடற்ற, தொடக்கநிலை மனித உழைப்பாளியை செய்யும் [படைக்கும்] முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த தருவாயில், என்கியாலும் தாய் தெய்வம் நின்-ஹர்சக்காலும் ஊனமான மனிதர்களும் படைக்கப் பட்டார்கள் என, சுமேரியன் படைப்பு நூல் மேலும் கூறுகிறது. இது ஒருவேளை, சோதனை மற்றும் பிழை [trial-and-error] செயல் முறையில் தவிர்க்க முடியாமல் நிகழ்ந்ததாக இருக்கலாம். தொடக்கத்தில் மனித இனம் தாங்களாக இனப்பெருக்கம் செய்ய முடியாமலும் இருந்தார்கள். எனினும் என்கியும் நின்கியும் சிறிது மாற்றியமைத்து அதை சரிப்படுத்தினார்கள். எனவே அதன் பின், மனிதன் தன்பாட்டில், முழுமையாக செயல் படும் சுயாதீன மனிதன் ஆனான். மேலும் ஒரு சுமேரிய பாடல், உலகின் தொடக்க கால மனிதனின் நிலை பற்றியும் கூறுகிறது.

 

"மனித இனம் படைக்கப்பட்ட போது,

அவர்களுக்கு பாண் [ரொட்டி] சாப்பிடத் தெரியாது,

அவர்களுக்கு உடை உடுக்க தெரியாது,

புள் பூடு செடி கொடிகளை செம் மறியாடு போல் மேய்ந்தான்

குளம் குட்டை ஓடையில் விலங்கு போல் நீர் அருந்தினான்"

 

அப்படியான மிருகம் போன்ற மனிதனைப் பற்றி கில்கமேக்ஷ் காப்பியமும் ["Epic of Gilgamesh" ] வர்ணிக்கிறது. என்கிடு [Enkidu] என்ற ஒரு காட்டு வாசி, சமாட் [Shamhat ] என்ற ஒரு அழகான கோயில் தேவதாசியால் காம இன்பம் ஊட்டி, மயக்கி, காட்டில் இருந்தும் காட்டுமிராண்டித் தனத்தில் இருந்தும் நாகரிகம் படுத்த முன்பு, அந்த காட்டு மிராண்டி எப்படி வாழ்ந்தான் என்பதை இப்படி சொல்கிறது:  'மனிதர்களின் குடியிருப்புகள் குறித்து என்கிடு அறியான். அவன் மான்களுடன் மேய்கிறான். காட்டுயிர்கள் எங்கு நீர் அருந்துமோ அங்கு செல்கிறான். அவைகள் மாதிரியே அருந்துகிறான். அவைகளில் ஒன்றாகவே பராக்கிரம சாலியான என்கிடு வாழ்க்கை நடத்துகிறான். அவன் உடல் முழுக்க மயிர் மயமாக மிருகங்கள் போல் இருக்கிறது'    

 

இதற்கு மாறாக, மூத்த சங்க இலக்கியமான தொல்காப்பியத்தில், உயிர்கள் கடவுளால் படைக்கப் பட்டதாக எந்தக் குறிப்பும் இல்லை. மாறாக "நிலமும், நீரும், தீயும், காற்றும், விண்ணும் கலந்ததொரு மயக்க மான நிலையில் உலகம் உண்டாயிற்று. இவையாவும் ஓர் எல்லைக்கு உட்பட்டு இயங்கிக் கொண்டிருந்த நிலையில் உயிர்கள் தோன்றிற்று" எனத் தொல்காப்பியர் இன்றைய அறிவியல் கண்டு பிடிப்பு போல் ஒன்றை, அன்றே அதாவது இற்றைக்கு இரண்டாயிரத்து எழுநூறு (2,700) ஆண்டுகளுக்கு முன்னால் கூறுயிருக்கிறார் என்பது கவனிக்கத் தக்கது.

 

"நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும்

கலந்த மயக்கம் உலகம் ஆதலின்"

 

(தொல்காப்பியம் 1581 / தொல். பொருள், மரபியல் 635)

 

உலகத்தின் தோற்றம் பற்றி மற்றும் ஒரு சங்க இலக்கியமான பரிபாடலும் கூறுகிறது.

 

"கரு வளர் வானத்து இசையின் தோன்றி

 உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்

 உந்து வளி கிளர்ந்த ஊழ்ஊழ் ஊழியும்

 செந் தீச்சுடரிய ஊழியும் பனியொடு

 தண் பெயல் தலைஇய ஊழியும்அவையிற்று

 உள் முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு

மீண்டும் பீடு உயர்பு ஈண்டிஅவற்றிற்கும்

உள்ளீடு ஆகிய இரு நிலத்து ஊழியும்"

 

(பரி.2:5- 12)

 

இதில் வானிலிருந்து காற்றும் காற்றிலிருந்து தீயும் தீயிலிருந்து நீரும் நீரிலிருந்து நிலமும் தோன்றிய நிலைகளைக் கூறியுள்ளார். இவை மட்டும் இன்றி கதிரவனில் பிரிந்து பூமி நீண்ட காலத்திற்கு நெருப்புக் கோளமாக இருந்தது என்றும் அது காலப் போக்கில் சிறிது சிறிதாக குளிர்ந்து பனிப் படலமாக மாறி, பின் நெடுநாட்களுக்குப் பிறகு நிலம் தோன்றியது என்றும் உலகத்தின் தோற்றம் குறித்த பல அறிவியல் உண்மைகளை விளக்குகிறது.

 

மேலும், கடைச் சங்க காலத்தில் எழுந்த எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான புறநானுற்றில் ஐம்பெரும் பூதங்களான நிலத்தையும், வானையும், காற்றையும், நெருப்பையும் நீரையும் உலகம் கொண்டுள்ளது என்று

 

"மண் திணிந்த நிலனும்,

நிலம் ஏந்திய விசும்பும்,

விசும்பு தைவரு வளியும்

வளித் தலைஇய தீயும்,

தீ முரணிய நீரும்,

என்றாங்கு ஐம்பெரும் பூதத்து

இயற்கை போலப் போற்றார்ப் பொறுத்தலும்"

 

[புறநானுறு: 02] 

 

மண் செறிந்த நிலமும், நிலத்திலிருந்து ஆகாயமும், ஆகாயத்திலிருந்து காற்றும், காற்றிலிருந்து நெருப்பும், நெருப்பிலிருந்து நீரும் உண்டாயின என பேசப்படுவதை காண்கிறோம்.

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,அத்தியடி, யாழ்ப்பாணம்]

பகுதி 18 தொடரும்...

 ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக/Click to read from the beginning


*அடுத்த பகுதியினை வாசிக்க அழுத்துக/CLICK TO READ NEXT PART, 

[இணைத்த படங்கள்மனிதனின் சுமேரிய படைப்பு புராணம், என்கிடு ,ஏவாளின் படைப்பு புராணம்,  இந்த சமய படைப்பு புராணம்]

 

An analysis of history of Tamil religion - PART: 17  

 [In English and Tamil]

Sumerian texts, too, speak of deformed humans created by Enki and the Mother Goddess (Ninhursag) in the course of their efforts to fashion a perfect Primitive Worker, probably unavoidably, as part of a trial-and-error process. But finally when the perfect Man was achieved, Initially human beings were unable to reproduce on their own, but were later modified with the help of Enki and Ninki. Thus, man was created as a fully functional and independent human being. Also a Sumerian tale dealing with the primordial times states:

 

"When Mankind was created,

They knew not the eating of bread,

Knew not the dressing in garments;

Ate plants with their mouth like sheep;

Drank water from a ditch."

 

Such an animal - like "human" being is also described in the "Epic of Gilgamesh" which tells what Enkidu, the one "born on the steppes," was like before he became civilised by the temple prostitute, Shamhat .

 

In contrast to the above Sumerian creation story, this is surprised to note that, the Sangam literature, Tholkapiyam was never mention that World & life were created by god as most of the other religion said, But It clearly mentioned that they were evolved from five basic elements such as earth [land], fire, water, air [wind] & space [sky]. Thus, when all of them mixed each others, World evolved gradually. Then, when all of them move within a said  limit, Life on Earth evolved. Some what similar to present day evolution theory.

 

"The world and all the objects there (that have been named as above) are all complexes generated out of the five fold Basic Elements of Earth  [Land] Fire, Water, Wind  [Air] and Space  [Sky]."

 

"A structural blend of all five,

Earth, fire, water, air & space, 

As the world is"

 

"நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும்

கலந்த மயக்கம் உலகம் ஆதலின்"

(Tolkapiyam 1581 / Thol, Porul, marapiyal 635)

 

Also another the Ancient Poetry (anthology) - Paripadal” of the Sangam period reveals to us the Creation Story, which is also some what similar to present day evolution theory.

 

"In the sky, the first element ether, formless,

 appeared with sound in the sky with primal seed.

 After many eons the second element, air, that moves

 all elements, appeared.  That was followed by the

 third element, red fire, that appeared out of the air.

 That was followed by water

 in the form of snow and cold rain.  Then came the

 earth"

 

[Paripadal 2:5-12]

 

Also Purananuru – 02, too says about five elements as:

 

"As the clay which holds the land,

the skies sit upon the land,

the air sweeps through the skies,

and encounters the water; like so,

is your nature of the five elements,"

 

All over the world we can find several tales on how man was created. Our origin was always a cause for controversy. But literature - wise, our collection of these stories is very rich in creativity and originality.

[Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna]

Part 18 Will follow

[Pictures attached:creation of man, Enkidu , Creation of Eve and creation in Hinduism]

 


0 comments:

Post a Comment