பண்டைய தமிழ் பாடல்களில் "விஞ்ஞானம்"{03 of 06}

ஒரு சிறு தொகுப்பு :பண்டைய  தமிழ் பாடல்களில்  "விஞ்ஞானம்"[பகுதி:01-06]
[Science in the Ancient Tamil Poetries  ]

[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
Compiled by: Kandiah Thillaivinayagalingam]


பகுதி:03 "அணு"

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த திருமூலர் சொல்லிய திருமந்திரப் பாடல்களிலிருந்து தமிழர்கள் எந்த அளவு அணு குறித்த ஞானம் உடையவர்கள்
என்பதை விளங்கிக்கொள்ளலாம்.
"அணுவில் அணுவினை ஆதிப் பிரானை
அணுவில் அணுவினை ஆயிரங் கூறிட்டு
அணுவில் அணுவை அணுகவல் லார்கட்கு
அணுவில் அணுவை அணுகலு மாமே"
                                          - திருமந்திரம் 2008 [ திருமூலர் ]
இதன் சுருக்கமான பொருள் "நுண்மையான சீவனுக்குள்ளேயும், அதி நுண்மையான அணுவுக்குள்ளும் அணுவாக ஆண்டவன் விளங்குகிறான்"நாட்டு வைத்தியர் தனது உதவியாளருக்குஅணு அளவு பாதரசம்சேர் என் கட்டளை இடுவார்.இதன் கருத்து மிக மிக சிறிய பகுதி என்பது. பின்னத்தில்[fraction] இது 1/165580800 ≈ 6.0393475572047000618429189857761e-09. ஆகும்[ நுண்மை,பொடி, சிறு துகள்கள்,இம்மி,ஆன்மா எனவும் பொருள் படும்]

"மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு
மேவிய கூறது ஆயிரம் ஆயினால்
ஆவியின் கூறுநா றாரயிரத்து ஒன்றே"
-ஆசான் திருமூலர்-

இவர் இங்கு குறிப்பிட்டுருப்பது சிவனுடைய (சீவன் என்ன சிவன் என்ன வேறில்லை - திருமூலர்) வடிவைச் சொல்ல வேண்டுமாயின் ஒரு பசுவின் முடியை(மயிரை) எடுத்து அதை நூறாகக் கூறிட்டு, பின்பு அதில் ஒன்றை எடுத்து ஆயிரமாகப் பிரித்து, பின் அதில் ஒன்றை நான்காயிரமாக பிரித்தால் அதில் ஒன்றே சிவனின் வடிவு என்று கூறி இருக்கிறார்.

இப்பொழுது நாம் விஞஞானம் சொல்வதைப் பார்ப்போம். ஒரு ஹைட்ரோஜென் (hydrogen) அணுவின் சுற்றளவு..

0 .000000212 mm - ஹைட்ரோஜென்

சரி இப்பொழுது நாம் திருமூலர் கூற்றுப்படி கணக்கிட்டு பார்போம். ஒரு மனிதனின் முடியானது 40 -80 மைக்ரோன் (micron) ஆக உள்ளது. பசுவின் முடியானது சிறிது அடர்தியாகவே இருக்கும். எனவே, நாம் 100 மைக்ரோன் என்றே வைத்துகொள்வோம்

மயிரின் சுற்றளவு = 100 மைக்ரோன்
(size of an hair = 100 micron )

100 மைக்ரோன் = 0.1 மில்லிமீட்டர்
(100 micron = 0.1 millimeter)
NB:The term micron and the symbol µ, representing the micrometre,A micrometre (or micrometer) is 1×10−6 of a metre (SI Standard prefix "micro" = 10−6) or one-thousandth of a millimetre, 0.001 mm, or about 0.000039 inches
இப்பொழுது திருமூலர் கூறியவாறு ஒரு முடியை நூறாக பிரிப்போம்

0.1/100 = 0.001 மில்லிமீட்டர் (MM)
அதில் ஒன்றை ஆயிரத்தில் வகுப்போம்

0.001/1000 = 0.000001 மில்லிமீட்டர் (MM)

இப்பொழுது நமக்குக் கிடைத்த பதிலை நாம் நான்காயிரத்தால் வகுத்தால் சிவனின் உருவத்தின் அளவைக் காணலாம் என்கிறார் திருமூலர்

0.000001/4000 = 0.00000000025 மில்லிமீட்டர் (MM)

ஆகவே, இவர் கடவுளின்(சிவனின்) அளவாக குறிப்பிடுவது சராசரியாக 0 .00000000025 மில்லிமீட்டர் (MM).

இப்பொழுது இந்தக் கடவுள் எனக் கருதப்படும் அளவானது, நாம் அறிவியல் ஆய்வாளர்களால் அளக்கப்பட்ட ஹைட்ரோஜென் (hydrogen) அணுவைவிட பன்மடங்கு சிறியதாக உள்ளது. சரி அதைவிடச் சிறியதாக என்ன இருக்கமுடியும் என்கிறிர்களா?... அதுதான் ஹிக்க்ஸ் போசோன் என்ற பெயரில் இன்றைய ஆய்வாளர்கள் தேடிக்கொண்டு இருப்பது  . நாம் பொதுவாக சொல்லுவோம் அவனின்றி ஒரு அணுவும் அசையாது என்று . இப்பொழுது ஹிக்க்ஸ் போசொனில் "Higgs boson" சொல்வதும் அணு தனியாகச் செயல் படவில்லை. அணுவுக்குள் அணு(பரமாணு) ஒன்று உள்ளது. அது தான் காட்ஸ் பார்ட்டிகள்"God particle" "கடவுள் துகள்" என்னும் போசோன் கண்டுபிடிப்பு. அதன் அளவு இன்னும் அறியப்படவில்லை.ஒரு காலத்தில் "கடவுள் துகள்" இன் அளவு அறியும் போது அதுதான் திருமூலர்  குறிப்பிட்ட   சிவனுடைய  வடிவமோ என அறிய நேரிடும்.

[தொடரும்......பகுதி:04 வாசிக்க அழுத்துங்கள்👉 Theebam.com: பண்டைய தமிழ் பாடல்களில் "விஞ்ஞானம்"[பகுதி:04 OF 06]


[ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக👉
Theebam.com: பண்டைய தமிழ் பாடல்களில் "விஞ்ஞானம் [01/06]]:

3 comments:

  1. நல் தகவல்கள் தரும் உங்கள் தொகுப்புத் தொடரட்டும்

    ReplyDelete
  2. இலக்கியத்தில் அணு என்று ஒரு சொல்லை எடுத்துத் தற்போது கண்டுபிடித்துள்ள atom துக்குப் பெயர் வைத்துவிட்டு இதுவும் அதுவும் ஒன்று என்று சொல்வது பிழை என்றுதான் இதுவரை நான் நினைத்திருந்தேன். ஆனால், இப்படி ஒரு அளவோடு கூடிய கணித விளக்கம் இருப்பது உண்மையில் ஆழ நோக்கவேண்டிய விடயம்தான். நன்று.

    ReplyDelete
  3. மேலும், அந்தப் போசானின் வடிவம் சடைமுடி கொண்ட பொன் மேனியை உடைய ஒரு மனித உருவத்தைக் கொண்டதாகவே கருதப்படுகின்றது. அதுவேதான் கண்ணுக்குப் புலப்படாத சிவனின் திரு உருவம்தான் என்று காண்க!

    ReplyDelete