கடைசியாக வந்த திரைப்படங்கள் எப்படி?


''நெஞ்சுக்கு நீதி'' விமர்சனம்

அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின்சுரேஷ் சக்கரவர்த்தி, ஆரி, இளவரசு, தன்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர் எனப் பலர் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரிக்க, திபு நின்னான் தாமஸ் இசையமைத்துள்ளார்.

சிறுமிகளை கற்பழித்து தூக்கில் தொங்கவிடும் வெறியர்களுக்கு எதிரான வழக்கை விசாரணை செய்யும் மாறனைச்  சுற்றி இருக்கும் சில காக்கி சட்டையும், சில கரை வேட்டியும் இந்த வழக்கை நேர்வழியில் உதயநிதியை நடத்தவிடாமல், முடிவுக்கு கொண்டுவர சூழ்ச்சி செய்கிறார்கள்.இவர்கள் செய்யும் சூழ்ச்சியில் இருந்த தப்பித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வாங்கி கொடுத்தாரா உதயநிதி? அந்த மூன்றாவது சிறுமிக்கு என்னவானது? இறுதியில் சட்டம் நீதியின் பக்கம் நின்றதா? என்பதே படத்தின் மீதி கதை.

மொத்தத்தில் அனைவரும் சமம் என்று கூறி, நீதியை வழங்கியுள்ளது நெஞ்சுக்கு நீதி. [3.5/5]

 

அக்கா குருவிவிமர்சனம்

புகழ் பெற்ற ஈரானிய இயக்குநரானமஜித் மஜிதி இயக்கி 1997-ம் ஆண்டு  பல உயரிய சர்வதேச விருதுகளையும் பெற்றஈரானியப் படத்தின் தமிழ் உருவாக்கம்தான் இப்படம்.

சாமியின் இயக்கத்தில், இளையராஜா இசையில், மதுரை முத்து தயாரிப்பில்  வெளியானது இப்  படம்.

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த தங்கையின், தொலைந்து போன  பாதணியை எப்படி அண்ணனும் தங்கையும்  கண்டு பிடிக்கிறார்கள் என்பதுதான் கதை.

குழந்தைகளுக்காக குடும்பத்துடன் பார்த்து மகிழலாம்.[3.5/5]


பூ சாண்டி வரான்விமர்சனம்

ஜே.கே.விக்கி இயக்கத்தில், டஸ்டின் ரிதுவன் ஷா இசையமைப்பில் அசல்இசம் பின் முகமது அலி ஓளிப்பதிவில், ரமணா, தினேஷ் சாரதி கிருஷ்ணன், லோகன் நாதன், கணேசன் மனோகரன், ஹம்சனி பெருமாள், வினோத் மோகன சுந்தரம், தினேசினி எனப் பலர் நடிப்பில் மலேசியாவில் வெளியானது.

 ஆவிகளுடன் பேச முற்பட்ட மூவரில் ஒருவர் ஆவியினால் கொல்லப்பட ரகசியத்தை தெரிந்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு அவரே பிரச்சனையில் சிக்கிக்கொண்டு  எப்படி மீண்டார் என்பதே கதை. அதாவது சிவனடியார் பூச்சாண்டியாக மாறிப்போன கதை.

பல திருப்பங்களோடு திரைக்கதையை நகர்த்தி இருப்பது படத்திற்கு பலம். மொத்தத்தில் 'பூ சாண்டி வரான்' தைரியசாலி.

தொகுப்பு:செ.மனுவேந்தன்0 comments:

Post a Comment