"உயிரின் உற்சவம் நீ"

 "அன்பு கொண்ட தோழியே!

அலுப்பு தட்டாத உன் காதலில்

அயர்ந்து தூங்கினாலும்,

அணைப்பில் மயங்கி உறங்கினாலும்,

குதூகலம் மறந்து நான் மௌனமாய் காதில் சொல்கிறேன்

'உயிரின் உற்சவம் நீ' என்று!"

 

"உனக்கு நன்றாக தெரியும்

என்னை ஊக்குவிக்க என்ன வேண்டும் என்று

அது மட்டும் அல்ல

என்ன சொல்லக்கூடாது என்பதும் உனக்கு புரியும்

எனது மிகப்பெரிய ஆதரவாளர் நீ ஒருத்தியே!"

 

"நான் எதை செய்தாலும்

என் சிறந்ததைக் கொடுக்க எப்போதும்

துணை நிற்கிறாய்!

நான் ஒரு புதிய சவாலை ஏற்றுக்கொள்ளும் பொழுது,

'நீங்கள் நன்றாக செய்வீர்கள்'

என தட்டி கொடுக்கிறாய்!

'என் வாழ்வில் வழிகாட்டும் ஒளி நீ'

ஒருவளே!"

 

"ஒவ்வொரு நாளும் ஒன்றாக நேரத்தை செலவிட

எப்போதும் நேரம் ஒதுக்குகிறாய்!

வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும் என்று

திறந்த மனத்துடன்

ஏற்றுக்கொள்ளும் இதயத்துடன்

மகிழ்ச்சியாக

என்னை ஆசீர்வதிக்கிறாய்!"

 

"உடலின் வலிமை நீ

செயலின் விளைவு நீ

அன்பின் உருவம் நீ

எண்ணத்தின் கரு நீ

என்னை ஆளாகும் தெய்வம் நீ

உயிரின்  கொண்டாட்டம் நீ

நீ இல்லையேல்

நானே இல்லை!"

 

:-[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

0 comments:

Post a Comment