குறுங்கவிதைகள்



"மடிமேல் மலரொன்று… "

 

"மடிமேல் மலரொன்று மலர்ந்து மகிழ்ந்து

மந்திரம் சொல்லி          மயக்கம் தர ..

மருண்ட விழியில்           மனதை பறிகொடுத்து

மழலைமொழி பேசி       மறந்தேன் என்னையே !

 

"பாசம் கொண்ட                பாலகன் இவனை

கட்டி பிடித்து                       கன்னத்தில் முத்தமிட ..

அம்மா என்று                      அவன் அழைத்து

மார்பில் சாய                      மாதவம் செய்தேன்!"

 

"காதல்"

 

"கண்ணுக்கு தெரியாத எரியும் நெருப்பே !

காண முடியாத வலிக்கும் காயமே !

காயப் படுத்தாத பொங்கும் உணர்வே !

இருவரையும் இணைக்கும் திருப்தியற்ற திருப்தியே !

மலர்கள் பரிமாறும் 'காதல்' நட்பு !!

 

"நிழலில்லாத வெட்டவெளி"

[அந்தாதிக் கவிதை]

 

"நிழலில்லாத வெட்டவெளி இருளான அமைதி

அமைதி தருவதோ வெளிச்சமான நிம்மதி

நிம்மதி உதித்தால் மலர்வதோ மகிழ்வு

மகிழ்வே உயர்ச்சிக்கும்  ஊக்கத்திற்கும்  காரணம்

காரணம் இல்லாமல் வாழ்வு அமையாது

அமைவது எல்லாம் சரியாக நடக்காது

நடப்பதை அறிந்து பின்பற்ற வேண்டும்

வேண்டாதது தனிமையது நிழலில்லாத வெட்டவெளி!"

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

 

 

 

1 comments:

  1. மிக்க அற்புதமான வரிகள் யதார்த்தமானவை

    ReplyDelete