[Science in the Ancient
Tamil Poetries ]
[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
Compiled by: Kandiah
Thillaivinayagalingam]
பகுதி:04 "மழையும் வானவில்லும்"
மழையின் தோற்றம்:
திருவெம்பாவை-16:
என்னைத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள்
மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்
பொன்னம் சிலம்பின் சிலம்பித் திருப்புருவம்
என்னைச் சிலை குலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னில் பிரிவிலா எம்கோமான் அன்பர்க்கு
முன்னியவள் நமக்கு முன்சுரக்கும் இன்னரு ளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்."
பொருள்:
இந்தக் கடல் நீர் முழுவதையும் முன்னதாகவே குடித்து விட்டு மேலே சென்ற மேகங்கள் எங்கள் சிவனின் தேவியான பார்வதிதேவியைப் போல் கருத்திருக்கின்றன. எங்களை ஆளும் அந்த ஈஸ்வரியின் சிற்றிடை போல் மின்னல் வெட்டுகிறது. எங்கள் தலைவியான அவளது திருவடியில் அணிந்துள்ள பொற்சிலம்புகள் எழுப்பும் ஒலியைப் போல இடி முழங்குகிறது. அவளது புருவம் போல் வானவில் முளைக்கிறது. நம்மை ஆட்கொண்டவளும், எங்கள் இறைவனாகிய சிவனை விட்டு பிரியாதவளுமான அந்த தேவி, தன் கணவரை வணங்கும் பக்தர்களுக்கு சுரக்கின்ற அருளைப் போல. மழையே நீ விடாமல் பொழிவாயாக.
வானவில்லின் தோற்றம் :
நீலகேசி /684:
தானுடம் போடு பொறியின னாதலிற் சாதகனா
மீனடைந் தோடும் விடுசுட ரான்கதிர் வீழ்புயன்மேற்
றானடைந் தாற்றனு வாமிது வாமதன் றத்துவமே."
[வானிடு
வில் = வானவில், சுடரான் = சுடரோன் =சூரியன் . கதிர் = சூரிய ஒளி
கதிர் , வீழ்புயன்மேற் = நீர் மேகத்திற் மேல்
]
[தொடரும்]
அன்னியர் ஆதிக்கங்களும்,ஆளும் அரசற்ற நிலையும் எம்மினத்தின் திறைமைகள் முடங்கி விட்டன.அவற்றினை வெளிக்கொணரும் உங்கள் தொகுப்புக்கள் வரவேற்கப்படவேண்டியவை.
ReplyDeleteநன்னாய் சொன்னீங்கோ!
ReplyDelete