சித்தர் சிந்திய முத்துக்களில் ........3/22

 


சிவவாக்கியம்-131


சாவதான தத்துவச் சடங்கு செய்யும் ஊமைகாள்
தேவர் கல்லும் ஆவரோ சிரிப்பதன்றி என் செய்வேன்
மூவராலும் அறியொணாத முக்கணன் முதற்கொழுந்து
காவலாக உம்முளே கலந்திருப்பன் காணுமே!!

ஒன்றுக்கும் உதவாத தத்துவச் சடங்குகள் செய்து செத்துப் போகும், உண்மையை உணராத ஊமை மனிதர்களே!! வெறும் கல்லுக்கு செய்யும் சடங்குகள் இறைவனைச் சேருமோ? எல்லாம் படைத்த ஈசன் கல்லாகவா இருப்பான்!!! இதைக் கண்டு சிரிக்காமல் வேறு என்ன செய்வேன். அறிவு, உணர்வு, நினைவு என்ற மூன்றாலும் அறிய முடியாத முக்கண்ணனான ஈசனின் முதல் பிள்ளையான கணேசன் உனக்குக் காவலாக உனக்குள்ளேயே பிண்டக்கல்லாக கலந்திருப்பதை கண்டு தியானம் செய்யுங்கள்.
******************************************* 

சிவவாக்கியம்-132


காலை மாலை நீரிலே முழுகும் அந்த மூடர்காள்
காலை மாலை நீரிலே கிடந்த தேரை என் பெறும்
காலமே எழுந்திருந்து கண்கள் மூன்றில் ஒன்றினால்
மூலமே நினைப்பிராகில் முத்தி சித்தி யாகுமே!!!

காலையும் மாலையும் மனச்சுத்தம் செய்யத் தெரியாமல் உடல் சுத்தம் மட்டுமே செய்து நீரில் மூழ்கி குளித்துவிட்டு மோட்சம் அடைவோம் எனக்கூறும் மூடர்களே!!! எப்போதும் நீரிலேயே வாழும் தவளையால் முத்தி அடைய முடியுமா? அதிகாலையிலே எழுந்து தியானம் செய்து மூன்றாவது கண்ணாகிய புருவமத்தியில் ஒன்றி யோக ஞானப் பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சக்தியை வாசியால் மேலேற்றி மெய்ப் பொருளை நினைத்து தியானித்து இருப்பிராகில் அதுவே முத்தி அடைவதற்கும், சித்தி பெறுதற்கும் வழியாகும்.
******************************************* 

சிவவாக்கியம்-133


எங்கள் தேவர் உங்கள் தேவர் என்றிரண்டு தேவரோ
இங்கு மங்குமாய் இரண்டு தேவரே இருப்பாரோ 
அங்கும் இங்கும் ஆகிநின்ற ஆதிமூர்த்தி ஒன்றலோ
வங்கவாரம் சொன்ன பேர்கள் வாய் புழுத்து மாள்வரே!!!

எங்கள் கடவுள் இது என்றும் உங்கள் கடவுள் அது என்றும் இரண்டு கடவுளா இருக்கின்றது? இங்கொன்றும் அங்கொன்றும் இரண்டு தெய்வம் இருக்குமா? அங்கும் இங்கும் எல்லாமாய் ஆகி நின்ற ஆதிமூர்த்தியான சிவம் ஒன்றல்லவா, எங்கும் உள்ள ஒரே கடவுள். இது பெரியது என்றும் உங்களது சிறியது என்றும் கூறி இறைவனின் உண்மையை உணராது வாதம் பேசுபவர்கள் வாய்புழுத்து மாள்வார்கள்.

 

********************அன்புடன் கே எம் தர்மா.

நாகரீக க்கோமாளிகள் :ம்பதாயிரம் சம்பளம் என்பதால்
அம்மாவை மாற்ற தேவையில்லை
ஆங்கிலம் பேச தெரிந்தவர்கள் எல்லாம்
ஆகாயத்தில் இருந்து வந்தவரில்லை.

காலை வணக்கம் வார்த்தை எல்லாம்
கடல் கடந்து சென்றது
Good Morning என்ற வார்த்தையில் தான்
பல குடும்பம் விழிக்குது .

F...k என்ற கெட்ட வார்த்தை கூட
பெருமை பொங்க சொல்வர்..
ஒருவன்  ... என்று ஆரம்பித்தால் மட்டும்
ஒழுக்கம் இல்லாதவன்  என்பர்.

ந்நிய உணவில் தனி ருசிதான்
அதில் ஒன்றும் தவறில்லை
ஆயின் வறண்ட ரொட்டியை
தின்னக் கூட வறட்டு கவுரவம் என்ன?

த்து வரியை படிக்க சொன்னால்
பல்லை இளித்து காட்டுவார்
ஆயினும் ஆங்கில நாளிதழ் கையில் 
வைத்து அறிவாளி வேடம் போடுவார்.

முறுக்கும் சீடையும் கையில் தந்தால்
அலட்சியம் செய்து போவார்.
ஒரு  Lay's வாங்கி  கொண்டு
கோமான் போல திரிவார்..

நாகரீக பெண்கள் நடக்கும் விதத்தில்
அலப்பறை அதிகமாய் மின்னும்
நாலு வரி பேச தெரிந்துவிட்டால்
மனதில்  சேக்சுபியர்  என்று எண்ணம்.

பாரதி கவிதை பைந்தமிழ் நூலை
புரியாதவர் போல படிப்பார்..
Harry Potter  வாங்கி வைத்து
மேதாவி போல நடிப்பார்..

ண்பா தோழா என்பதை
பழமை சாயம் பூசுவார்
Bro Dude என்பதை எல்லாம்
புரியாமலே பேசுவார்

ன்பெனும் அம்மா
Mummy  ஆனது
அழகிய தமிழ்மொழி
Dummyஆனது
ஆங்கிலம் என்பது
பெருமையானது-அதை 
நீங்கள் அலட்டிக்கொள்வது
மடமையானது.

ரசியலில் தான் விடுதலை பெற்றோம்
நம் அடிமை தனம் இன்னும் போகவில்லை
வளர்ச்சிக்கு தான் ஆங்கிலம்
அதை கவர்ச்சியாய் காட்டத் தேவையில்லை.

பெருமைக்கு பேசுவதை
குறைத்து கொள்ளுங்கள்
நம் பெருமை எல்லாம்
தமிழ்தான் உரைத்து சொல்லுங்கள் .


_ நன்றி:வை . நடராஜன்

இவ்வாரம் வெளியான படங்களும் கதையின் சாரமும்...படம் :'குட்டி ஸ்டோரி' 

நடிகர்கள்:விஜய் சேதுபதி, அதிதி பாலன்,கெளதம் மேனன்

அமலா பால், வருண்,சாக்ஷி அகர்வால்,அமிதாஷ் பிரதான்,

மேகா ஆகாஷ், ரோபோ ஷங்கர்

இயக்கம்: வெங்கட் பிரபு

வெளியீடு : 12 பெப்ருவரி 2021

4 குட்டிக் கதைகளின் கரு:

 எதிர்பாரா முத்தம்’:ஆணும் பெண்ணும் நண்பர்களாக ஏன் பழக முடியாது என்று பழகியவர்கள் ,அதுவும் காதல் தான் என்று முடித்துவிடுகிறார்கள்

அவனும் நானும்’:  தன் பெண்மையினை பரிசோதிக்கப் போய் கருவினைச் சுமந்துவந்த  ஒரு அப்பாவிப் பெண் அக்கருவினைப்  காப்பாற்றப் போராடும் கதை.

லோகம்’: ஒரு வீடியோ கேம் ஊடாக ஒரு காதல் மலர்வதை அனிமேஷன் படம் மூலம் காட்டியுள்ளார்கள்.

 ஆடல்-பாடல்’: கணவனின் கள்ளத்தொடர்பினை  தனது கில்லாடித்தனத்தின் மூலம் சண்டைக்களமாக்கி முடிவினை தமாஷாக்கிய மனைவியின் கதை.

படம்: 'பாரிஸ் ஜெயராஜ்'

நடிகர்கள்: சந்தானம், அனைகா சோட்டி, சஷ்டிகா ராஜேந்திரன்,  சந்தோஷ் நாராயணன், சாண்டி மாஸ்டர், ஆர் எஸ் ஷிவாஜி, பிருதிவ் ராஜ், ஜார்ஜ் விஷ்ணு

இயக்கம்: ஜான்சன் கே

கதையின் கரு:காதலும், அதை உடைக்க சதி செய்யும் காதலியின் தந்தையும் -பல்லாயிரம் முறை அரைத்த மாவு.

வெளியீடு :12 பெப்ருவரி 2021

படம்:நானும் சிங்கள் தான்

நடிகர்கள்: தினேஷ், தீப்தி, மொட்டை ராஜேந்திரன், மனோபாலா

இயக்கம்: ஆர் கோபி

கதையின் கரு: மற்றவர்கள் போல் ஒரு காதல் கதையை எடுப்பதாக எண்ணி ,அபத்தமான காட்சிகளும் ,இரட்டை அர்த்தம் உள்ள கொச்சை  வசனங்களுடன் உச்சரிக்க தடுமாறும் நாயகனை வைத்துப் பழகியதுபோல் ஒரு படம்

வெளியீடு :12 பெப்ருவரி 2021

படம்: C/O காதல்

நடிகர்கள்: தீபன்-சோனியா கிரி, வெற்றி-மும்தாஸ் சர்கார், கார்த்திக் ரத்தினம்-ஆர்யா பாலக், மாஸ்டர் நிஷ்னேஷ்-பேபி ஸ்வேதா

இயக்கம்: ஹேமம்பர் ஜஸ்டி

கதையின் கரு:நான்கு காதல்கள்.. நான்கிற்கும் நான்குவிதமான பிரச்சனைகள்.. அப்படி என்ன பிரச்சனைகள், இதில் எந்த காதல் கைகூடியது என்பதுதான் இந்தப்படத்தின் கதை.

வெளியீடு :12 பெப்ருவரி 2021

படம்: ஏலே 

நடிகர்கள்:சமுத்திரக்கனி, கே. மணிகண்டன், இலங்கை மதுமதி

இயக்கம்:ஹலீதா ஷமீம்

 கதையின் கரு:தந்தை, மகன் உறவை மையப்படுத்தி ,நகைச்சுவை கலந்த கதை.

வெளியீடு :12 பெப்ருவரி 2021

படம்:ஆட்கள் தேவை

நடிகர்கள்: சக்தி சிவன், மைம் கோபி, ஜீவா

இயக்கம்: சக்தி சிவன்

 கதையின் கரு:பெண்களை கடத்தி, போதை மருந்தை கொடுத்து பாலியல் கொடுமைகள் செய்யும் கும்பலிடம் தனது காதலியை மீட்டெ டுக்கும் [ ஏற்கனவே பலமுறை வந்த] கதையினை மையமாகக் கொண்டது.

வெளியீடு :5பெப்ருவரி 2021

தொகுப்பு-செ.மனுவேந்தன்