திரையில் -வந்ததும் ,வர இருப்பதுவும்....ஜனவரி 2021 வந்த  திரைப்படங்கள்

 

படம்: புலிக்குத்தி பாண்டி. 

நடிகர்கள்:விக்ரம்பிரபுலட்சுமிமேனன்நாசர்ரேகா.

இயக்கம்: முத்தையா.

வெளியீடு : 15 ஜனவரி 2021

கதையின் கரு:சண்டை ,சச்சரவு கொண்டு பலமுறையும்  கோர்ட், போலீஸ் ஸ்டேஷனுக்கு என்றும் அலைந்து கொண்டிருக்கும் ஹீரோவை திருத்தி, குடும்ப வாழ்க்கையை வாழவைக்கும் மனைவியாக ஹீரோயின்.

கருத்து: வன்முறையின் உச்சம். கத்தியும், இரத்தமும் தூள் கிளப்புது.வேற வேலையில்லாத பெண். உலகில் வேறு ஒரு நல்ல மனுசனுமில்லாமல் , ஒரு கிரிமினலை திருத்தி வாழப்போறாளாம்.

படம்: பூமி.

 நடிகர்கள் : ஜெயம் ரவி, நிதி அகர்வால், தம்பி இராமையா, சரண்யா, மாரிமுத்து 

 இயக்கம்: லக்ஷ்மன், வெளியீடு : 14 ஜனவரி 2021,

கதையின் கரு:விவசாய நிலங்களை வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் அபகரித்து வருவதை அறிந்து அதற்காக குரல் கொடுத்து ,விவசாயிகளுக்காகப் போராடும் ஒரு நாயகனின் கதை.

கருத்து: ஊருக்கு உபதேசம்.உனக்கில்லையடி என்பது போல் வெளிநாட்டின் ஓ டி டி தளத்தின் மூலமே படம் வெளியிடப்பட்டது. 

 படம்:ஈஸ்வரன்.

 நடிகர்கள் : சிலம்பரசன், நிதி அகர்வால், பாரதிராஜா, நந்திதா ஸ்வேதா, கண்ணன், பாலசரவணன் 

இயக்கம்:  சுசீந்திரன் .

 வெளியீடு : 14 ஜனவரி 2021

கதையின் கரு: தந்தையால்  சிறை சென்ற ஒருவரின் மூலம் குடும்பத்திற்கு வந்த ஆபத்தில் இருந்து குடும்பத்தை  காப்பாற்ற போராடும் மகனின் கதை.

கருத்து: 2மணி நேர படத்தில் சண்டை 40 நிமிடங்கள், 3 பாடல் கழிய மீதி மணிக்காட்சியில் அழுத்தமான காட்சிகள்  மிகக்  குறைவு. 

 படம்:மாஸ்டர் 

நடிகர்கள் :விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா, சாந்தனு பாக்யராஜ், ஸ்ரீமன்.

இயக்கம்: லோகேஷ் கனகராஜ்

வெளியீடு :13 ஜனவரி 2021

கதையின்கரு: சீர்திருத்தப் பள்ளி மாணவர்களை கெடுத்து அடியாட்களாக்கி ,அடிமைகளாக நடாத்தும் ஒரு தாதாவிடமிருந்து மாணவர்களை காப்பாற்றும் ஒரு நாயகனின் கதை.

கருத்து: குடியில் தள்ளாடும் ஒரு மாஸ்ரர் மாணவர்களால்  மதிக்கப்படுகிறாராம். தமிழை அழித்து வரும் திரையின் அடுத்த பரிணாம வளர்சியாக மாஸ்டருக்கு ஆங்கில பாடல் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.

  

படம்:மாறா. 

நடிகர்கள் :ஆர் மாதவன், சிரத்தா ஸ்ரீநாத், சுஷிவதா, மௌலி, எம் எஸ் பாஸ்கர், ஆர் எஸ் சிவாஜி. 

இயக்கம்: திலீப் குமார்

வெளியீடு :  08 ஜனவரி 2021,

கதையின்கரு:  பார்வதி, தான் சிறுவயதில் கேட்டறிந்த கதையை எதிர்பாராத இடத்தில் ஓவியமாகப் பார்த்துத் திகைக்கிறாள். அந்தக் கதை அவனுக்கு எப்படித் தெரிந்தது என்று  ஓவியனைத் தேடிச் செல்லும் பயணத்தில் அவள்  சந்திக்கும் காதலே கதை.

கருத்து: இங்கிலிஷ் பட நடிகர்கள் மாதிரி வாயை திறவாமல் பேசி நடிக்க இது ஆங்கிலமொழிப் படம் அல்ல.அவர்கள் ஆங்கிலம் பேசுவது போல் பேச எண்ணி  தொண்டைக்குள் குரலை வைத்துக் கரகரக்கிறார்கள். பேசுவது புரியவில்லை. இதே போலவே அண்மையில் வந்த பென்குயின் படமும்.


வரவிருக்கும் திரைப்படங்கள் 

படம்:கபடதாரி

நடிகர்கள் :சிபிராஜ், நந்திதா ஸ்வேதா, நாசர், ஜெயப்பிரகாஷ், பூஜாகுமார்.

இயக்கம்: பிரதீப் கிருஷ்ணமூர்த்தி

வெளியீடு :  28 ஜனவரி 2021 

படம்:ஆள் அம்பு சேனை

நடிகர்கள் :வினை ராய்

இயக்கம்: சரண்

வெளியீடு :  ஜனவரி 2021

படம்:நரகாசூரன்

நடிகர்கள் :அர்விந்த் சுவாமி, ஸ்ரேயா சரண், இந்திரஜித், ஆத்மீகா, கிட்டி.

இயக்கம்: கார்த்திக் நரேன்

வெளியீடு : ஜனவரி 2021

படம்:பரமபதம் விளையாட்டு

நடிகர்கள் :திரிஷா கிருஷ்ணன், நந்தா, வேலராமமூர்த்தி, ஏ எல் அழகப்பன், சாம்ஸ்.

இயக்கம்: திருஞானம்

வெளியீடு : ஜனவரி 2021


📂செ.மனுவேந்தன்⸎ 
0 comments:

Post a Comment