திரைக்கு பெப்ரவரியில் வந்த/வரவிருக்கும் திரைப்படங்கள்பெப்ருவரியில் திரைக்கு வந்த படங்கள் 

 

‘’களத்தில் சந்திப்போம்’’

 நடிகர்கள்: அருள்நிதி, ஜீவா, மஞ்சிமா மோகன், ப்ரியா பவானி ஷங்கர்

இயக்கம்: ராஜசேகர்

வெளியீடு : 05 Feb 2021

கதையின் கரு : ஜீவாவும் அருள்நிதியும் கபடி களத்தில் எதிரெதிர் அணியில் மோதுபவர்கள். களத்துக்கு வெளியே ஒருவருக்கொருவர் தோள் கொடுக்கும் உயிர் தோழர்கள். இவர்கள் இருவர்களின் வாழ்க்கையில் காதல், திருமணம் என்கிற கட்டம் வரும்போது அரங்கேறும் குழப்பங்கள், அது இவர்கள் நட்பை பாதிக்கும் விதம், அதிலிருந்து இவர்கள் இருவரும் மீண்டு வருவதே கதை. கலகலப்புக்காகப் பார்க்கலாம்.


‘’ட்ரிப்’’

நடிகர்கள்: யோகி பாபு, கருணாகரன்

இயக்கம்: டென்னிஸ் மஞ்சுநாத்

வெளியீடு: 05 Feb 2021

கதையின் கரு : பேய்ப்படங்களிற்குப் பதிலாக  - , மலைப் பகுதியினைச் சுற்றிப் பார்க்க வரும் நண்பர்களில்  ஒருவர் காணாமல் போக ,அங்கு சந்திக்கும் யோகிபாபு,கருணாகரன் மேல் வீழ்ந்த சந்தேகம் கொண்ட நண்பர்களின் மீட்புப் போராட்டமும் , மேலும் இரு நண்பர்களின் இழப்பும் இறுதியில் அங்கு வாழும் மனித மாமிசம் உண்ணுவோர் காரணமாக கதை முடிகிறது.பொறுமை உள்ளோர், பொழுது போகலை  என்றால் பார்க்கலாம்.

 

‘’சிதம்பரம் ரயில்வேகேட்’’

நடிகர்கள்: அன்பு மயில்சாமி, மகேந்திரன், நீரஜா, காயத்ரி, ரேகா, சூப்பர் சுப்பராயன், பாலா சரவணன்

இயக்கம்: சிவ பாலன்

வெளியீடு : 05 Feb 2021

கதையின் கரு : இளம்ஜோடிகளுக்கு இடையே நடந்த காதல், இரண்டு நண்பர்கள் உயிருக்குயிரான நட்பை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 1980ம் ஆண்டு உண்மைச்  சம்பவத்தினை  கதையாக கொண்ட படம்.


''கபடதாரி''

நடிகர்கள்: சிபிராஜ்நந்திதாநாசர்ஜெயபிரகாஷ் 

வெளியீடு: 29 ஜன.2021

இயக்கம்: பிரதீப் கிருஷ்ணமூர்த்தி

கதையின் கரு: 40 வருடங்களுக்கு முன் கொலை செய்யப்பட எலும்புக்கூடுகள் மர்மத்தினைத் துப்பறியும் ஒரு கதாநாயகனின் கதை. ஒரு கன்னட படத்தின் தமிழ் வடிவமே இப்படம்.


திரைக்கு வரவிருக்கும் படங்கள் 

 

‘’C/O காதல்’’

 நடிகர்கள்: வெற்றி

இயக்கம்: ஹேமம்பர் ஜஸ்டி

வெளியீடு: 12 பெப். 2021


‘’பாரிஸ் ஜெயராஜ்’’

நடிகர்கள் : சந்தானம், அனைகா சோட்டி

இயக்கம்: ஜான்சன் கே

வெளியீடு: 12 பெப். 2021

 

‘’குட்டி ஸ்டோரி’’

நடிகர்கள் : விஜய் சேதுபதி, அதிதி பாலன்

இயக்கம்: வெங்கட் பிரபு, கெளதம் மேனன், ஏ எல் விஜய்

வெளியீடு: 12 பெப். 2021

 

‘’நானும் சிங்கள் தான்’’

நடிகர்கள்: தினேஷ், தீப்தி

இயக்கம்: ஆர் கோபி

வெளியீடு: 12 பெப். 2021

 

‘’ஏலே’’

நடிகர்கள்: சமுத்திரக்கனி, கே. மணிகண்டன்

இயக்கம்: ஹலீதா ஷமீம்

வெளியீடு: 12 பெப். 2021

தொகுப்பு :செ.மனுவேந்தன் 

0 comments:

Post a Comment