பகுதி/PART:03"A": இறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும்/Death & Its Beliefs of Tamils:

[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்Compiled by: Kandiah Thillaivinayagalingam]

""மதமும் மரணமும்""RELIGION & DEATH"[கிறிஸ்தவ மதம் & இஸ்லாம்]

மரணத்தில் இருந்து எவருமே தப்பமுடியாது என்பதை எல்லா சமயங்களும் ஏற்று கொண்டதுடன் அதற்கு பதிலாக நல்ல மாற்று வழியாக  மறுமை 
(இறப்புக்கு பின் உள்ள வாழ்க்கை) நம்பிக்கையை  கொடுத்துள்ளது .இது,இந்த எண்ணம், தமது அன்புக்கு உரியவர்களை இழந்த பலருக்கும்,  மரணத்தை எதிர்பார்த்து இருப்பவர்களுக்கும்  ஒரு ஆறுதல் கொடுப்பதுடன் ,ஆனால்  மற்றவர்களுக்கு: "ஏன்,எதற்கு  மரணம் இருக்கிறது?" "எல்லாம் வல்ல கடவுளால் மரணத்தை இல்லாமல் செய்ய முடியாதா?" "எல்லா உயிர்களும்  இயற்கையாக ஏன் சதாகாலமும் வாழமுடியாது?" போன்ற கேள்விகளுடன்  ஆச்சரியமடைய வைக்கிறது.

மரணமும் சமயமும் இயற்கையாகவே ஒன்றுடன் ஒன்று தொடர்புடையன.நாம் இறந்த பின் ஏதாவது ஒன்று எமக்காக காத்திருக்குது என்றால், இயற்கைமுறைக்குளடங்காத,கடவுள் மாதிரியான ஒருவர்[supernatural being like a god ] அதில்   ஈடுபடவேண்டும்.ஆகவே  நாம்  சமய விரிவுரையை/பாடத்தை[religious texts], மரணத்தை பற்றிய  தகவல் அறிய பார்க்க வேண்டும் 

3000-4000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பண்டைய தமிழர்கள் ஒருவித இயற்கை வழிபாட்டையே பின்பற்றின போதிலும்,அதன் பின் மெகாலிதிக் கற்காலத்தில்[megalithic period]  தாய் தெய்வ வழிபாட்டுடன்,கல்லில் கடவுளுக்கு புற உருவங்கொடுத்து ,மரணம் ,மூதையார்கள்  வழிபாட்டு மரபுகளுக்கு அதி முக்கியம்  கொடுத்த போதிலும்,சங்க காலத்தில் (இது மெகாலிதிக் கற்காலத்துக்கு பின்னானது),சேயோன் ,மாயோன்,கொற்றவை, ஐயனார் போன்ற  குலமரபு தெய்வங்கள்[tribal gods] இருந்த போதிலும் ,அதன் பின் சிவாவை முழுமுதற் கடவுளாக ஏற்ற சைவர்களாக ,பக்தி காலம் வரை தொடர்ந்தார்கள் .அதன் பின்  உலக செல்வாக்கினால் சில தமிழர்கள்  இஸ்லாமிய,கிருஸ்துவ மதங்களுக்கு மாறினார்கள் .இப்பொழுது 88% இன்னும் சைவத்திலும் 12% மற்ற இரு மதங்களிலும் பொதுவாக இருக்கிறார்கள். 

ஆகவே இன்று பல சமய வாக்கியங்கள்[பாடங்கள்/texts] எம்மிடையில் இருக்கின்றன .அனைத்து கொள்கைகளும், மதங்களும் மரணத்தை ஏற்றுக்கொண்டாலும், அவை எல்லாம் மரணத்தைப்பற்றி ஒரே மாதிரி சொல்லவில்லை. மரணத்தைப்பற்றி பல  அபிப்பிராயம் அங்கு நிலவுகிறது.மரணத்திற்குப் பின் உள்ள நிலை சம்பந்தமாக மாறுபட்ட பல கருத்துக்களைக் கொண்டிருக்கின்றன.ஆகவே எப்படி எங்களுக்கு தெரியும் ,எந்த நூல்,எம்மை சரியாக வழிகாட்டும்  என்று ?


கிறிஸ்தவ மதம் மறுபிறப்பு என்று குறிப்பாகச் சொல்லா விட்டாலும்,ஒருவரின் கடவுள் நம்பிக்கை ,கடவுள் நம்பிக்கையின்மை என்பவற்றை பொறுத்தும்,அவரின் இவ்வுலக நடத்தையை பொருத்தும்,அவரின் மறுமை சொர்க்கத்திலா அல்லது நரகத்திலா என்பது தீர்மானிக்கப்படும் என உறுதிபடச் சொல்கிறது.

அதாவது கிருஸ்துவர்கள் ஒரு மறுமை இருக்கிறது என்பதை நம்புகிறார்கள்.உடம்பு இறந்து அதுஎரிக்கப்பட்ட்டாலும், புதைக்கப்பட்டாலும், தங்களது  தனித்தன்மை வாய்ந்த ஆன்மா[unique soul/உயிர்] தொடர்ந்து வாழ்கிறது என்றும்,அது கடவுளினால் புது வாழ்விற்கு உயிரோடெழுப்பப்படுவர் [raised]  எனவும்  நம்புகின்றனர்.

சிலுவையில் அறையப்பட்டு[crucifixion] மூன்று நாட்களின் பின் இயேசு  இறப்பில் இருந்து எழும்பியது,எல்லா கிறிஸ்தவர்களுக்கும் ஒரு நம்பிக்கையை கொடுக்கிறது.அதாவது இயேசுவின் போதனையை பின்பற்றுவதுடன் அவரை இறைவனாகவும் இரட்சகராகவும்[their Lord and Saviour] ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில்,இந்த புதிய உயிர்த்தெழுதல்[resurrection] தமக்கும் காத்திருக்கிறது என்று.

இயேசு அவளை நோக்கி: "நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;"
யோவான் 11:25-26

தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார்.
யோவான் 3:16

இவ்வுலகில் செய்த நன்மைகளுக்கும் தீமைகளுக்கும் கூலி வழங்கப்படக்கூடிய நாளை, அல் குர்ஆன் "இறுதித்தீர்ப்பு நாள்"[a day of judgment] என்று அறிமுகப்படுத்துகின்றது,அந்த நாளில் இறந்த உயிர்கள் எல்லாவற்றிற்கும் மனிதனின் இவ்வுலக வாழ்க்கை தான் அவனுக்கு சுவர்க்கமா? நரகமா? என்பதைத் தீர்மானிக்கும் என்கிறது இஸ்லாம்.அது மறுபிறப்பு என்பதை முற்றாக மறுக்கிறது.

குர்ஆன் அல்லது  இஸ்லாத்தின் திருமறையின்  முக்கியமான கோட்பாடு[மையமான கொள்கை]"இறுதித்தீர்ப்பு நாள்".அன்று உலகம் முழுவதும் அழிக்கப்பட்டு,எல்லா மக்களும் எல்லா  ஜின்களும்[jinn/genie:spiritual creatures mentioned in the Qur'an ] இறப்பில் இருந்து உயிரோடெழுப்பப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும். ஜின்கள்:என்பது நாம் வாழும் பூமியில் நமது பார்வைக்கு புலப்படாத ஒரு உயிரினம்.அது  நம்மைச் சுற்றி வாழ்ந்து கொண்டிருக்கிறது.அதாவது  ஜின் என்பது இஸ்லாமிய வழக்கில் சிறு தெய்வ உரு அல்லது  (இஸ்லாமிய புராணத்தில்)கூளி[பேய்; தீய ஆவி]ஆகும்.  

சுட்ட மண் பாண்டங்களைப் போல (தட்டினால்) சப்தம் உண்டாகும், களி மண்ணில் இருந்து (அல்லாஹ்வாகிய) அவன் மனிதனைப் படைத்தான். அதற்கு முன்னரே (சூடான) நெருப்புக் கொழுந்தில் இருந்து ஜின்களைப் படைத்தான்.(அல்குர்ஆன் 55:14-15, 15:26,27) 

இறுதி தீர்ப்பு நாள் வரை,புதைகுழியில்  இறந்த, காலஞ் சென்ற ஆன்மா/உயிர்கள் தமது உயிர்த்தெழுதலுக்காக காத்திருக்கின்றன.எப்படியாயினும்  அவைகள் தமது விதி அல்லது  தீர்ப்பை உணர்கிறார்கள்.அதாவது நரகத்திற்கு போகிறவர்கள் அங்கு,புதைகுழியில் அவதிப்படுகிறார்கள்.சொர்க்கத்திற்கு போகிறவர்கள் அங்கு அமைதியாய் இருக்கிறார்கள். 

சொர்க்கத்திற்கு நரகத்தின் மேலால் செல்லும் ஒரு ஒடுங்கிய பாலத்தினூடாக இறுதி தீர்ப்பு நாள் அன்று செல்வது போல விவரிக்கலாம்.தமது தீய செயல்களின் சுமையினால்,பாலத்தில் இருந்து விழுந்தவர்கள் அந்த நரகத்தில் எல்லாக் காலத்துக்கம் அங்கேயே இருப்பார்கள்.என்றாலும்  குர்ஆன் இரு விதிவிலக்குகளை கூறுகிறது.

3:169. அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களை மரித்தவர்கள் என்று நிச்சயமாக எண்ணாதீர்கள் - தம் ரப்பினிடத்தில் அவர்கள் உயிருடனேயே இருக்கிறார்கள் - (அவனால்) அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள்.

2:159. நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும் - அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும் - யார் மறைக்கின்றார்களோ, நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான்;. மேலும் அவர்களைச் சபிப்ப(தற்கு உரிமை உடைய)வர்களும் சபிக்கிறார்கள்.

பகுதி/PART:03"B""மதமும் மரணமும்""RELIGION & DEATH"[இந்து மதம்]அடுத்த வாரம் தொடரும் 

1 comments:

  1. உலகில் உள்ள எல்லா இறைக் கோட்பாடுகளும் கருவாக கொண்டிருப்பது தமிழர்களின் மெய்யறிவே !
    ஆதிமூலம் என்ற ஏகம்பரம் மட்டுமே இருப்பு !"சக்தியேசிவம்(Energy=Mass)"
    (Eternal Basic Energy is the Sole availability in the limitless Space)

    ReplyDelete