சிரிக்க.... சில நிமிடம்

                                         நகைச்சுவை-ஜோக்ஸ் 



1.😼

நீதிபதி: [குற்றவாளியிடம்] இந்த திருட்டுக் குற்றத்திற்கு உனக்குப்  பத்தாயிரம் ரூபா அபராதம் விதிக்கிறேன். கட்ட தவறினால் ஒரு ஆண்டு சிறை தண்டனை.

 

 குற்றவாளி: என்னை ஒரு மணி நேரம் வெளியே விடுங்கள். அபராதத்தை கொண்டு வந்து கட்டி விடுகிறேன்.

 

2.😼

[இரண்டு பெண்கள்]

முதல்பெண்: என் கணவர் திருமணமான புதிதிலேயே என்னை தேவயானி தேவயானி என்று கொஞ்சுவாரு.

 

 இரண்டாமவள்: இப்போ எப்பிடியோ?

 

முதல்பெண்: தேவையா, நீ தேவையா நீயென்னு எரிஞ்சு விழுகிறார்.

 

3.😼

அப்பா: என்னடா... ரிப்போர்ட் காட் டில  ரொம்ப கம்மியா மார்க் வாங்கிட்டு வந்திருக்கே?

 

பையன்: விலைவாசி ரொம்ப ஏறிப்போச்சுதப்பா. எதையுமே  நிறைய வாங்க முடியல.

 

4.

நோயாளி:[டாக்டரிடம்] டாக்டர் இந்த ஆபரேஷனில் நான் பிழைப்பேனா?

 

டாக்டர்: கவலைப்படாதீங்க.... உங்களுக்கு செய்யப்போற ஆபரேஷன் புள்ளிவிபரப்படி.....பத்தில்  ஒருவர் பிழைப்பார்களாம்.....  இது எனக்கு பத்தாவது ஆப்பரேஷன். அதனால நீங்கள் பிழைச்சுடுவீங்க.

 

5.😼

 நீதிபதி: ஏன் உங்க மனைவியை விவாகரத்து செய்யணும்னு நினைக்கிறீங்க?

 

 கணவன்: ஆறு மாதமாய் அவ என்கிட்டே பேசுறதே இல்லை.

 

நீதிபதி: நல்லா யோசிச்சுப் பாருங்க! இப்படியெல்லாம் ஒரு வாய்ப்பு மறுபடியும் கிடைக்கிறது கஷ்டம்.

 

6.😼

டாக்டர்:அந்த நோயாளி ரஜினி இரசிகர் இன்று நினைக்கிறேன்.

நேர்ஸ்: எப்பிடி சொல்லுறீங்க டாக்டர்.

டாக்டர்: ஊசி  போட்டு முடிந்ததும் ''என் வலி தனி வலி''

என்று சொல்லுறாரே. 

 

7.😼

மகன்:அப்பா,உங்களால இருட்டில கையெழுத்துப் போட முடியுமா?

 

தந்தை:ஏன் முடியாது!

 

மகன்: அப்பிடியெண்டால் என்னோட ரிப்போர்ட் காட் ல இப்ப ஒரு கையெழுத்துப் போடுங்க.

 

8.😼

மனைவி:சாப்பிடும்போது டிவி பார்க்காதீங்க அப்பா.  சாப்பாட்டின்ர டேஸ்ட்டே(ருசி)  தெரியாது.

 

கணவன்: சாப்பாடு டேஸ்டாய்(ருசியாய்) இருந்தா, சாப்பிடும்போது நான் ஏண்டி டிவி பார்க்கிறன்.

 

9.😼

குமாஸ்தா:போடா,நீ ஒரு முட்டாள்.

 

டைப்பிஸ்ட்:போடா,நீ தான் முட்டாள்.

 

மனேஜர்: என்ன அங்கே கூச்சல்? நானும் ஒருத்தன் இங்க இருப்பது உங்களுக்குத் தெரியலையா?

 

10.😼

காதலி:ஒண்ணு நாம் கல்யாணம் பண்ணிக்கவேணும்....இல்ல தற்கொலை பண்ணிக்க வேணும்..... என்ன கோபால் சொல்லுறீங்க?

 

காதலன்:எப்பிடியும் நான் தப்பிக்க வழியே இல்லையா கீதா...?

 

11.😼

குடிகாரன்1:குடி குடியைக் கெடுக்கும் என்கிறது சரியாய் போச்சு.

 

குடிகாரனை2: எதனாலப்பா?

 

குடிகாரன்1: கல்யாணமாகின உடனேயே என் பெண்டாட்டி என்னை இனிமே  குடிக்கக் கூடாது எண்டு சொல்லியிற்றா.

 

12.😼

நண்பன்1: தபால்காரன் மனைவிக்கு வைத்திய சாலையில் குழந்தை பிறந்திருக்கு.

நன்பன்2: அதுக்கென்ன

நண்பன்1:குழந்தையின் நிறைக்கு ஏத்த மாதிரித்தான் வைத்திய சாலைக்கு பணம் கட்டுவன் என்று தகராறு பண்ணியிற்றார்.

 

13.😼

மாணவன்: ரீச்சர், நான் போய் யூரின் பாஸ் பண்ணியிற்று வாறன்.

 

ஆசிரியர்: அதையாவது பாஸ் பண்ணித் தொலையடா.

 

14.😼

பெண்: வர்ற ஒண்ணாம் தேதி வந்து எக்கப்பவை வந்து பாருங்க.

பையன்: நிச்சயம் பண்ணவா?

பெண்: என் பின்னாடியே பல நாட்களா வர்றிங்களே, அதுக்கு செக்யூரிட்டி சம்பளம் வாங்கத்தான்.

 

15.😼

டைரக்டர்:(நடிகையிடம் ).. மேடம் இந்த காட்சியில வில்லன் உங்களை கெடுக்க வாரான். நீங்க அவன் கையில சிக்காம தப்பிச்சு ஓடுறிங்க.

 

நடிகை:சார்..இரண்டு நாளாய் காலில சுளுக்கு. இன்னைக்கு போடமுடியாது. பேசாம வில்லனின்ர ஆசைக்கு இணக்கிடுறேனே.

 

டைரக்டர்:.....!!!!!!

 

16.😼

வேலைக்காரி: (முதலாளியிடம்) ஐயா, உங்க பையன் என்னைப் பார்க்கிற பார்வை ஒரு மாதிரி இருக்குதுங்க.

முதலாளி: கவலைப்படாதே, சித்தி என்கிற முறையில பார்த்திருப்பான்.

 

17.😼

காதலன்: கண்ணே, உனக்காக இமயமலையைக் கூடத் தாண்டுவன்.

காதலி:சரி,சரி அது கிடக்கட்டும். இப்ப எதுக்காக உங்க காலை நொண்டுறீங்க.

காதலன்:உங்க வீட்டுக் கேட்டை தாண்டும்போது விழுந்திட்டன்.

 

18.😼

(பரீட்சை  மண்டபத்தில்)

ரகு: வயித்தைக் கலக்குதடா

ரவி: எல்லாப் பாடத்தையும் கரைச்சுக் குடிக்காதே எண்டு அப்பவே சொன்னன் கேட்டியா?

 

19.😼

நிருபர்: நீங்க எழுதின நாவல் ரொம்ப சுவையாக இருக்கே, எப்படியுங்க?

எழுத்தாளர்: கிச்சினில நான் சமையல் பண்ணிய பொது எழுதின கதையாச்சே..

 

20.😼

வாடிக்கையாளர்: சீக்கிரமா ஒரு பை கொடுங்க, றெயினைப் பிடிக்கவேணும்

கடைக்காரர்:சொறி சேர். ரெயிலை புடிக்கிற அளவுக்குப் பை எங்க கடையில இல்லிங்க.

 

தொகுப்பு:செ.மனுவேந்தன் 


0 comments:

Post a Comment