நெருங்கி வரும் புதுமைகள்

அறிவியல்=விஞ்ஞானம் 

பி.வி.சி- பிளாஸ்டிக்-அதற்கு  மறுவாழ்வு

மறுசுழற்ச்சிக்கு சவாலாக இருக்கும் பிளாஸ்டிக்குகளுக்கு தீர்வு கண்டுள்ளனர் அமெரிக்காவின் மிக்சிகன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள்.

வெப்பத்தின் மூலம், பிவிசி வெளியிடும் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தினை பிரித்தெடுத்து பிற பொருட்களைத் தயாரிக்கும் மூலப்பொருளாக அது மாற்றித் தருகிறது.

 

துப்பாக்கியுடன் ரோபோக்கள்


அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோவில் மனிதர்களை சுடும்வல்ல ரோபோக்களை பயன்படுத்த காவல்துறைஆலோசித்து வருகிறது.  பள்ளிகள், உணவகங்கள் போன்ற பொது இடங்களில் புகுந்து அப்பாவிகளை சரமாரியாக சுட்டுக் கொல்லும், சைக்கோ கொலையாளிகளை தடுக்க இந்த ரோபோக்கள் பயன்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.  இயக்க முறையில் ரோபோவை அனுப்பி கொலையாளியை துல்லியமாக சுடமுடியும் என்றும், பல அப்பாவிகள் இதனால் சீக்கிரம் காப்பாற்றப்படுவர்  என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

'கின்னஸ்' சாதனையில் கார்


அவுஸ்ரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழக பொறியியலாளர்கள் ''ஸன்ஸ்விப்ட்7'' என்ற காரை உருவாக்கியுள்ளனர். சூரிய ஒளி மின்சாரத்தை ஓடும் இந்தக்  கார் அண்மையில் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது ''ஸன்ஸ்விப்ட்7''. ஒருமுறை மின்னேற்றம் செய்து, 1000 கிலோ  மீட்டரை, 12 மணி நேரத்திற்குள் பயணித்து காட்டியுள்ளது. பொறியியளாளர்களின் இரு  ஆண்டுகள் முயற்சியால் உருவான இக் கார் எடை 500 கிலோ தான்.ஓட்டுனரின் வசதிகளை தவிர்த்ததால் தான்  இவ்வகையான  வாகனத்தை உருவாக்க முடிந்தது. விரைவில் சூரிய ஒளி மின்சாரம் வாகனங்களுக்கான பந்தயத்தில் ''ஸன்ஸ்விப்ட்7'' பங்கேற்க போகிறது.

 

மாடுகளின் 'கேஸ்டிரபிளுக்கு' தடுப்பூசி!...

உலகெங்கும் வெளியேற்றப்படும் பசுமைக்குடில்  வாயுவான மீத்தேன்னில்,   6 சதவீதத்தை வெளியேற்றுவதை 100 கோடிக்கும் மேற்பட்ட மாடுகள் தான்.  இம் மீத்தேன் காரணமாக தரைமடடத்தில் ஓசோன் படலம் உருவாகுவதால்,உலகில்   நாள் ஆண்டுக்கு 10 லட்சம் பேர் மாசுபாடு சார்ந்த மரணத்தை தழுவுகின்றனர்.

 இதை தடுக்கவே மாடுகளின் இரைப்பையில் மீத்தேன் உருவாக்கும் கிருமிகளை கொல்லும் தடுப்பூசியை உருவாக்க கால்நடை ஆராய்ச்சியாளர்கள் முயன்று வருகின்றனர். அத்தகைய  தடுப்பூசியை அமெரிக்காவிலுள்ள 'ஆர்கியாபயோஎன்ற நிறுவனம் சோதித்து வருகிறது.

 இயல்பான செரிமானத்தை பாதிக்காமல் நோய்க் கிருமிகளை மட்டும் கொல்வதன் மூலம் கால்நடைகளில் வழியே வெளியேற்றும்  மீத்தேன்னை 30 முதல் 100 சதவீதம் வரை தடுக்கலாம் என தற்போது ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிடுகின்றனர். அமெரிக்க கால் நடை மருத்துவமனை முகாமைகள்  அனுமதி கொடுத்தால் 2026க்குள் உலகெங்கும் கால்நடை மீத்தேன் தடுப்பூசி போடுவது நடைமுறைக்கு வரும்.

 

வயிற்றை கெடுக்கும் வேதிப்பொருள்...

பாத்திரங்களை அரைமணிநேரத்தில் கழுவி காயவைத்துத்  தரும் 'டிஷ் வாஷர்கள்' பாவனை இப்போது பரவலாகி வருகின்றன.ஆனால், டிஷ்வாஷருக்கான சோப்புத்துாள்களில் உள்ள சில வேதிப் பொருட்கள், பாத்திரத்தில் படிகின்றன.

அவை பிறகு சாப்பாட்டில்  கலந்து வயிற்றுக்கு கெடுதல் உண்டாக்கக் கூடும் என சுவிட்சர்லாந்தில் உள்ள சூரிச் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். குறிப்பாக பாத்திரப் பிசுக்குகளை நீக்கும்  'ஆல்கஹால் எதாக்சைலேட்' என்ற வேதிப்பொருள் வயிற்றில் நல்ல கிருமிகளை கொல்லக்கூடும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

 

தொகுப்பு:செ.மனுவேந்தன்

0 comments:

Post a Comment