தளத்தில்:சிந்தனைஒளி,, கனடாவிலிருந்து.......ஒருகடிதம்,
உலகம் அழியபோகிறதா?, சூரனை சங்காரம் செய்தவன் முருகனா....?சுப்ரமணியனா....?, கண்டதும்,கேட்டதும்,
ஆன்மீகம், , ஆராய்ச்சியாளரின்
செய்திகள், தொழில்நுட்பம், உணவின்
புதினம் ,அறிவியல்,கணினிஉலகம் ,பாருக்குள்ஒருநாடு….ஒருபார்வை , உங்களுக்குதெரியுமா? ,சிரிக்க...!,சினிமா.
தொடர்புகளுக்கு: manuventhan@hotmail.com
சிந்தனைஒளி
* உண்மையானபெரியமனிதருக்கு
முதல்அடையாளம்பணிவாகஇருத்தல்!
* அலுவல்முடிக்கஅடிக்கடிவருவார்!
அலுவல்முடிந்தபின்அடிக்கவும்வருவார்!
* பெற்றோர்பிள்ளைகளைஉருவாக்கலாம்!
பிள்ளைகள்பெற்றோரைஉருவாக்கமுடியாது!
* காளையர்க்குகாதல்அரசியல்மாதிரி!
காதலியைச்சுற்றிப்பார்க்கலாமேதவிர
தொட்டுப்பார்க்கக்கூடாது!
* ஒன்றுபட்டால்உண்டுவாழ்வு
என்றவாழ்வைஇன்னும்காணோம்!
*" ஒன்றுபட்டால்உண்டுவாழ்வு
ReplyDeleteஎன்றவாழ்வைஇன்னும்காணோம்!"
தமிழர் சரித்திரத்தில் ஒரு முறை கண்டோம்.அது 300BC அளவில்.அதன் பின்பு இன்று வரை நாம் ஒன்றுபடவில்லை.இனி இதை எங்கு காண்போம்?
வட இந்தியாவை ஆண்ட நந்த வம்சம்[Nandhas] தென் இந்தியாவை ஆண்ட மூன்று பேரரசுகளுடனும் சகோதரரைப் போன்ற ஒரு தொடர்பை ஏற்படுத்தி இருந்தனர். என்றாலும் அவர்களை தொடர்ந்து வந்த மௌரியப் பேரரசு [Mauryas](322–185 கிமு) தென் இந்தியா மேல் படையெடுத்தது.சேர மன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் இமயம் வரை படை நடத்திச் சென்றவன்.வடக்கில் உள்ள இமயத்தையும், தெற்கின் குமரிக்கும் இடைப்பட்டிருக்கும் பரந்த நாட்டில் உள்ள, செருக்குக் கொண்டிருந்த மன்னர்களது எண்ணங்களைப் பொய்யாக்கி அவர்களைத் தோற்கடித்துச் சிறைப்பிடித்தவன் . அது மௌரியர்களை சேர நாட்டின் மேல் பலி வாங்கும் தாக்குதலுக்கு தூண்டியது .என்றாலும் மௌரியப் பேரரசால் சோழ எல்லைக்குள் நுழைய முடியவில்லை .இந்த படை எடுப்பு மூவேந்தர்களுக்கும் ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தியது .இதனால் 313 B.C,யில் இவ் மூவேந்தர்களும் ஒரு ஒற்றுமைக்கான உடன்படிக்கை ஒன்றில் ஒப்பம் இட்டார்கள் என Dr.மதிவாணன்[author Dr.Mathivanan] கூறுகிறார்.
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், கருங்கை ஒள் வாட் பெரும் பெயர் வழுதி , 70 ஆவது பாண்டியனாகிய தேவ பாண்டியன் ஆகிய மூவரும் கையொப்பம் இட்ட அந்த ஒற்றுமை ஒப்பந்தம் ஆக 113 வருடமே நிலைத்து இருந்தது .அது,அந்த ஒற்றுமை , வட இந்தியர்களின் தாக்குதல்களில் இருந்து தமிழகத்தை அசைக்க முடியாத குன்றாய் நின்று காப்பற்றியது.சங்க பெண் புலவர் முடத்தாமக் கண்ணியார் தாம் இயற்றிய பொருநராற்றுப் படை [53-55]யில் மூவேந்தர்களும் ஒரே மேடை யில் இருக்க கண்டதாக பதிந்து உள்ளார் .
“பீடு கெழு திருவின் பெரும் பெயர் நோன்தாள்
முரசு முழங்கு தானை”
{(பொரு. ஆற். படை: 53-54) போரொழுக்கத்தில் வெற்றிகளைச் சாதித்த மூவேந்தர்களை அப்பாடல்களில் சந்திக்கின்றோம்.}
மேலும் இரண்டாம் பத்தை பாடிய குமட்டூர்க் கண்ணனார் என்பவரும் தாணும் இதை கண்டதாக பதிந்து உள்ளார். பின் ஔவையாரும் இதை கண்டுள்ளார். ஆனால் அந்த ஒற்றுமை அதன் பிறகு இன்று வரை ஏற்படவே இல்லை.
இப்ப நாம் காரிக் கண்ணனார் என்ற இன்னும் ஒரு சங்க புலவர் கண்ட காட்சியை பார்ப்போமா ?
[புறநானூறு 58]
ஒருசமயம், சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனும் பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் ஒருங்கே இருந்தனர். அதைக் கண்ட புலவர் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பெருமகிழ்ச்சி அடைந்தார். சோழனும் பாண்டியனும் ஒருங்கே இருந்ததைப் பலராமனும் திருமாலும் ஒருங்கே இருப்பதற்கு ஒப்பிட்டு, “அவர்கள் தொடர்ந்து ஒற்றுமையாக இருந்தால் இவ்வுலகம் அவர்கள் கையகப்படுவது உறுதி" என்று இப்பாடலில் கூறுகிறார்.
"நீயே, தண்புனற் காவிரிக் கிழவனை; இவளே,
முழுமுதல் தொலைந்த கோளி ஆலத்துக்
......................................................
ஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதிர்; இருவீரும்
உடனிலை திரியீர் ஆயின், இமிழ்திரைப்
பெளவம் உடுத்தஇப் பயங்கெழு மாநிலம்
கையகப் படுவது பொய்யா காதே;
..........................................................
நெடுநீர்க் கெண்டையொடு பொறித்த
குடுமிய ஆக, பிறர் குன்றுகெழு நாடே."
நீ குளிர்ந்த நீரையுடைய காவிரிக்குத் தலைவன்;இவன் முன்னோர் புகழைக் காப்பாற்றும் பஞ்சவர் ஏறு.
இன்னும் கேள். ’நீங்கள் ஒருவருக்கொருவர் உதவிடுவீர். இருவரும் இப்படி இணைந்திருந்தால் இந்த உலகம் முழுவதும் உங்கள் கையில் இருக்கும்.
பிறருடைய நாடுகளிலுள்ள குன்றுகளில், வளைந்த கோடுகளையுடைய புலிச் சின்னமும், பெரிய நீரில் வாழும் கயல்மீன் சின்னமும் பொறிக்கப்படுவதாகுக.
"காதலியைச் சுற்றிப் பார்க்கலாமே தவிர
ReplyDeleteதொட்டுப் பார்க்கக் கூடாது!"
இரண்டாயிரம் ஆண்டுகளிற்க்கு முற்பட்ட பண்டைய காலத்தில்,காதலர் இருவர் தனியிடத்தில் ஒருவரையொருவர் சந்தித்து காதல் வயப்பட்டு பிறரறியா வண்ணம் காதலியை தொட்டுப்பார்த்து இணைவிழைச்சி[புணர்ச்சி] மேற்கொண்டு ஒழுகி வருவது "களவு" எனப்பட்டது.இப்படி ஆடவரும் பெண்டிரும், பருவம் வந்தபின் கூடி வாழ்ந்து வந்தனர் ஆயினும் சில ஆடவர், தாம் மணந்த மகளிரை மணக்கவில்லை யென்று பொய்யுரைத்தும், அவரைக் கைவிட்டும், அவர் வாழ்வைக் கெடுத்து வந்ததினால், அதாவது களவு முறையில் நாளடைவில் பொய்ம்மையும் கள்ளமும் இழுக்கும் நேர்ந்தமையின் காரணமாக அதனைக் களைய வேண்டி சில விதி முறைகளை வகுத்தனர்.'கரணம்' என்ற திருமணம் வாயிலாக பொய்மை நிகழாது என நினைத்தனர். இதன் காரணமாக திருமணம் என்ற சடங்கு உருவாயிற்று. இப்படி தொல்காப்பியர் கூறுகிறார்.
"பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப"
இதனால் இந்த தொட்டுப்பார்த்தல் திருமணம் என்ற சடங்கிற்கு சங்க காலத்திலேயே மாற்றப் பட்டுவிட்டது.
என்னை சும்மா சுற்றிப் பார்த்து காலம் கடத்தியது காணும்.அந்த தொட்டுப்பார்க்கும் நாள் வராதோ என எங்கும் சங்க தலைவியின் புலம்பல் இதோ:
"கன்றும் உண்ணாது, கலத்தினும் படாது
நல் ஆன் தீம் பால், நிலத்து உக்கா அங்கு
எனக்கும் ஆகாது, என் ஐக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல், என் மாமைக் கவினே"
- வெள்ளி வீதியார், குறுந்தொகை-27, பாலைத் திணை
நல்ல பசும்பால்-ன்னா ஒன்னு கன்று குடிக்கணும்! இல்லை பாத்திரத்தில் கறக்கணும்! ஆனா இப்படி நிலத்தில் வீணே வழிகிறதே!எனக்கும் உதவாமல், என்-அவருக்கும் உதவாமல், என் மாந்தளிர் மேனியும், வீணே அழிந்து கெடுகிறதே!
இப்ப இந்த நூற்றாண்டு காதலன் புலம்பலை பார்ப்போமா ?
படம்: என் சுவாசக் காற்றே
"தீண்டாய், மெய் தீண்டாய்! தாண்டாய், படி தாண்டாய்!"
ஆம் இவை எல்லாம் திருமணம் என்ற சடங்கிற்கு பின்பே!
"பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம்!
பிள்ளைகள் பெற்றோரை உருவாக்க முடியாது!"
பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம் என்பதில் ஐயப்பாடு ஒன்றும் இல்லை.புறநானுறு 312 இல் அப்படித்தான் கூறுகிறது
"ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே;
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;"
மகனைப் பெற்று வளர்த்தல் பெண்களின் கடமைகளுள் தலையான கடமையாகும்.
அவனைச் சான்றோனாக்குதல் (வீரன்) தந்தையின் கடமையாகும்.
இப்படி பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம்.
ஆனால் பிள்ளைகள் பெற்றோரை உருவாக்க முடியாது என்பதில் தான் எனக்கு ஒரு சந்தேகம்
[1]நாம் இப்ப சொல்லின் கருத்தை பார்ப்போமா ?
பெற்றோர் =தங்கள் வாரிசை(குழந்தை) வளர்க்கும் பாதுகாவலர் என்று கொள்ளலாம்.அல்லது
=பிள்ளை பெற்றவர்கள் /பெற்றோர் என்று கொள்ளலாம்
ஆகவே பெற்றோர் என்ற சொல்லே பிள்ளை இல்லாமல் உருவாகாது.
பிள்ளை =குழந்தை,குட்டி , குஞ்சு
இதில் கவனியுங்கள் பெற்றோர் என்ற சொல் தொடர்பு படுத்தப் படவில்லை
[2]மேலும் எப்படி பிள்ளைகளை ஒழுங்காக பெற்றோர்கள் உருவாக்கினார்களோ ,அப்படியே , பிள்ளைகள் வளர்ந்து ஒரு நிலைக்கு வந்த பின் ,கெட்டுப்போன /தீய வழியில் சென்ற பெற்றோர்களை ,பிள்ளைகள் நல்லவராக உருவாக்கலாம் .இதற்கு உதாரணமாக இரணியன்,அவன் மகன் பிரகலாதன் கதையை கூறலாம் ?