2015 இல் உலகை சுற்றப் போகும் சூரிய மின் சக்தி விமானம்!
முதன் முதலாக ஒரு சூரிய மின் சக்தி விமானம் 2015 இல் உலகை சுற்றப் போகிறது. 1999 இல் உலகை முதன் முதலாக பலூனில் உலகை சுற்றிய பெட்ரான்ட் பிக்கார்ட் இதை
வடிவமைத்துள்ளார்.சோலார் இம்பல்ஸ் என்றழைக்கப் படும் இந்த விமானத்தின் சிறப்பு என்ன என்றால் இது இரவிலும் பறக்கக் கூடியது. இதன் எடை குறைவான உருவாக்கமும் வலிமை மிகுந்த மின் கலன் திறனும் இதை சாத்தியமாக்குகிறது.
2009 இல் இந்த மாதிரி ஒரு சூரிய மின் சக்தி விமானம் உருவாக்க வேண்டுமென்று பிக்கார்ட் நினைத்து அதை செயல் படுத்தவும் செய்தார். இந்த விமானம் 2010 இல் சுவிட்சர்லாந்து நாட்டு மீது 26 மணி நேரம் 9 நிமிடங்கள் பறந்தது. இந்த வருடம் ஜூன் மாதம் ஸ்பெயின் நாட்டில் இருந்து மொராக்கோ நாட்டுக்கு போய் ஒரு சாதனை படைத்தது.
ஏ.டி.எம் மில் பணம் எடுக்க கார்டு வேண்டாம்.. கை போதும்!
ஜப்பானின் கிஃபு பகுதியில் உள்ளது ஒகாகி கியோரிட்சு வங்கி. கார்டு இல்லா ஏடிஎம் சேவையை இந்த வங்கி நேற்று அறிமுகப்படுத்தியது. இதன்படி, வாடிக்கையாளர்கள் தங்களது கை ரேகையை வங்கியில் முன்கூட்டியே பதிவு செய்துகொள்ள வேண்டும். அவர்களது பிறந்த தேதியும் பதிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு பாஸ்வேர்டு வழங்கப்படும். ஏடிஎம்மில் பணம் எடுப்பதாக இருந்தால் முதலில் நமது பிறந்த தேதியை டைப் செய்து பின்னர் உள்ளங்கையை ஏடிஎம்மில் உள்ள ஸ்கேனர் கருவி மீது வைக்க வேண்டும்.மானிட்டரில் நமது பெயர் வந்த பிறகு, பாஸ்வேர்டு டைப் செய்து பணம் எடுத்துக் கொள்ளலாம். ஸ்டேட்மென்ட் பிரின்ட் எடுக்கலாம். டெபாசிட்டும் செய்ய முடியும். மழை, வெள்ளம், சுனாமி போன்ற ஆபத்துகள் நிறைந்த நாடு ஜப்பான். அசம்பாவித சூழ்நிலைகளில், ஏடிஎம் கார்டு இல்லாமலேயே மக்கள் பணம் எடுக்கும் வசதி வேண்டும் என்பதால் இத்திட்டத்தை வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. கிஃபு பகுதியில் உள்ள ஹஷிமா நகர் மற்றும் நடமாடும் ஏடிஎம் ஆகியவற்றில் இந்த சேவை நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் 18 கிளைகளில் இன்று அறிமுகப்படுத்தப்படுகிறது.
மார்பகப் புற்றுநோயைக் கண்டறிய உதவும் நவீன பிரா
அமெரிக்காவில் ஒரு நவீன பிராவை உருவாக்கியுள்ளனர். இந்த பிராவை அணிந்தால், அணிந்தவருக்கு மார்பகப் புற்றுநோய் இருக்கிறதா, இல்லையா என்பதைக்
கண்டறிய முடியுமாம்.
இந்த பிராவுக்குள் மார்பகப் புற்றுநோயை கண்டறிய உதவும் நவீன சாதனம் பொருத்தப்பட்டுள்ளதாம். இதுதான் மார்பகப் புற்றுநோயைக் கண்டறிய உதவுகிறதாம். வழக்கமான மாமோகிராம் செய்வதற்குப் பதில் இந்த பிராவை அணிந்தாலே மார்பில் புற்றுநோய் அறிகுறி இருக்கிறதா என்பதை இது காட்டிக் கொடுத்து விடுமாம்.புற்றுநோய் கட்டிகள், மார்பகத்தில் இருக்கிறதா என்பதை இந்த பிரா கருவி துல்லியமாக காட்டி விடுமாம். இதன் மூலம் உடனடி சிகிச்சைக்கு வழி கிடைக்கிறது. தேவையில்லாத சிக்கல்களையும் தவிர்க்கலாமாம்.
இந்த பிராவுக்குள் பொருத்தப்பட்டுள்ள நவீன சாதனத்தில் அதி உயர் சென்சார் கருவி முக்கியமாக இடம் பெற்றுள்ளது. இது, மார்பகத்தில் உள்ள செல்களின் வெப்பநிலையை உணர்ந்து, அதில் கூடுதல், குறைச்சல் இருக்கிறதா என்பதை சொல்கிறது. இதை வைத்து செல்களில் தேவையில்லாத பெருக்கம் இருக்கிறதா அதாவது புற்றுநோய் திசுக்கள் உருவாகியுள்ளதா என்பதை அறிய முடியும்.
இந்த பிரா இன்னும் மார்க்கெட்டுக்கு வரவில்லை. 2013ம் ஆண்டுதான் விற்பனைக்குக் கொண்டு வரவுள்ளனர்.

தமிழில் எழுதியதை வாசித்துக் காட்டும் இலவச மென்பொருள்!
நாம் ஆங்கிலத்தில் எழுதியதை ஒலி வடிவமாக மாற்றித்தரும் மென்பொருள்களை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆங்கிலத்தில் தட்டச்சிட்டதை வாசிக்க செய்யும் இத்தகைய மென்பொருள்களை நம்மில் ஒரு சிலர் பயன்படுத்தியும் இருக்கலாம்.
அதுபோலவே நம் தமிழ்மொழிக்கு பெருமை சேர்க்கும் விதமாக தமிழில் தட்டச்சிட்டதை வாசித்துக்காட்டுகிறது இந்த மென்பொருள். இந்த மென்பொருளை பெங்களுரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் பேராசிரியர்.ஏ.ஜி.ராமகிருஷ்ணன் என்பவர் உருவாக்கி இருக்கிறார்.
தமிழில் எழுதியதை வாசித்துக்காட்ட இங்கு கிளிக் செய்யவும் http://mile.ee.iisc.ernet.in:8080/tts_demo/
மேற்காணும் இணைப்பைச்சொடுக்கி இந்த தளத்திற்கு செல்லவும். தமிழில் யுனிக்கோட் முறையில் எழுதப்பட்ட வரிகளை, கட்டுரைகளை, இங்கு இருக்கும் பெட்டியில் உள்ளிட்டு Submit என்பதை சொடுக்கினால் போதும்.

படுக்கையில் ‘உச்சா’ போனாலும் நோ பிராப்ளம் : வந்தாச்சு கருவி
படுக்கையை விட்டு எழுந்திருக்க முடியாத வயதானவர்களுக்காக பிரத்யேக கருவியை ஜப்பான் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அவர்கள் சிறுநீர், மலம் கழித்தால் ஆட்டோமேடிக் கருவி கழுவி துடைத்து சுத்தம் செய்துவிடும். ஜப்பானில் சீனியர் சிட்டிசன்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு பயன்படும் கருவிகளை பல்வேறு நிறுவனங்களும் தொடர்ந்து தயாரித்து வருகின்றன.
முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான கருவிகள், தொழில்நுட்ப வசதிகள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தும் வகையில் தலைநகர் டோக்கியோவில் சர்வதேச கண்காட்சி நடந்தது. இதில், ‘மசில்கார்ப்’ என்ற நிறுவனத்தின் தயாரிப்பான ‘ரோபோ ஹெல்ப்பர் லவ்’ என்ற கருவி பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. இது ஆட்டோமேடிக் டாய்லெட் வாஷ் கருவியாகும். ஆங்கில ‘யு’ எழுத்து வடிவில் இருக்கிறது.
படுக்கையை விட்டு எழுந்திருக்க முடியாத நிலையில் இருக்கும் நோயாளிகள், முதியோரின் இரு கால்களுக்கும் நடுவே சிறுநீர், மல துவாரங்களை மூடும் வகையில் கவை போல இந்த கருவியை பொருத்த வேண்டும். சிறுநீர், மலம் வெளியேறுவதாக சென்சார் மூலம் தெரியவந்தால், உடனே பிரத்யேக குழாய் மூலம் அவை உறிஞ்சப்பட்டு, வெளியேற்றப்படும். கிருமிநாசினி கலந்த தண்ணீர் உடனே அப்பகுதியில் ஸ்பிரே செய்யப்படும். சூடான காற்று செலுத்தி அப்பகுதிகள் காயவைக்கப்படும்.

0 comments:
Post a Comment