21-12- 2012
இல் உலகம் அழியாது!
பலர் விஷமப் பிரசாரம் செய்வதுபோல 21-12- 2012 இல் உலகம் அழியவேமாட்டாது என்று NASA சந்தேகமே இன்றிக் கூறியுள்ளது.
சும்மா ஒரு மனிதன் உண்டாக்கிய கலண்டரில் ஒரு திகதி இலக்கங்களின் வடிவம் ஒரு 'மாதிரி' வருபோதும், அல்லது ஒரு இனத்தினரின் காலக் கலண்டரின் சுற்றில் ஒரு 'முடிவு' வரும்போதும் இப்படியான புலுடாக் கதைகளை அவிட்டு விட்டுக்கொண்டே இருப்பதற்கும் ஆட்கள் இருக்கிறார்கள்.
முதலில் சுமேரியர்கள் நிபிறு என்னும் (இல்லாத) கிரகத்தால் 2003 இல் பூமி அழியும் என்று சொல்லி, அது நடைபெறாது போக, ஒரு சிலர் அதை 2012 க்கு தள்ளிப் போட்டனர். இந்த நாள் மாயன் கலண்டர் சுற்றின் முடிவுடன் ஒத்துப் போனதால் இவர்கள் இதுவேதான் உண்மையான அழிவு நாள் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்கள்.
ஆனால், நாசா இதை முழுக்கவும் மறுக்கின்றது.
நமது பூமி 4 பில்லியன் வருடங்களாக மிகவும் சேமமாகவே இயங்குகிறது. அழிவது என்பது ஒரு நாலு வருடத்திலோ அல்லது நாலு நிமிடத்திலோ நடக்கின்ற விடயம் அல்ல. இன்னும் பல பில்லியன் வருடங்களுக்கு பவுத்திரமாகவே இருக்கும்.
இதற்கு அவர்கள் காட்டும் அழிவுக்கான காரணிகளுக்கு நாசா கூறும் விளக்கப் பதில்கள்:
*மாபெரும் கோளின் உக்கிரமான மோதலால் உலகம் அழியும்:
அவ்வாறு நடைபெறும் என்றால், அக்கோள் திடீரென வானில் முளைக்க இயலாது.
அதன் வருகை பல வருடங்களுக்கு முன்பே காணக்கூடியதாக இருந்திருக்கும். அப்படி ஒரு துளி அடையாளமும் விண்வெளியில் காணமுடியவில்லை.
* பூமியின் காந்த வடமுனை தென்புறமாக நகர்ந்து கொண்டிருப்பதால், பூமியின் சுழற்ச்சி நின்று, மறுபக்கமாய்ச் சுற்றி உலகம் அழியும்:
இந்தக் காந்தமுனை நகர்வு ஒவ்வொரு 400000 - 800000 வருடச் சுற்றிலும் நடந்துவரும் ஓர் இயற்கைச் சம்பவம். இதனால் திசைக்காட்டிக் கருவிதான் வளம் மாறிக் காட்டுமே ஒழிய பூமி திசை மாறிச் சுற்றாது.
*சூரிய எரி பொழிவால் உலகம் அழியும்:
சூரிய சுவாலையானது 11 - 12 வருடங்களுக்கு ஒரு முறை கூடுதலாக இருக்கும். அடுத்தது 2013 - 2014 இல் வரும். அது தொலைதொடர்பு சாதனங்களுக்குச் சிறிய ஒரு தடங்களை ஏற்படுத்துமே ஒழிய, பெரும் நாசம் விளைவிக்கும் அளவுக்கு எந்தப் பொழிவும் இருக்காது.
*கிரகங்கள் ஒரே கோட்டில் வருவதால் மோதுப்பட்டு உலகம் அழியும்:
இந்த ஆண்டில் அப்படி ஒரு சேர்க்கையும் இல்லவே இல்லை. அப்படி (அண்ணளவாகவே)) சேர்ந்து நின்ற எந்தனையோ ஒவ்வொரு 500 வருடகால சுழற்சிச் சந்தர்ப்பங்களிலும் எந்தவொரு அழிவும் ஏற்பட்டதில்லை. இந்தக் காலத்தில், சூரியனும் பூமியும் மட்டும் பால்வெளி மண்டல மையத்தோடு நேரில் நிற்கும். இது ஒவ்வொரு வருடமும் நடக்கும் சாதாரண விடயம்.
* சீறிக்கொட்டும் எண்ணற்ற எரிகற்களால் அழியும்:
சந்தர்ப்பமே இல்லை. பூமியைப் பலதடவை வால் வெள்ளிகளும், சிறு, சிறு விண் கற்களும் தாக்கியிருக்கின்றன. பெரும் அழிவு ஒன்றும் ஏற்பட்டதே இல்லை. 65 மில்லியன் வருடங்களுக்கு முன்புதான் ஒருமுறை மிகப்பெரிய தாக்கல் காரணமாக டைனோசரஸ் என்ற உயிரினமே முழுவது முற்றாக அழிந்தன. இப்போது அப்படி ஒரு நிகழ்வுக்கு ஒரு சாத்தியக்க்கூறுகளே இல்லை.
விஞ்ஞானிகள் கழுகுக் கண்கள் உள்ளவர்கள். அவர்கள் பார்வையிலிருந்து விண்வெளியில் உள்ள எந்த ஒரு பொருளும் தப்ப இயலாது. இதற்குச் சில உதாரணங்கள்:
140 மீ. அளவுள்ள ஒரு சிறிய விண்கல் 05 -02 -2040 பூமியைத் தாண்டிப் போகுமாம். அதேபோல கடந்த 28 /02, 06 /03, 20 /03 , 16/05 , 15/06 திகதிகளில் பயணம் செய்த சிறு, சிறு விண் கற்களின் வருகையை முன்கூட்டியே தெரிவித்து இருந்தனர்.
ஒருமுறை கூகிள் பண்ணிப் பாருங்கள்; இந்த வருடம் மட்டுமல்ல, ஒவ்வொரு வருடமும் உலகம் அழியும் என்று சொல்லும் வெவ்வேறு சாரர் இருந்து கொண்டே இருக்கிறார்கள்.
ஆதலால், இந்த உலகம் அழியும் என்று கூறுவதெல்லாம் ஒரு பரபரப்பை ஏற்படுத்துவதற்கான புரளிக் கூத்துகளே ஒழிய அதில் ஒருவித உண்மையே இல்லை. இவை, மிகையூட்டி எடுக்கப்படும் திரைப் படங்களுக்கு வேண்டுமென்றால் பொருந்தலாம்.
உலகம் அழிந்தாலும் உயிருடன் இருக்கவிருக்கும்
--செல்வத்துரை சந்திரகாசன்
உலகம் அழியத் தொடங்கி பலவருடங்களாகி விட்டனவே!ஒரே நாளில் அழிவதெல்லாம் சினிமாக் கதைக்கு பொருத்தம்.கலண்டர் என்பது குறிப்பிட்ட காலத்துக்கு கணித்து வைப்பது வழமை.மாயனின் கலண்டர் அடுத்தது வெளிவருவதற்குள் அவ்வினம் அழிக்கபட்டு விட்டது.அதனை வைத்து உலகத்தையே குழப்புகிறார்கள்.
ReplyDeleteதிரு சந்திரகாசன் ஒரு அறிவியல் விளக்கம் தந்துவிட்டார். எனினும் நாட்காட்டியின் சிறு விளக்கத்தையும் இந்த நாளை தேர்ந் எடுத்தற்கான காரணத்தையும் கூறி , அவனே சாவையும் அழிவையும் கூறவில்லை- என்ற பதிலை இங்கு தருகிறேன்
ReplyDeleteமாயன் காலண்டர் என்னதான் சொல்ல வருகிறது, பார்ப்போமா?
முதலாவது , 260 நாட்கணக்கு கொண்ட புனித நாட்காட்டி.
இரண்டாவது,365 நாட்களைக் கொண்ட உழவுத் தொழிலை –அடிப்படையாகக் கொண்ட நாட்காட்டி.
மூன்றாவது, சூரியக் குடும்பத்தின் ஒட்டு மொத்த அசைவுகளைக் கொண்டு கணக்கிடப்பட்ட நீண்ட 'காலக் கணக்கைக் கொண்டது. இதுதான் எங்கள் உலக அழிவு பற்றி இன்று பேசப்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்த நாட்காட்டி.
மாயனின் இந்த நாட்காட்டியின் கி.மு. 3114 ஆவணி மாதம் 11ம் திகதியிலிருந்து ஆரம்பமாகி கி.பி. 2012 மார்கழி மாதம் 21ம் திகதி,5125 வருடங்களை கடந்து முடிவடைகிறது.இது போலவே இந்துக்களின் இப்ப நடைபெறும் கலி யுகம்,3102 BC இல் இருந்து ஆரம்பமாகி இப்ப 5114 வருடங்களை கடந்துள்ளது.
இது போல மொத்தமாக ஐந்து முழுச் சுற்றுகள் சுற்றி முடிய, பூமி தனது இறுதிக் காலத்தை அடையும் என்பது மாயன்களின் கணிப்பு. அதாவது கிட்டத்தட்ட 26000 வருடங்களில் (5×5125=25625) உலகம் இறுதிக் காலத்தை அடையும்.
இப்போ, நவீன வானவியல் என்ன சொல்கிறது என்று பாருங்கள்….!
மிகவும் விரைவான "வானியல் சுழற்சி" யாக நாள் இருக்கிறது .மேலும் சூரிய உதயத்தை சூரியன் திரும்பவும் பிறப்பதாக உருவகப்படுத்தலாம் .
இரண்டாவது குளிர் கால கதிர்த்திருப்பம்" winter solstice " ஆகும்.இதுவும் ஒரு சூரியனின் மறு பிறப்பு என கூறலாம் ஏனென்றால் ஒரு காலை பொழுதின் நீளம் வளர தொடங்குவதால் .மாறாக காலை பொழுது குறைந்து கொண்டு போனால் குளிர் கூடி எல்லா உயர்களையும் அழத்து விடும்
விண்மீன் மண்டலத்தின் [galaxy],மைய பகுதிக்கு அருகில் உள்ள வெளிச்சமான பகுதியை அங்கு கருமையான ஒரு பள்ளம் (Dark Rift) இருந்த போதும் சாதாரண கண்ணால் பார்க்க முடியும் .இதை மாயா இனத்தவர்கள் "படைப்பு தாய் கடவுளின்" கருவுற்ற வயிறு மாதிரி உருவகப்படுத்தினர். மேலும் பால்வெளி மண்டலத்தின் கருமையான பள்ளத்தை பிறவியின் கால்வாய் மாதிரி உருவகப்படுத்தினர்.இவ்வாறு மூன்றாவது மறு பிறவி சூரியன் கருமையான பள்ளத்தின் நடுப்பகுதிக்கு போகும் போது ஏற்படுகிறது . இதை " galactic rebirth "என அழைக்கலாம்.
மாயான் இந்த நாளை தேர்ந் எடுத்தற்கு காரணம் சூரியனின் நிலையே .சூரியன் கருமையான பள்ளத்தின் நடுப்பகுதியில் ,குளிர் கால கதிர்த்திருப்பம் ஏற்படும் அதே நேரத்தில் நிற்கும் .அதாவது இது சூரியனின் மூன்று பிறவிகளையும் ஒரே நேரத்தில் ஏற்படுத்தும் !!சூரியன் நாலு நட்சத்திரங்களின்[mars ,pluto ,mercury ,venus ] மத்தியிலும் இருக்கும் !!! அது மட்டும் அல்ல வீனஸ் இந்த புனித நட்சத்திர மரத்தின் , பால் வெளி மண்டலத்தை குறுக்காக கடந்து போகும் அணிவகுப்பிறகு தலைமை தாங்கும்.இந்த கூட்டு செயலால் தான் இந்த நாளை,மார்கழி 21, 2012 மாயான் தேர்ந்து எடுத்தான்
சூரியன், பால் வெளி மண்டலத்தை கடப்பதை மாயா இனத்தவர்கள் [மாயான்] ,தந்தை "சூரியன்" ,தாய் "பால் வெளி மண்டல"த்துடன் புணர்வதாக பார்த்தான் .இந்த காதல் புணர்ச்சியின் விளைவு தான் “a new world age,”புது யுகம் என மாயான் அழைத்தான் .இது தான் நீண்ட கணிப்பு நாட்காட்டியின் புது சுழற்சியை குறிப்பதாகும் என் கருதினான் .
ஆகவே இந்த " 2012,அதாவது மார்கழி 21, 2012 " இல் நடப்பது காதல் புரிதலும் அதனால் ஏற்படும் படைப்பும் ஆகும் .சாவும் அழிவும் அல்ல !!
மேலதிக குறிப்பு:
’மாயன்’ என அழைக்கப்படும் மக்கள் வேறு யாருமல்லர். நம் சங்க இலக்கியங்கலில்[300 BC to 300 AD] குறிப்பிடப்படும் ’மயன்’ வழி வந்தவர்கள்தான்". என நியூ மெக்சிகோவிற்குப் போய் Mayonic Culture[ஐந்திறம் அல்லது அய்ந்திறம்- மயன் என்பவரால் எழுதப்பட்டதாக கருதப்படும் கட்டிடக்கலை நூல்.]. குறித்து ஆராய்ச்சி செய்த,பத்மபூஷன் டாக்டர் வை. கணபதி ஸ்தபதி அவர்கள் கூறுகிறார்.மேலும் " Gene D. Matlock " என்பவரும் தனது கட்டுரையில் " LINGUISTIC EVIDENCE shows THAT THE MAYANS WERE FROM CEYLON. "என்றும் " The Tamils and all the tribes of Meso-America, from Mexico to Panama, played the same board game: Pachesi[thayam games] "என்றும்" The Lankans, Olmecs and Mayans even had similar mythologies! -Jaguar mating with Olmec woman."என்றும்,வேறும் பல ஆதாரங்களுடன் கூறுகிறார். http://www.viewzone.com/ancientturks.html
“மயன் விதித்தன்ன மணிக்கால் அமளி” "
[-சிலப்பதிகாரம்-]
திரு சந்திரகாசன் ஒரு அறிவியல் விளக்கம் தந்துவிட்டார். எனினும் நாட்காட்டியின் சிறு விளக்கத்தையும் இந்த நாளை தேர்ந் எடுத்தற்கான காரணத்தையும் கூறி , அவனே சாவையும் அழிவையும் கூறவில்லை- என்ற பதிலை இங்கு தருகிறேன்
ReplyDeleteமாயன் காலண்டர் என்னதான் சொல்ல வருகிறது, பார்ப்போமா?
முதலாவது , 260 நாட்கணக்கு கொண்ட புனித நாட்காட்டி.
இரண்டாவது,365 நாட்களைக் கொண்ட உழவுத் தொழிலை –அடிப்படையாகக் கொண்ட நாட்காட்டி.
மூன்றாவது, சூரியக் குடும்பத்தின் ஒட்டு மொத்த அசைவுகளைக் கொண்டு கணக்கிடப்பட்ட நீண்ட 'காலக் கணக்கைக் கொண்டது. இதுதான் எங்கள் உலக அழிவு பற்றி இன்று பேசப்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்த நாட்காட்டி.
மாயனின் இந்த நாட்காட்டி கி.மு. 3114 ஆவணி மாதம் 11ம் திகதியிலிருந்து ஆரம்பமாகி கி.பி. 2012 மார்கழி மாதம் 21ம் திகதி,5125 வருடங்களை கடந்து முடிவடைகிறது.இது போலவே இந்துக்களின் இப்ப நடைபெறும் கலி யுகம்,3102 BC இல் இருந்து ஆரம்பமாகி இப்ப 5114 வருடங்களை கடந்துள்ளது.
இது போல மொத்தமாக ஐந்து முழுச் சுற்றுகள் சுற்றி முடிய, பூமி தனது இறுதிக் காலத்தை அடையும் என்பது மாயன்களின் கணிப்பு. அதாவது கிட்டத்தட்ட 26000 வருடங்களில் (5×5125=25625) உலகம் இறுதிக் காலத்தை அடையும்.
இப்போ, நவீன வானவியல் என்ன சொல்கிறது என்று பாருங்கள்….!
மிகவும் விரைவான "வானியல் சுழற்சி" யாக நாள் இருக்கிறது .மேலும் சூரிய உதயத்தை சூரியன் திரும்பவும் பிறப்பதாக உருவகப்படுத்தலாம் .
இரண்டாவது குளிர் கால கதிர்த்திருப்பம்" winter solstice " ஆகும்.இதுவும் ஒரு சூரியனின் மறு பிறப்பு என கூறலாம் ஏனென்றால் ஒரு காலை பொழுதின் நீளம் வளர தொடங்குவதால் .மாறாக காலை பொழுது குறைந்து கொண்டு போனால் குளிர் கூடி எல்லா உயர்களையும் அழத்து விடும்
விண்மீன் மண்டலத்தின் [galaxy],மைய பகுதிக்கு அருகில் உள்ள வெளிச்சமான பகுதியை அங்கு கருமையான ஒரு பள்ளம் (Dark Rift) இருந்த போதும் சாதாரண கண்ணால் பார்க்க முடியும் .இதை மாயா இனத்தவர்கள் "படைப்பு தாய் கடவுளின்" கருவுற்ற வயிறு மாதிரி உருவகப்படுத்தினர். மேலும் பால்வெளி மண்டலத்தின் கருமையான பள்ளத்தை பிறவியின் கால்வாய் மாதிரி உருவகப்படுத்தினர்.இவ்வாறு மூன்றாவது மறு பிறவி சூரியன் கருமையான பள்ளத்தின் நடுப்பகுதிக்கு போகும் போது ஏற்படுகிறது . இதை " galactic rebirth "என அழைக்கலாம்.
மாயான் இந்த நாளை தேர்ந் எடுத்தற்கு காரணம் சூரியனின் நிலையே .சூரியன் கருமையான பள்ளத்தின் நடுப்பகுதியில் ,குளிர் கால கதிர்த்திருப்பம் ஏற்படும் அதே நேரத்தில் நிற்கும் .அதாவது இது சூரியனின் மூன்று பிறவிகளையும் ஒரே நேரத்தில் ஏற்படுத்தும் !!சூரியன் நாலு நட்சத்திரங்களின்[mars ,pluto ,mercury ,venus ] மத்தியிலும் இருக்கும் !!! அது மட்டும் அல்ல வீனஸ் இந்த புனித நட்சத்திர மரத்தின் , பால் வெளி மண்டலத்தை குறுக்காக கடந்து போகும் அணிவகுப்பிறகு தலைமை தாங்கும்.இந்த கூட்டு செயலால் தான் இந்த நாளை,மார்கழி 21, 2012 மாயான் தேர்ந்து எடுத்தான்
சூரியன், பால் வெளி மண்டலத்தை கடப்பதை மாயா இனத்தவர்கள் [மாயான்] ,தந்தை "சூரியன்" ,தாய் "பால் வெளி மண்டல"த்துடன் புணர்வதாக பார்த்தான் .இந்த காதல் புணர்ச்சியின் விளைவு தான் “a new world age,”புது யுகம் என மாயான் அழைத்தான் .இது தான் நீண்ட கணிப்பு நாட்காட்டியின் புது சுழற்சியை குறிப்பதாகும் என் கருதினான் .
ஆகவே இந்த " 2012,அதாவது மார்கழி 21, 2012 " இல் நடப்பது காதல் புரிதலும் அதனால் ஏற்படும் படைப்பும் ஆகும் .சாவும் அழிவும் அல்ல !!
மேலதிக குறிப்பு:
’மாயன்’ என அழைக்கப்படும் மக்கள் வேறு யாருமல்லர். நம் சங்க இலக்கியங்கலில்[300 BC to 300 AD] குறிப்பிடப்படும் ’மயன்’ வழி வந்தவர்கள்தான்". என நியூ மெக்சிகோவிற்குப் போய் Mayonic Culture[ஐந்திறம் அல்லது அய்ந்திறம்- மயன் என்பவரால் எழுதப்பட்டதாக கருதப்படும் கட்டிடக்கலை நூல்.]. குறித்து ஆராய்ச்சி செய்த,பத்மபூஷன் டாக்டர் வை. கணபதி ஸ்தபதி அவர்கள் கூறுகிறார்.மேலும் " Gene D. Matlock " என்பவரும் தனது கட்டுரையில் " LINGUISTIC EVIDENCE shows THAT THE MAYANS WERE FROM CEYLON. "என்றும் " The Tamils and all the tribes of Meso-America, from Mexico to Panama, played the same board game: Pachesi[thayam games] "என்றும்" The Lankans, Olmecs and Mayans even had similar mythologies! -Jaguar mating with Olmec woman."என்றும்,வேறும் பல ஆதாரங்களுடன் கூறுகிறார். http://www.viewzone.com/ancientturks.html
“மயன் விதித்தன்ன மணிக்கால் அமளி” "
[-சிலப்பதிகாரம்-]
அப்பாடா!நீங்கள் கூ றியது போன்று நாம் அழியவில்லை.
ReplyDelete