ரெடி உணவுகளில் இருக்கும் சில ஆபத்துகள்


முடிந்தவரையில் எப்போதும் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படாத உணவுகளை சாப்பிடுவதே உடலுக்கு நலமானது. ஆயினும், நேரம் கிடைக்காதபோது அவசரத்துக்கு பாக்கெட்டுகளில் விற்கும் உணவுகளை சாப்பிடவேண்டிய நிலைக்கு வருகிறோம். உதாரணமாக, இரண்டு நிமிட நூடூல்ஸ், உருளைக்கிழங்கு சிப்ஸ், சோடா, பழரச பானங்கள், சாக்கலேட் போன்று தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்டு பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு உண்பதற்கு தயாராக விற்பனை செய்யப்படும் உணவுவகைகளை கூறலாம்.

அதிகரித்து வரும் தொழில்மயத்தில் இவ்வாறு உணவுவகைகளும் தொழில்மயப்பட்டு நமது ஒவ்வொரு வேளை உணவிலும் இப்படிப்பட்ட தயார் உணவுகளை சாப்பிடாமல் தவிர்ப்பது என்பது சிரமமாகவே ஆகிவருகிறது. இப்படி தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னாலும், இப்படிப்பட்ட உணவு வகைகளில் சில பயங்கரமானவை, அதி ஆபத்தானவை. இப்படிப் பட்ட ஆபத்தான உணவுகளை குறைப்பது அல்ல, முற்றிலுமாகவே தவிர்க்க வேண்டும்.

இந்தியாவில் தயாரித்து விற்கப்படும் இந்த தொழிற்சாலை உணவுகளில் என்ன இருக்கிறது எனப்தும், அவற்றில் என்ன சேர்த்தாலும் அவற்றை பிரசுரிக்க வேண்டும் என்பதும் கட்டாயமாக இருக்கிறது. ஆனால், அவ்வாறு முழுக்க முழுக்க அனைத்து பொருட்களையும் அட்டையில் போடுவதில்லை என்பதே உண்மை.

கீழே கொடுக்கப் பட்டிருக்கும் பொருட்கள் பல்வேறு ரெடி உணவு வகைகளில் சேர்க்கப் படுகின்றன. அவை கெட்டுப் போகாமலிருப்பதற்காகவும், அவற்றிற்கு கவர்ச்சிகரமான வண்ணம் கொடுக்கவும், அவற்றிற்கு சுவையை அதிகரிக்கவும், அவற்றிற்கு மணம் கொடுக்கவும் சேர்க்கப்படும் இப்படிப்பட்ட செயற்கைப் பொருட்கள் உடலுக்கு தீங்கிழைக்கின்றன.

கீழே இருக்கும் பொருட்கள் முற்று முடிவானவை அல்ல. அவை ஒரு சாம்பிள் மட்டுமே.

சேர்க்கப்படும் பொருள்: செயற்கை வண்ணங்கள், இவை நிலக்கரி கழிவிலிருந்து உருவாக்கப்படுகின்றன.
எதற்காக சேர்க்கப்படுகிறது: உணவுப்பொருட்களுக்கு ஆழ்ந்த கவர்ச்சிகரமான வண்ணம் கொடுப்பதற்காக உபயோகப் படுத்தப் படுகின்றன.
ஏன் தீமை?: இவை மனித உடலில் பல ஒவ்வாமை (allergy)களை தோற்றுவிக்கின்றன. ஆஸ்த்மா, களைப்பு, தோல் வியாதிகள், தலைவலி, hyperactivity என்னும் அமைதியற்ற தன்மை.
மேலதிக தகவல்கள்: yellow#2, red#1 என்றுதான் இந்த வண்ணங்கள் அழைக்கபப்டும். இவற்றில் என்ன இருக்கிறது என்பதை உணவு தொழிற்சாலைகளில் உழைப்பவர்கள் கூட அறியமாட்டார்கள். 

சேர்க்கப்படும் பொருள்: செயற்கை மணங்கள் எதற்காக சேர்க்கப்படுகிறது: உணவுப்பொருட்களுக்கு மூக்கை துளைக்கும் சாப்பாட்டு மணத்தை கொடுக்க
ஏன் தீமை?: இவையும் மனித உடலில் பல ஒவ்வாமைகளை (அலர்ஜி) தோற்றுவிக்கின்றன. தோல்சொறி, எக்ஸீமா, hyperactivity என்னும் அமைதியற்ற தன்மை உருவாகிறது. இவை உடலில் இருக்கும் என்சைம்களையும் ஆர்.என்.ஏ(RNA), தைராய்டு சுரப்பி ஆகியவற்றையும் பாதிக்கின்றன.

சேர்க்கப்படும் பொருள்: செயற்கை இனிப்பு, அதாவது செயற்கை சர்க்கரை (Acesulfame-K, Aspartame, Equal®, NutraSweet®,  Saccharin, Sweet’n Low®, Sucralose, Splenda® & Sorbitol), இவை செயற்கையாக உருவாக்கப்பட்ட, கலோரி தராத இனிப்புகள்.
எதற்காக சேர்க்கப்படுகிறது: டயட் (diet) உணவு வகைகளில் இனிப்பும் குறையக்கூடாது, அதே நேரம் கலோரியும் குறைவாக இருக்கவேண்டும் என்பதற்காக இவை சேர்க்கப்படுகின்றன.
ஏன் தீமை?: இவற்றில் பல செயற்கை சர்க்கரைகள், புற்றுநோய், தலைசுற்றல், மனப்பிராந்தி, தலைவலி கொடுப்பதாக ஆராய்ச்சிகளில் தெரியவருகிறது.

சேர்க்கப்படும் பொருள்: பென்சோயேட் தடுப்பான்கள் – Benzoate Preservatives (BHT, BHA, TBHQ)
எதற்காக சேர்க்கப்படுகிறது: கொழுப்புகள், எண்ணெய்கள், ஆகியவை கெட்டுப்போகாமல் இருக்க (அல்லது பழைய எண்ணெய் வாடை வீசாமல் இருக்க) இவை சேர்க்கப்படுகின்றன.
ஏன் தீமை?: ஆஸ்த்மா, rhinitis, dermatitis, கட்டிகள்,urticaria ஆகியவை தோன்றலாம். இதுவும் ஹைப்பர் ஆக்டிவிடி என்னும் அமைதியற்ற தன்மையை உருவாக்குகிறது. இது மனித உடலில் உள்ள எஸ்ட்ரோஜன் சமன்பாட்டை குலைக்கிறது.

சேர்க்கப்படும் பொருள்: புரோமினேட்டட் தாவர எண்ணெய் – Brominated Vegetable Oil – BVO.
எதற்காக சேர்க்கப்படுகிறது: ஆரஞ்சுச் சாறு, சோடா, குளிர்பானங்களில் சேர்க்கப்படுகிறது. இது அவற்றின் ருசியை அதிகரிக்கிறது.
ஏன் தீமை?: இது உடலில் உள்ள டிரைகிளிசரைடுகள், கொலஸ்ட்ரால் ஆகியவற்றை அதிகரிக்கிறது. இது ஈரல், விதைப்பைகள், தைராய்டு சுரப்பி, இதயம், கிட்னி ஆகியவற்றை பாதிக்கிறது.

சேர்க்கப்படும் பொருள்: ஹை ஃப்ரக்டோஸ் கார்ன் சிரப் – High Fructose Corn Syrup
எதற்காக சேர்க்கப்படுகிறது: கரும்பு சர்க்கரைக்கு மாற்றாக உபயோகிக்கப் படுகிறது. இது எளிதில்
குளிர்பானங்களுடன் கலந்து இனிப்பு சுவையை அதிகரிக்கிறது.
ஏன் தீமை?: இது உடலில் உள்ள ப்ரக்டோஸ் fructose கொழுப்பாக ஆவதை அதிகரிக்கிறது. இது நீரிழிவு, இதய நோய், மாரடைப்பு, புற்றுநோய் அதிகரிக்க காரணமாகிறது. இது எளிதில் ஈரலால் செரிக்கப் படுவதில்லை.

சேர்க்கப்படும் பொருள்: அஜினோமோடோ – Monosodium Glutamate எனப்படும் MSG
எதற்காக சேர்க்கப்படுகிறது: உருளைக்கிழங்கு சிப்ஸ், ரெஸ்டாரண்ட் சாப்பாடு, சூப்கள் மற்றும் ஏராளமான உணவுகளில் இது ருசியை அதிகரிப்பதற்காக சேர்க்கப்படுகிறது
ஏன் தீமை?: பசியை அதிகரிக்கிறது. தலைவலி, நெஞ்செரிச்சல், தலைசுற்று, பலவீனம், மூச்சு வாங்குதல், வீக்கம், இதயத்துடிப்பில் மாற்றம், மூச்சுவிட கஷ்டம் ஆகியவற்றைக் கொடுக்கலாம்.

சேர்க்கப்படும் பொருள்: ஓலெஸ்ட்ரா – Olestra. இது செரிக்கமுடியாத செயற்கை கொழுப்பு.
எதற்காக சேர்க்கப்படுகிறது: இது உருளைக்கிழங்கு சிப்ஸ், போன்றவற்றை வறுக்கவும், கொழுப்புக்கு பதிலாக பேக்கிங்கில் உபயோகப்படுத்தப்படுகிறது. இதில் கொழுப்பு சத்தே இல்லை என்பதால், கொழுப்பு சத்து குறைவாக உள்ளதாக உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்றவற்றை விளம்பரம் செய்யமுடிகிறது
ஏன் தீமை?: இது பல உணவுச்சத்துக்களை நம்மால் செரிக்க முடியாமல் ஆக்குகிறது. இது
வயிற்றுக்குழாய் வியாதிகள், வயிற்றுப்போக்கு, வயிற்று பிடிப்பு, ரத்தம் போகுதல் ஆகியவற்றை கொடுப்பதாக அறியப்படுகிறது.


maggi-masala_1_1thumbnailசேர்க்கப்படும் பொருள்: டால்டா, மார்கரைன்
எதற்காக சேர்க்கப்படுகிறது: வெண்ணெய்க்கு பதிலாக இது விலைகுறைந்த மாற்றாக உபயோகப் படுத்தப் படுகிறது.இது தொழிற்சாலைகளில் தாவர எண்ணெய்களை மிக அதிகமான வெப்பத்தில் நீராவியோடு கலந்து வேதிவினையின் பின்னர் உருவாக்கப்படுகிறது.
ஏன் தீமை?:இவை transfat என்று அழைக்கப்படுகின்றன.இவை மனித உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கும், இதய நோய் அதிகரிப்பதற்கும், மாரடைப்புக்கும் முக்கியமான ஒரு காரணியாக சொல்லப்படுகிறது.

நீங்கள் சாப்பிடும் பொருட்களை பரிசோதித்து பாருங்கள். அவற்றில் மேற்கண்ட பொருட்கள் இருந்தால் எச்சரிக்கையாக இருங்கள்.

0 comments:

Post a Comment