உங்களுக்குள்ள நோயினை சுட்டிக் காட்டும் நகங்களும் பராமரிப்பும்


மருத்துவ உலகில் நகங்களை வைத்தே நம் முடைய உடலில் என்ன பிரச்சி னை என்று கூறி விடுகிறார்கள் மருத்துவ அறிஞர்கள். நகங்கள் விரல்களுக்கு அழகு சேர்க்க மட்டு மல்ல, கரட்டின் என்ற புரதச் சத்தைக் கொண்ட நகங்கள் விரல் நுனி வரை பரவியுள்ள நரம்பு மற்றும் இரத்தக் குழாய் களை பாதுகாக்கக் கூடி ஒரு அமைப்பாகும். நகங்கள் இல்லாவிட்டால் விரல்களின் முனை களில் கடினத் தன் மை ஏற்பட்டு விடும்..
 நகங்கள் மிருதுவானவை.
விரல்களின் சதைப் பகுதியி ன் அடிப் பாகத்தில் இருப்பது. பொதுவாக ஆண்களுக்கு அதி வளர்ச்சியும், பெண்களுக் கு பிரசவ காலங்களிலும், வயதான காலங்களிலும் வள ர்ச்சி அதிகமாக இருக்கும். பொதுவாக நகங்கள் இளஞ் சிவப்பு நிறத்தில் இருக்கும். ஆனால் நமது உடலில் ஏற்ப டுகின்ற பாதிப்புகளைப் பொறுத்து நகங்களின் நிறம் வேறுபட்டி ருக்கும்.
ஈரல் பாதிக்கப்பட்டிருந்தால் நகங்கள் வெண்மையாக இருக்கும்..
 சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டிருந்தால் நகங்களின் வளர்ச்சி குறைந்து பாதி நகங்கள் சிவப்பாக இருக்கு ம்.
மஞ்சள் காமாலையால் பாதி க்கப்பட்டிருந்தால் நகங்கள் மஞ் சள் நிறத்தில் காணப்படும்
இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் நகங்கள் அழுத்தமான இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.
இதயத்தில் ஓட்டை ஏற்பட்டு நல்ல இரத்தமும், கெட்ட இரத்தமும்  கல ந்திருந்தால் நகங்கள் நீல நிறத்தில் இருக்கும்.
நாள் பட்ட நுரையீரல், இதய நோய் உள்ளவர்களுக்கு நகங்கள் கிளி மூக்கு போல வளைந்து இருக்கும்.
இரத்தச் சோகை ஏற்பட்டு இரும்புச்சத்து குறைவாக இருந்தால் நகங் கள் வெளுத்து குழியாக இருக் கும்.
சர்க்கரையின் அளவு அதிகமாகவும், புரதம் மற்று ம் துத்தநாக சத்து குறைவாகவும் இருந்தால் நகத்தில் வெண்தி ட்டுக்கள் காணப்படும்.
நகத்தில் மஞ்சள் கோடுகள் இருப்பதற்கு காரணம், புகைபிடிப்பத னால் நிக்கோடின் கறை படிந்து ஏற்பட் டதாக இருக்கலாம். நகங்களுக்கு பொலி ஷ் தீட்டுவதால் ஏற்பட்ட இரசாயன மாற்றத்தின் காரணமாகவும் மஞ்சள் கோடுகள் இருக்கலாம்.
நகத்தில் சின்ன சின்னக் குழிகள் உண்டாகி, அவற்றில் வெடிப்பு ஏற்பட்டு செதில் செதிலாக உதிர்ந்தால் சொரியாசிஸ் என்ற தோல் வியாதியின் அறிகுறியாகும்..
இரத்தத்தில் போதிய அளவுக்கு ஒட்சிசன் இல்லாவிட்டால் நகங் கள் நீலமாக இருக்கும்ஆர்சனிக் என்ற நச்சுகளால் பாதிக்கப் பட்டி ருந்தால் நகங்கள் நீலநிறத்தில் காணப் படும். இரத் தத்தில் சர்க்கரை அதிக அளவு இருந் தால் குறை த்துக் கொள்ள வேண்டும்.
நகச்சுற்றுஎவ்வாறு ஏற்படுகிறது?

  • நகம் கடிக்கும் பழக்கம் உள்ளவர்களிடையே ஏற்படுவது மிக அதிகம்.
  • கை சூப்பும் பழக்கம் உள்ள குழந்தைகளிடமும் ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம்.
  •  நகத்தை வெட்டும்போது சற்று ஆழமாக வெட்டி நகமடலைச் சேதமாக்குவதாலும் ஏற்படலாம். அவ்வாறான செய்கைகளின் போது ஏற்படும் சிறுகாயங்களில் கிருமி தொற்றிச் சீழ் பிடிப்பதால் இது ஏற்படுகிறது.
  • சமையல் வேலை, தோட்ட வேலை, தச்சு வேலை போன்ற காயம் ஏற்படக் கூடிய எந்த வேலைகளின் போதும் தற்செயலாக அவ்விடத்தில் ஏற்படும் சிறுகாயங்களில் கிருமி தொற்றி நகச்சுற்றை ஏற்படுத்தும்.
  • சில சருமநோய்களால் ஏற்படலாம். பெம்பிகஸ் (Pemphigus Vulgaris) போன்ற நோய்களால் சருமத்தின் மிருதுத்தன்மை பாதிப்படையும்போது அதில் கிருமித் தொற்று ஏற்பட்டும் வரலாம்.

நகங்களின் நுனிப்பகு திகளை முழுவதுமா வெட்ட க்கூடாது. அவ்வாறு வெட்டினால் நகத்தை மூடி சதை வளர்ந்து அதிக வலியினை  ஏற்படுத்தும். நகத்தினை பற்களால் கடிக்கக்கூடாது. இதனால் நகங்கள் உடைந்து போக வாய்ப்பு அதிகம். நகம் வெட்டும் கருவியினால் மட்டுமே வெட்டவேண்டும்சாப்பிட்ட பின்னர் கைகளை கழுவும்போது நகங்களை யும் சுத்தம் செய்ய வேண்டும்நகங்களின் இடுக்குகளில் தங்கும் நுண் ணுயிரிகளால் வயிற்றுத் தொல்லை, வலி, வாந்தி, வயிற்றுப் போக்கு ஆகியவை உண்டாகும். நகங்கள் அழகுடன் திகழ, காய்கனிகள் நிறைய உட்கொள்ளவேண்டும். இரவில் குளிர்ந்த நீரினால் கை மற்றும் கால் நகங்களை சுத்தமாக கழுவிக் கொள்ள வேண் டும்.

0 comments:

Post a Comment