ரஜினி நடிக்கும் புதுபடம் -படப்பிடிப்பு துவங்கியது

ஜினி நடிக்கும் புதுபடம் லிங்கா?: படப்பிடிப்பு துவங்கியது
அனுஷ்கா
ரஜினியின் 'கோச்சடையான்' படம் வருகிற 9–ந் தேதி ரிலீசாகிறது. மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் ஹாலிவுட் படங்களானஅவதார், ‘டின்டின்சாயலில் இப்படத்தை எடுத்துள்ளனர். ஆறு மொழிகளில் தயாராகியுள்ளது.
இந்த படத்துக்கு பிறகு ரஜினி தொடர்ந்து நடிப்பாரா, மாட்டாரா? நடிப்பதாக இருந்தால் யார் இயக்கத்தில் நடிப்பார் என்பன போன்ற கேள்விகள் வந்த வண்ணம் இருந்தன. அதற்கு விடையாக கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் அடுத்து நடிப்பது உறுதியாகியுள்ளது. இந்த படத்துக்குலிங்காஎன்று பெயர் வைக்க பரிசீலிப்பதாக கூறப்படுகிறது.

லிங்கா என்பது ரஜினியின் பேரன் பெயர் ஆகும். படப்பிடிப்பு மைசூரில் துவங்கியுள்ளது. இதற்காக அங்கு அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் நடிப்பதற்காக ரஜினி மைசூர் புறப்பட்டு செல்கிறார். ஒரு மாதம் அங்கு தங்கி இருந்து நடிக்கிறார்

சோனாக்சி சின்ஹா
இந்த படத்தில் ரஜினிக்கு இரண்டு வேடமாம். தந்தை, மகன் கேரக்டரில் வருகிறார். கதாநாயகியாக நடிப்பது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ரஜினியும், கே.எஸ்.ரவிக்குமாரும் பல நடிகைகளை பரிசீலித்தனர். இறுதியில் அனுஷ்காவும், இந்தி நடிகை சோனாக்சி சின்ஹாவும் தேர்வாகியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. ஏற்கனவே ரஜினியை வைத்து கே.எஸ்.ரவிகுமார் பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார்.0 comments:

Post a Comment