கவி -:முட்டி மோதி போகும் பெண்ணே!!!!
ஒட்டி   உடையில் பெண்மை காட்டி

எட்டி   நடையில் வேகம்  காட்டி

சுட்டி   விடையில் புத்தி காட்டி

வெட்டி பேச்சில் வெகுளி காட்டி

தட்டி   கழித்து நாணம்  காட்டி

முட்டி  மோதி போகும் பெண்ணே!

 

பட்டி   தொட்டி எங்கும் சொல்லி

கட்டி   தங்கம் வெட்டி எடுத்து

செட்டி  செய்த மோதிரம் மாற்றி

மெட்டி காலில் கண் சிமிட்ட

தட்டி   கேட்க துணை சேர

ஒட்டி   உரசி போகலாம் பெண்ணே!!

 

மூட்டி  அடுப்பில் சமைக்க வேண்டும்

கூட்டி  பெருக்கி துடைக்க வேண்டும்

ஊட்டி  பிள்ளை  வளர்க்க வேண்டும்

லூட்டி  அடித்து குழப்ப வேண்டும்

போட்டி போட்டு கொஞ்ச  வேண்டும்

சீட்டி   அடித்து  சிரிக்கும்   பெண்ணே!!!

 

நாட்டி   வளர்த்த காதல் எல்லாம்

ஈட்டி   ஆக உன்னை துளைக்க

பாட்டி  சொன்ன கதை எல்லாம்

கூட்டி  குழைத்து  உனக்கு தர

ஆட்டி  அலைய  விடாதே பெண்ணே

நொட்டி நொடிய விடாதே பெண்ணே!!!!

 

[ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]0 comments:

Post a Comment