நாயா?மனிதனா?''வொவ் ,வொவ் ''-குறும்படம்

நாயா?மனிதனா?''-குறும்படம்
📽📽📽📽📽📽📽📽📽

இவ்வாரம் வெளியான புதிய திரைப்படங்கள்  

படம்:சேஸிங்

நடிகர்கள்: வரலக்ஷ்மி சரத்குமார், பால சரவணன், இமாம் அண்ணாச்சி

இயக்கம்: கே வீரக்குமார்

விமர்சனம் சுருக்கம்: இளம் பெண்களை போதை மருந்து கொடுத்து பலாத்காரம் செய்யும் வில்லன்போதை மருந்து கடத்தி விற்கும் கூட்டம் என ஒவ்வொன்றையும் அழிக்கும் வேலையில் இறங்கும் ஒரு போலீஸ் அதிகாரியான நாயகியின் கதை.மொத்தத்தில் ‘சேஸிங்’ விறுவிறுப்பில்லை.

வெளியீடு: 16, ஏப்ரல், 2021

மதிப்பீடு: 2.5/5

 🙈🙉🙊

படம்:99 சாங்ஸ்  

நடிகர்கள்: எகன் பட், எடில்ஸி வர்கஸ்

இயக்கம்: விஷ்வஸ் கிருஷ்ணமூர்த்தி

விமர்சனம் சுருக்கம்: படத்தின் உண்மையான நாயகன் என்றால், அது ஏ.ஆர்.ரகுமானின் இசையும், பாடல்களும் தான்.மற்றும்படி ஒருவரியில் கூறப் போனால் , காதலியின் தந்தையின் நிபந்தனையை ஏற்று பாடல்கள் பாடித் தன் காதலை நிறைவேற்றிய ஒரு நாயகனின் கதை.சில இடங்களில் புரியாத வசனங்கள்.

வெளியீடு:  16,ஏப்ரல், 2021

மதிப்பீடு: 2.5/5

 🙈🙉🙊

படம்:பரமபதம் விளையாட்டு   

நடிகர்கள்: திரிஷா கிருஷ்ணன், நந்தா, வேல ராமமூர்த்தி, மானஸ்வி கொட்டாச்சி, ஏ எல் அழகப்பன், சாம்ஸ், ரிச்சர்ட் ரிஷி

இயக்கம்: திருஞானம்

விமர்சனம் சுருக்கம்:நேர்மையான கட்சித் தலைவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட, அவர் மருத்து வமனையில் அனுமதிக்கப்படுகிறார். அவருக்கு திர்ஷா தலைமையில் சிகிச்சை யளிக்கப்படுகிறது. இதற்கிடையே கட்சிக்காரர்கள் கொடுக்கும் குடைச்சல்கள். நோயுற்றிருப்பவரைச் சுற்றி நடக்கும் அரசியல் சூழ்ச்சிகள் ஆகியவற்றை எப்படி அறுத்தெறிந்து திர்ஷா வெளியே வருகிறார் என்பதுதான் கதை.

வெளியீடு: 14, ஏப்ரல், 2021

மதிப்பீடு: 2/5

 🙈🙉🙊

படம்:வணக்கம் டா மாப்ள  

நடிகர்கள்: ஜி வி பிரகாஷ் குமார், அம்ரித்தா ஐயர், டேனியல் ஆன்னி போப், சௌந்தர்யா பால நந்தகுமார், ஆனந்தராஜ், ஜெயப்பிரகாஷ், பிரகதி, ரேஷ்மா பசுபுலேட்டி, எம் எஸ் பாஸ்கர், யோகி பாபு

இயக்கம்: எம் ராஜேஷ்

விமர்சனம் சுருக்கம்:கல்லூரி நண்பர்கள் ஜீ.வி.பிரகாஷ், டேனியல் பேர்வெல் பார்ட்டியின் போது கால்யாணம் பண்ணுனா ரெண்டு பேரும் ஒரே தேதியில் ஒரே மேடையில் தான் கல்யாணம் பண்ணுவோம் என்று சபதம் செய்கிறார்கள். பின்னர் என்ன ஜி.வி.பிரகாஷ்-க்கு காதலி கிடைத்தாரா? இருவரும் செய்து கொண்ட சத்தியத்தை காப்பாற்றினார்களா என்பதை கடுப்பாகும் படி காமெடி செய்து சொல்ல முயன்றிருக்கும் படம்.

வெளியீடு: 14, ஏப்ரல்,2021

மதிப்பீடு: 1.5/5

 🙈🙉🙊

படம்:சர்பத்       

நடிகர்கள்: கதிர், சூரி, ரஹஸ்யா கோரக், விவேக் பிரஷன்னா

மாரிமுத்து, சித்தார்த் விபின், ஜீவித்தா

இயக்கம்: பிரபாகரன்

விமர்சனம் சுருக்கம்: அண்ணனின் திருமணவீட்டுக்கு வந்த நாயகன் கண்ணில் ஒரு பெண் விரும்பப்படுகிறாள்.அப்பெண் தான் அன்று மணப்பெண் என அறியாமல் வந்த குழப்பங்கள் எவ்வாறு தீர்க்கப்பட்டன. தம்பியினதும் அண்ணனதும்  காதல் நிறைவேறியதா? சூரியின் அதிக பங்களிப்புடன் ஒரு நகைச்சுவை ப்படம்.

வெளியீடு: 11, ஏப்ரல், 2021

மதிப்பீடு: 3/5

தொகுப்பு:செ.மனுவேந்தன் 


0 comments:

Post a Comment