🔴'செல்போன் விபரீதம்' குறும் படம் & திரையின் புதினங்கள்


🔴குறும் படம்:

| இதை பார்த்தீர்களா ?|தெரியுமா ? |சுகுபார்வை ||உண்மை |...

தொலைபேசிப் பாவனைகளால் தொலைந்திடும் உயிர்கள் கண்டும், திருந்தாத உள்ளங்களுக்கு இக் குறும் படம் சமர்ப்பணம்.
 

திரையின் புதினங்கள் 

நடிகர் செல்லத்துரை


குணச்சித்திர நடிகர் செல்லத்துரை (வயது 84) மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். நாடகங்களில் நடித்த அவர் பின்னர் ரஜினிகாந்துடன் ‘சிவாஜி’, விஜய்யுடன் ‘நண்பன்’, ‘தெறி’, ‘கத்தி’, ஆர்யாவின் ‘ராஜா ராணி’, உதய நிதியுடன் ‘மனிதன்’, தனுசின் ‘மாரி’, நயன்தாராவுடன் ‘அறம்’ மற்றும் ‘நட்பே துணை’ உள்ளிட்ட பல படங்களிலும் , தமிழ் நாடகத் தொடர்களிலும்  நடித்து இருக்கிறார்.

 

ராட்சத குரங்கு

இந்திய திரையுலக வரலாற்றில் முதல்முறையாக ஒரு படத்துக்காக நவீன தொழில்நுட்பத்தில்நூறு என்ஜினீயர்கள் ஈடுபட்டு ,ராட்சத குரங்கு வடிவமைக்கப்படுகிறது. அந்த படத்தின் பெயர், ‘கபி’. “ஒரு பிரச்சினை தொடர்பாக குரங்கு செய்யும் சாகசங்களே படத்தின் கதை. இமயமலையில் இருந்து அந்த குரங்கு புறப்பட்டு கடல் தாண்டி செய்யும் வீரதீர சாகசங்கள் படம் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கும்” என்கிறார்கள்.

 

போலீஸ் அதிகாரி

ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் நகைச்சுவை நாயகனாக அறிமுகமான உதயநிதி ஸ்டாலின் முதன்முதலாக ஒரு படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். உதயநிதி ஜோடியாக தான்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார். படத்தில் இவருக்கு ஊடக நிருபர் வேடம்.

 

 

கர்ணன்’

தனுஷ் நடித்து வெளிவந்த ‘அசுரன்’ படம்தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய வசூல் சாதனை செய்தது.அந்த படத்தின் வசூல் சாதனையை அவர் நடித்து  திரைக்கு வந்த ‘கர்ணன்’ படம் முறியடித்து இருக்கிறது. தனுஷ் நடித்த படங்களிலேயே மிக அதிக வசூல் செய்ததும் இந்த படம்தான்.

படத்தின் மொத்த தயாரிப்பு செலவு ரூ.37 கோடி. வியாபாரம் ஆனதுரூ.52 கோடி. இதுவரை வசூல் செய்திருப்பது ரூ.54 கோடி. இதன் மூலம் தனுஷ் மார்க்கெட் நிலவரம் உயர்ந்து இருக்கிறது.

 

 

சீரியல் நடிகை காயத்ரி


அஜித்
குமார் நடிப்பில் தற்போது ‘’வலிமை’’ எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை எச். வினோத் இயக்கி வருகிறார். அஜித்துக்கு ஜோடியாக இதுவரை பல நடிகைகள் பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இந்நிலையில் தல அஜித்துக்கு ஜோடியாக சன் டிவி ரோஜா சீரியல் நடிகை காயத்ரி ‘’ராஜாவின் பார்வையிலே’’ எனும் படத்தில் நடித்துள்ளார்.

 

📂செ.மனுவேந்தன் 

 


0 comments:

Post a Comment