துன்பப் பிரளயம்

- ஊரிலிருந்து ஒரு கவிக்குயில்..


 எல்லைப் புறத்தில் யாருமே அற்ற...


பாழடைந்த வீட்டில் - அவள்
  கனவுகளோடு தனியாக வசிப்பவள்.

கல்யாணமாகி நான்கு மாதங்களுக்குள்
  கர்ப்பப்பை நிறைக்கப்பட்டபோதும் - அவள்
     கணவன் காலனால் களவெடுக்கப்பட்டான் .

கணவனுக்காய் கௌரி விரதம்
  அனுஸ்டித்ததில் - அவளுக்கு மிஞ்சியது.
    வறுமையும் வெறுமையும்...
      கூடவே வயிற்றில் குழந்தையும்...

அந்த உத்தமியை ஊரார்கள்
  விதவை என்றும்...விபச்சாரி என்றும்...
    மோசமாய் விவாதிப்பதுண்டு.

மழையில் நனைய நினைத்தால்
  குடையை கொண்டுவந்து நீட்டுபவர்களும்...
    வயிற்று கோளாறில் தவிக்கையில்
      விருந்துக்கு அழைப்பவர்கள்தான் இங்கே அதிகம்.

தெருவைக்கடக்கும் ஒவ்வொருவரும்
    அவள் குடிசையின் கதவை தட்டிப்பார்த்தபடியே....

"அதிகம் முதியவர்களின் கைரேகைதான்
 கதவில் படிந்திருக்கிறது "

ஆக்கம்:நெடுந்தீவு முகிலன்

2 comments:


  1. கணவனுக்காய் கௌரி விரதம்
    அனுஸ்டித்ததில் - அவளுக்கு மிஞ்சியது.............
    ஊர் உலவி வந்தபோது கண்டுணர்ந்த காட்சிகள்,உங்கள் கவி கொண்டிருந்த தெப்படியோ?

    ReplyDelete
  2. ஊர் கெட்டுப்போச்சுதண்ணே,ஊர் வாயை மூட முடியாதண்ணே

    ReplyDelete