இப்படியும் ஒரு பிறப்பு உலகத்திலே!!!பாடசாலைபோனதில்லை
பாடங்களும் படித்ததில்லை
நாடகங்கள் நடித்து யாமும்
நம்மினத்தை ஏமாற்றினதில்லை.குலுக்கல் சீட்டு பார்த்ததில்லை
காசுக் காசைப் பட்டதில்லை
கடவுளிடம்  கேட்டு யாமும்
கோவில் குளம் அலைந்ததில்லை.காதலித்து கண் கலங்கவில்லை
கண்டவனுடன் ஓடவில்லை
காத்தவன் கண்களிலே யாமும்
மண் தூவி மறையவில்லை.மதங்களைப் படைத்ததில்லை
மதங்கொண்டு வாழ்ந்ததில்லை
மந்திரவாதிகளின் பின் யாமும்
(இ)யந்திரமாய்  சுற்றியதில்லை.


காட்டியாரையும் கொடுக்கவில்லை 
மூட்டியூரையும் கெடுக்கவில்லை
ஊட்டி வளர்த்த உத்தமரிடம்  யாமும் 
நன்றி கெட்டு நடக்கவில்லை.


காணி பூமி பிடித்ததில்லை
காலனுக்கும் பயந்ததில்லை
மானிடரின் மனசுபோல யாமும் 
மானம்கெட்டு நடந்ததில்லை 


ஆக்கம்:செல்லத்துரை மனுவேந்தன்
மேலும், தாயிடம் இருந்து பிள்ளையை  காப்பாற்றும் நாய்களைப் பாருங்கள் 
7 comments:

 1. ஆமாம், நாயாய்ப் பிறந்திருந்தால் நல்லாய் இருந்திருக்கும்தான்!
  -Santhira

  ReplyDelete
 2. நாய்களைப்பற்றி நல்லாச் சொன்னீங்க!

  ReplyDelete
  Replies
  1. நாய்களின் குணத்தினை மேலும் அறிய theebam facebook ஐ அணுகுங்கள்

   Delete
 3. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 4. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 5. மனிதனைவிட நாய் எவ்வளவோ மேல் என்பதனை அடுக்கி வரைந்துள்ளீர்கள்

  ReplyDelete
 6. சொர்க்க லோகம் இந் நாய் பிறவியில் தான்

  ReplyDelete