தமிழர் போராடத்தில் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம்:-ஒரு சம்பவம்

இந்திய அரசும், மிதவாதத் தலைவர்கள் என்ற வகையிலேயே  கூட்டணியை ஆரம்பித்ததில் தட்டிக்கொடுத்து வந்தது.
{இயக்கங்கள் தமது சொற்படி நடக்காவிட்டாலும் கூட்டணியினர் தாம் சொல்வதை கேட்கக்கூடியவர்கள் என்று இந்திய அரசு நினைத்திருக்கலாம்.}
இந்த நேரத்தில் தான் அமுதருக்கு ஒரு எண்ணம் தோன்றியது.
இந்தியா இயக்கங்களுக்கு ஆயுதப்பயிற்சி கொடுப்பதால் குறிப்பிட்ட இயக்கங்கள் பலமாகிவிடும். ஆயுதங்களும் பெற்றுக்கொண்டு எதிர்காலத்தில் கூட்டணிக்கு (தமக்கு)மேலும் சவாலாகிவிடலாம்.
எனவே  கூட்டணிக்கும் ஒரு ஆயுதப் படையை உருவாக்குவதுதான் புத்திசாலித்தனம் என்று அமுதர் நினைத்தார்.

இளைய மகன் தலைவர்

அமுதருக்கு இரண்டு பிள்ளைகள். அதில் காண்டீபன் இலண்டனில் அரசியல் புகலிடம் பெற்றிருந்தார். இளைய மகன் பகீரதன் அமுதரோடு இருந்தார்.

பகீரதனை தலைவராக வைத்து கூட்டணியின் ஆயுதப்படையை உருவாக்கத் திட்டமிடப்பட்டது.

இந்தியா கூட்டணிக்குத்தான் பெரும் உதவிகளை செய்யப்போகிறது என்று கூறி பகீரதனும் சிலரும் சேர்ந்து இளைஞர்கள் சிலரை திரட்டினார்கள்.

இயக்கம் என்று இருந்தால்தானே இந்தியா பயிற்சி கொடுக்கும்:

அகிம்சையே எங்கள் மூச்சு: ஆயுதங்களை தூர வீசு.’ என்பதுபோலப் பேசிய கூட்டணியின் பெயரில் பயிற்சி பெறுவதோ, ஆயுதம் கேட்பதோ நன்றாகவா இருக்கும்? இருக்காதல்லவா?

அதனால் பகீரதனின் தலைமையிலான ஆயுதக் குழுவுக்கு தமிழீழ தேசிய விடுதலை இராணுவம் (ரெனா) என்று பெயரிடப்பட்டது.
தமிழ்நாட்டில் ஒரு முகாம் அமைத்து இளைஞர்களை வைத்திருந்தார்கள்.
பயிற்சி முகாம் என்று பெயர்தானே தவிர பயிற்சியும் இல்லை. ஆயுதங்களும் இல்லை. இந்திய பயிற்சிக்கு அனுப்பப் போவதாகக் கூறிக் கொண்டிருந்தார்களே தவிர அனுப்புவதாகத் தெரியவில்லை.
இன்று போகலாம். நாளை போகலாம் என்று நாட்களைக் கடத்தினார் பகீரதன். பொறுத்துப் பார்த்து வெறுத்துப்போன இளைஞர்கள் முகாமில் பொறுப்பாக இருந்தவரை அடித்துப் போட்டு விட்டு முகாமை விட்டு வெளியேறிச் சென்று விட்டார்கள். 
அந்த அடியோடு தமிழீழ தேசிய இராணுவம் (ரெனா) இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது.

கூட்டணியின் ஆயுதப்படை கட்டும் முயற்சி & ‘சீச்சி. இந்தப் பழம் புளிக்கும்கதையாக மாறிப்போனது.
காந்தீயவாதிகள் கத்தி எடுக்க நினைத்தார்கள். ஆனால் முயற்சி சித்தியடையவில்லை.

நன்றி:இரா.துரைரத்தினம்0 comments:

Post a Comment