"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய
இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective"
[In Tamil & English]
[This detailed Tamil article is based on the unfinished
historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran,
a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]
பகுதி: 45 A / பின் இணைப்பு - தீபவம்சம் / 'ஏன் அசோகனால் புத்த சமயம் பரப்பிய தமிழ் நாடுகளின் பெயர்கள், இலங்கை பண்டைய நூல்களில் குறிப்பிடப்படவில்லை?'
அத்தியாயம் 8, மொகாலிபுத்தாவால் [Moggaliputta] புத்தரின் நம்பிக்கையைப் பரப்புவதற்காக அண்டை நாடுகளுக்கு தூதுகளை அனுப்புவது பற்றியது. அசோகரின் பேரரசின் பரப்பளவு பற்றிய விபரத்தை, கீழே கொடுக்கப்பட்டுள்ள வரைபடத்தைப் பார்க்கவும். தமிழ் நாடுகளான சேர, சோழ, பாண்டிய நாடுகள் அசோகரின் பேரரசுக்கு தெற்கில் உள்ள அண்டை நாடுகளாகும், இதை அசோகர் தனது பதின்மூன்றாவது அரசாணையில் தெளிவுபடுத்தியுள்ளார். அசோகர் அண்டை நாடுகளுக்கு தரும தூதுகளை [பௌத்தத்தில் , தர்மம் (பாலி: தம்மம்) என்பது புத்தரின் போதனைகளைக் குறிக்கிறது. / Dhamma missions] அனுப்பியதாக பதின்மூன்றாவது சாசனத்தில் கூறுகிறார். அசோகரின் பேரரசுக்கு, இலங்கை அண்டை நாடாக இருக்கவில்லை. கிரேக்கம், கந்தாரா (இன்றைய ஆப்கானிஸ்தான்) மற்றும் தமிழ் நாடுகளான சோழ, பாண்டிய, கேரளம் மற்றும் சத்யபுத்ரா [Greek, Ghandara (present day Afghanistan), and various other places, including Tamil countries Chola, Pandya, Kerala, Satyaputra and Tamraparni] உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு தூதுவர்கள் அனுப்பப்பட்டனர் என்று குறிக்கப்பட்டுள்ளது. இதில, சத்யபுத்திரர்கள் யார் என்ற கேள்விக்கு விடையாக ஒரு பிராமி கல்வெட்டு கிடைத்தது. தென் இந்தியயாவின், திருக்கோவிலூருக்கு அருகில் உள்ள ஜம்பை என்னும் ஊரில் பொது வருடங்களுக்கு முன்பான முதலாம் நூற்றாண்டுக் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. தமிழ் பிராமியில் இருந்த இந்தக் கல்வெட்டில், “ஸதியபுதோ அதியந் நெடுமாந் அஞ்சி ஈத்த பாழி” என்று காணப்பட்டது, அதாவது, அதியன் நெடுமான் அஞ்சி கொடுத்த பாழி (இருப்பிடம்) என்பதைத் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், அவன் சத்யபுத்திரர் பரம்பரையில் வந்தவன் என்று பதிவுசெய்து, சத்யபுத்திரர் யார் என்று கேள்விக்கு விடையளித்தது இந்தக் கல்வெட்டு. அதாவது, தகடூரை ஆண்ட அதியமான்களே சத்யபுத்திரர் என்று சொல்லுகிறது.
எனினும், இந்த தீபவம்ச அத்தியாயத்தில் இந்த தமிழ் நாடுகள் குறிப்பிடப்படவில்லை. இந்த புறக்கணிப்பில் ஒரு மறைமுக நிகழ்ச்சி நிரல் கட்டாயம் இருக்க வேண்டும் அல்லது இந்த தமிழ் நாடுகள் ஏற்கனவே பௌத்த மதத்தை பின்பற்றி வருகின்றன என்பதை ஆசிரியர் அறிந்திருக்க வேண்டும். பௌத்தம் கிமு 300 முதல் 250 வரையான காலப்பகுதியில் தமிழ் நாடுகளுக்கு வந்தது என வரலாறு கூறுகிறது.
அது மட்டும் அல்ல, இலங்கையில் பௌத்தம், இந்தியாவின் பேரரசர் அசோகனிடமிருந்து நேரடியாக வரவில்லை என்று அறிஞர்கள் வாதிடுகின்றனர். மகிந்தா (அசோகரின் மகன்) மற்றும் சங்கமித்தா (அசோகரின் மகள்) ஆகியோர் பௌத்தத்தை தீவுக்கு கொண்டு வந்ததாக இலங்கை நூல்கள் கூறினாலும், இவர்கள் உண்மையான வரலாற்று நபர்களாக இருக்க முடியாது என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.
வி. ஏ. ஸ்மித் & ஓல்டன்பெர்க்கின் பார்வை [V. A. Smith & Oldenberg's
View]:
வி. ஏ. ஸ்மித் என்ற வரலாற்றாசிரியர், பௌத்தத்தின் வருகையைப் பற்றிய இலங்கை வரலாற்றுக் கணக்குகள் கட்டுக்கதைகள் என்று நம்பிய மற்றொரு அறிஞரான ஓல்டன்பெர்க்கைக் குறிப்பிடுகிறார்.
அசோகரின் கல்வெட்டுகளில் (கல்லில் செதுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ எழுத்துக்களில்) இலங்கை, மகிந்தா அல்லது சங்கமித்தாவைப் பற்றி சிறிதளவாவதும் குறிப்பிடவில்லை என்று அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
மேலும் இலங்கை பாரம்பரியக் கதைகள் கூறுவதை விட, மெதுவான, குறைவான வேகத்தில் தான் பௌத்தம் இலங்கையில் பரவியிருக்கலாம் என்று இது அறிவுறுத்துகிறது
என்றாலும் மேற்கூறிய பார்வையில் சிறு திருத்தம் பின்னர், வரலாற்று ரீதியாக காணப்படுகிறது.
V. A.
ஸ்மித் தனது புத்தகத்தின் பிற்கால பதிப்பில் (1924), இலங்கையில் பௌத்தத்தை பரப்ப அசோகர் உதவியதாக அவர் ஒப்புக்கொண்டார், ஆனால் அது அவரது ஆட்சியின் பிற்பகுதியில் நடந்தது என்று கூறுகிறார்.
சந்தேகத்திற்கான காரணங்கள்:
அசோகரின் பாறைக் கல்வெட்டுகள் பௌத்த தூதுவர்களை வெவ்வேறு இடங்களுக்கு அனுப்புவதைப் பற்றி பேசுகின்றன, ஆனால் அவை இலங்கை, மகிந்தா அல்லது சங்கமித்தாவைக் குறிப்பிடவில்லை.
தம்பபண்ணி (Thambapanni) அல்லது தாமிரபரணி (Tamraparni) என்ற பெயர் அசோகரின் எழுத்துக்களில் காணப்படுகிறது, ஆனால் சில அறிஞர்கள் இது தென்னிந்தியாவில் உள்ள ஒரு நதியைக் குறிக்கிறது என்று நினைக்கிறார்கள், இலங்கை அல்ல. காரணம் அசோகனின் பேரரசுக்கு இலங்கை அயல்நாடு அல்ல.
இலங்கை பாரம்பரிய கதை, மகிந்தா அன்னம் போல காற்றில் பறந்து இலங்கை மன்னனையும் 40,000 மக்களையும் உடனடியாக மதம் மாற்றினான் என்கிறது. அறிஞர்கள் இதை நம்புவதற்கு கடினமாகக் கருதுகின்றனர் மற்றும் பௌத்தம் படிப்படியாக பரவியிருக்கலாம் என்று கருதுகின்றனர்.
அடிப்படையில், முக்கிய வாதம் என்னவென்றால், பௌத்தம் இலங்கையை ஆரம்பத்தில் சென்றடைந்தாலும், அது இலங்கை வரலாற்று நூல்கள் விவரிக்கும் படி கட்டாயம் நடந்திருக்காது.
References:
[1 Ind. Ant. 1918, pp. 48-9 ; Asoka (R. I.
Series, 1919) pp. 47-8.
2
Intro. to the Vinayapitakam, by Oldenberg, vol. I, pp. lii-lv.
3 Imp.
Gaz. of India (1908), sub. voc. Tambraparni, pp. 215-16 ; Hultzsch, JRAS.(1910), p. 1310, n.4. Hultzsch, Corpus Ins. Ind. (vol.
I), p. xxxix ;p.3, n. 10.
Although he revises
his opinion and takes Tamraparni
to mean Ceylon, he still maintains that
it was the name of a river in S.
India. Apparently he keeps the problem
open.
4 V. Smith, Asoka, p. 50.]
இந்த அத்தியாயத்தின்படி, மஜ்ஜந்திகா தேரர் [Majjhantika (also known as
Madhyantika was the Indian Buddhist monk of Varanasi who was deputed by Ashoka
to spread Buddhism in the regions of Kashmir and Gandhara.] காந்தார தேசத்திற்குச் சென்று கோபமடைந்த நாகர்களை சமாதானப்படுத்தினார். இது இலங்கை முதல் காந்தாரம் வரை நாகர்கள் இருந்ததற்கான அறிகுறியாகும். மகிந்த தேரரும்
இலங்கைக்கு வந்தது, இதே புத்த சமய நம்பிக்கையை அறிமுகப்படுத்தி பிரச்சாரம் செய்வதற்காகவே.
மகிந்த தேரர் இலங்கைக்கு விசுவாசத்தை நிலைநாட்ட வந்தபோது அவருக்கு வயது சுமார் 32. இந்த அத்தியாயம் மகிந்த தேரரின் 8 - 13 வருகையைத் தவிர, இலங்கையில் நடந்த மனித வரலாற்று நிகழ்வுகளைப் பற்றியது அல்ல.
*அடுத்த பகுதியை வாசிக்க அழுத்துக...
*ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக...
Part: 45 A / Appendix –
Dipavamsa / 'Why Tamil countries are not mentioned?'
Chapter
8 is about sending missions to the neighbouring countries to propagate the
Buddha’s Faith by Moggaliputta. Lanka was not a neighbouring country to the
Asoka’s empire. See the map of extent of the Asoka’s empire is given
below. Tamil countries, Chera, Chola and
Pandya are the neighbouring countries in the South to the Asoka’s empire, and
Asoka made this clear in his Thirteenth Edict. Asoka says in the Thirteenth
Edict that he sent Dhamma missions to neighbouring countries. Lanka was not a
neighbouring country to Asoka’s empire.
Missions were sent to Greek, Ghandara (present day Afghanistan), and
various other places, including Tamil countries Cola, Pandya, Kerala and
Satyaputra. However, these Tamil countries are not mentioned in this chapter.
There must be a hidden agenda in this omission or that the author must have
been aware that these Tamil countries were already following the Buddhist
faith. The Buddhism came to Tamil countries about 300 to 250 B. C.
As
per this chapter, Thera Majjhantika went to Gandhara and appeased the enraged
Nagas. This is an indication that Nagas existed from Lanka to Gandhara. Mahinda
Thera came to Ceylon for this purpose of introducing and propagating the Faith.
Mahinda Thera was about 32 years of age when he came to Lanka to establish the
Faith. This chapter is also not about human historical events that took place
in Lanka, except the alleged arrival of Mahinda Thera, 8 - 13.
நன்றி
Thanks
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்
[Kandiah
Thillaivinayagalingam,
Athiady,
Jaffna]
பகுதி / Part: 45 B தொடரும் / Will follow
0 comments:
Post a Comment