பெண் அல்ல அவள்..

ஆக்கம்:அகிலன்,தமிழன் 
வாழ்வை அழகாக்கும் 
 நிலா போன்று 
வெளிச்சம் தரும்
 தேவதை வந்ததால் 
உள்ளமும் பூரிப்பு ஆகுறது
எப்படி சொல்வேன் 
என்ன என்று சொல்வேன் 
ஒரு வார்த்தையில் கூறி விட
பெண் அல்ல அன்பின்  மறு பெயர் அவள்

தாலாட்டி 
சுகம் கொடுப்பதில்
தென்றல்  போல் 
 இருக்கிறாள் 
சோகங்களும் வராமல் 
தடுக்கும் தடுப்பாய் இருந்து 
 நெஞ்சுக்கு 
சந்தோசம் ஊட்டி விடுவாள். 
தாயைய போல் 
பாராமுகம்  இன்றி 
துணையாகவும்   இருப்பாள்.
எப்படி சொல்வேன் 
என்ன என்று சொல்வேன் 
ஒரு வார்த்தையில் கூறி விட
 பெண் அல்ல அன்பின்  மறு பெயர் அவள்

1 comments:

  1. பெண் அல்ல அன்பின் மறு பெயர் அவள்

    ReplyDelete