தமிழர் பிரதேசவாதம்/தமிழர்தீர்வு

அனைவருக்கும் இனிய வணக்கம்தமிழன் என்கின்ற தனித்துவமான இனக் கட்டமைப்பினுள்காலந் தோறும் பிரதேசவாதங்களும்மதவாதங்களும் தலை விரித்தாடுவது விரும்பத்தக்க விடயமல்லஒன்றுபட்ட இனமாக தம்மிடையேயான பேதங்களைக் களைந்து தமிழன் ஓரணியின் கீழ் நின்றிருந்தால் இந் நேரம் வென்று நிமிர்ந்த தலை முறையாக இந்தப்பூமியில் நாம் நிமிர்ந்திருப்போம்.

 வடக்கான் என்றும், யாழ்ப்பாணத்தான் என்றும், மட்டக்களப்பான் என்றும், தமிழகத்தான்கண்டியான் பிரிவினை வாதிகள் தமது சுய சொறிதல்களை இத்தனை அழிவுகளின் பின்னரும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

இந்தப் பதிவின் நோக்கம் ஈழப் போராட்டத்தைப் பற்றிய ஆராய்வது அல்லஇந்தப் பதிவின் ஊடாக தமிழர்  வீழ்ச்சிக்கு பிரதேச வாதம்  பங்களிப்புச் செய்துள்ளது என்பதனை மாத்திரமே குறிப்பிட விரும்புகிறேன்..
ஈழம் எனச் சிறப்பிக்கப்படும் பூமி எது என்று எல்லோருக்கும் தெரியும்இலங்கைத் தீவிற்குரிய பண்டைய இலக்கிய நயம் மிக்க பெயர் ஈழம்ஈழத்தில் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளாக வடகிழக்கு மாகாணங்களையும்தென் - மேல் மாகாணங்களையும்மத்திய மலை நாட்டினையும் குறிப்பிடலாம்வட கிழக்கு மாகாணங்களில் உள்ள யாழ்ப்பாணம்கிளி நொச்சிமுல்லைத் தீவுமன்னார்வவுனியாதிருகோணமலைமட்டக்களப்புஅம்பாறை முதலிய இடங்களில் தமிழர்கள் பெரும் பான்மையாகவும்பூர்விகமாகவும் வாழ்ந்தாலும்அந்தப் பிரதேசங்களைச் சார்ந்து வாழும் மக்களிடையே பண்பாட்டு அடிப்படையிலும்மொழி உச்சரிப்பு (pronunciationorSlang)அடிப்படையிலும்  வேறுபாடுகளும்சில உட்பூசல்களும் காணப்படுகின்றனதேசிய ரீதியில் தமிழர்கள் ஒன்று பட்டு ஒரு குடையின் கீழ் நிற்கிறார்கள்ஆனால் இந்த உட்பூசல்களை சிலர் தம் சுய இலாபங்களுக்காக தூண்டி குளிர் காய்கிறார்கள்.
பிரதேசவாதம் எனப்படுவது இனத்தால் ஒன்றுபடுவதற்கு தடையாக விளங்கும் ஓர் விடயம் அல்லஆனால் எம் தமிழர்களின் பரம்பரைக் குணம்பிரிந்து வாழுதல் ஏனைய மனிதர்களோடு ஒட்டி வாழாது தங்களைத் தாங்களே உயர்ந்தவர்களாக நினைத்து தற் பெருமையுடன் வாழுதலாகும்இந் நிலமையின் காரணத்தால் எம் தமிழர்கள் கையில் எடுத்துக் கொண்ட ஒரு விடயம் தான்தமக்குள்ளே வேற்றுமைகளைக் கையாளத் தொடங்கியமை. ’ஈழம் எனும் கோட்பாட்டின் கீழ் எல்லோரும் ஓரணியில் நின்று போராடினார்களேஎன்று உங்கள் மனங்களில் கேள்விகள் எழலாம்ஈழம் எனும் கோட்பாட்டின் அடிப்படையில் எல்லோரும் ஓரணியில் நின்றார்கள் என்று இங்கே சொல்ல முடியாதுகுறிப்பிட்ட ஒரு தொகுதி மக்களைத் தவிர்த்து பலரிடம் வேற்றுமைகள் நிரம்பி இருந்தன.  இவற்றினைத் தனித் தனியே ஆராய முற்படுவது அழகல்லநமது அழுக்கினை நாமே தோண்டி மணந்து பார்ப்பதற்குச் சமனாகும்.

இந்த வேற்றுமைகள் எங்கே இருந்து பிறந்தன என்றால்எமது சமூகங்களிடம் இருந்து கிராமங்கள் வாயிலாகப் பிறந்தது எனலாம்பின்னர் பல்கிப் பெருகி ஒவ்வோர் மாவட்டங்கள் வாயிலாக வளர்ச்சியடைந்து பின் நாளில் (இன்றைய கால கட்டத்தில்தேசிய ரீதியில்(NationWide) நச்சுப் பதார்த்தமாக விருத்தியடைந்துள்ளது
யாழ்ப்பாணக் குடா நாட்டில் பிரதேச வாதம்!
யாழ்ப்பாணத் தீவகற்பத்தில் வடமராட்சிதென்மராட்சிவலிகாமம்தீவகம் என நான்கு பெரும் பிரிவுகள் உள்ளனஇவை பூகோள அடிப்படையில் குடா நாட்டினை அடையாளப்படுத்தும் நோக்கில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பதாகவே ஒல்லாந்தர்களினால் பிரிக்கப்பட்டிருந்தனஇங்கே வாழும் மக்கள் அனைவருக்கும் தனி நாடு வேண்டும்எனும் ஆசை இருந்தாலும்இப் பிரதேசங்களின் அடிப்படையில் வேற்றுமைகள் அவர்களின் அடி மனங்களில் காணப்படுகின்றது என்பது உண்மையே!
யாழ்ப்பாணத்து மக்கள் சுயமுயற்சி நிறைந்தவர்கள்.பல்வேறு கைத்தொழில்களையும் , விவசாயத்தினையும் கொண்டிருந்தனர்.ஆனால் ஒவ்வொரு தொழிலும் குறிப்பிட்ட பரம்பரைத் தொழிலாகவும்ஊர் சார்ந்ததாகவும்  கடைப்பிடிக்கப் பட்டு வந்தமை ஒரு பரம்பரையினரை/ஊரினை  ஏனையவர் தொழில்ரீதியாக குறிப்பிட்டு பேசுவதுடன் ஒவ்வொருவரும் தம்மை உயர்வாக கருதி மற்றைய பகுதியினரை தொழில் ரீதியாக தாழ்த்தி குறிப்பிடுவதும் ஒருவருக்கு ஒருவர் வேற்றுமைகளையே வளர்த்துக்கொண்டு இருக்கிறது.
அரசியலில் கூட மட்டக்களப்பின் அரசியல் தலைமையினை தட்டிக்கழிக்க கூட்டணி செய்த சதியிலிருந்து இன்று கூட்டமைப்பு  வரையிலும் நான்  உயர்ந்தவன்,அவன் சொல்லி நான் கேட்பதா  போன்ற உணர்வுகள் -தமிழர் பிரச்னையை விட-அது  மேலோங்கி காணப்படுகிறது.
அகதிகளாக பரவி புலம் பல கண்டாலும் தெரியாத இருவர் சந்திக்கும்போது முதலில் தமிழன் அடுத்தவனிடம் இருந்து அறிய ஆவல்படுவது அவன் என்ன சாதி என்பதே!
புலத்தில் தாம் பிறந்த ஊர் சார்பான சங்கங்களை அமைத்தாலும் அவை இன்று சாதி ரீதியில் சிதறி அவலப்படுவதனையும் நாம் நேரில் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.
ஒரு நியாயமான தீர்வுப் பொதியினை அரசு தரமுன்வந்தாலும்  (நடக்கக்கூடிய  காரியமா?) அதனை எதிர்க்க சில தமிழ் தரப்புக்கள் தயாராக இருப்பதுவும் ஏனெனில்  குறிப்பிட்ட ஒருவர் கையில் தீர்வு எனில் வரலாறில் பதிவாகிவிடுமோ என்ற அச்சம் அவர்களிடம் இல்லாமலில்லை
தமிழன் குருதியுடன் கலந்துவிட்ட இத் துர் குணங்கள் பிரித்து அகற்றும்வரை  வரை தமிழரசியல் கூறும் (உண்மையோ/பொய்யோ) தமிழருக்கான தீர்வு சாத்தியப்படாத ஒன்றே!

தகவல்:நிரூபன்[தொகுப்பு-செ.மனுவேந்தன்]                                          

0 comments:

Post a Comment