நாம் ஆணா பெண்ணா.. ?

Kandiah Thillaivinayagalingam's photo."மழலையாய் பிறந்தோம் 
தாய் தந்தை மகிழ்வில் 
விளக்கம் இல்லை 

நாம் வேறா வேறா.."
"குழந்தையாய் வளர்ந்தோம் 
ஒன்றாய் கட்டி உருண்டோம் 
குழப்பம் இல்லை 
நாம் ஆணா பெண்ணா.."

Kandiah Thillaivinayagalingam's photo."சிறுவராய் வளர்ந்தோம் 
தாய் தந்தை பாசத்தில் 
குழப்பம் தளைத்தது 
நாம் பருவம் தாண்ட.."
"மாறும் வளர்ச்சியில் 
மொட்டு மெல்ல பூக்க 
வேறு எண்ணங்கள் 
பட்டு மெல்ல மழர.."

Kandiah Thillaivinayagalingam's photo."இளைஞனாய் மாறினோம் 
தாய் தந்தை நேசத்தில் 
குழப்பம் முளைத்தது 
நாம் ஆணா பெண்ணா.."
"துளைத்தது காதல் 
கண்கள் கவர்ந்தது அழகு 
இளைத்தது நெஞ்சம் 
அன்பு அணைத்தது உறவை"..
"சுற்றத்தார் வாழ்த்த 

Kandiah Thillaivinayagalingam's photo.தாய் தந்தை மகிழ 
முற்றத்து பந்தலில் 
நாம் மணமக்கள் ஆனோம்.."
"சற்றும் கவலையில்லை 
நாம் ஆணா பெண்ணா 
வேற்றுமையில் ஒற்றுமை 
நாம் மீண்டும் ஒன்றாக.."

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

0 comments:

Post a Comment