"ராமன் எத்தனை எத்தனை வஞ்சகனடி?"

Image result for rama shoot vali
Inline image

"தீபம் ஏற்றி
திலகம் இட்டு
    மங்கையர் வலம் வந்து 
தீபம் கொளுத்தி 
ராவணன் எரித்து
    வேங்கையர் துள்ளி ஆடி
தீய சொற்களால்
 சீதைக்கு எய்தவனை 
   நங்கையர் மூக்கு அறுத்தவனை 
தீண்டாதவன் என்பதால் சங்காரம் செய்தவனை
   மங்கையர் பாடி கொண்டாடுகிறார்கள்!"

"தீர மிக்க 
வாலியை வஞ்சித்து 
Image result for surpanakha   குரங்கின் உதவி பெற்றவனை  
தீவின் சிறையில் 
நிமிர்ந்து நின்றவளை 
   இரக்கமின்றி
 தீயில் இறக்கியவனை 
தீதோ நன்றோ
 ஒன்றாய் வாழ்ந்தவளை 
   இரக்கமற்று 
                                                 காடு அனுப்பியவனை 
                                                               தீபம் ஏற்றி
                                                   'ராம-சீதை'யாக வாழ 
                                             உரத்த குரலில் தொழுகின்றனர்!!"

                                 [ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

0 comments:

Post a Comment