யாருக்காக, இது யாருக்காக....????


இலங்கை இனப்பிரச்சனை என்பது கடந்தகால சிங்கள,தமிழ் அரசியல்  தமிழ் மக்களுக்கு வழங்கிய பரிசு.இதனை தீர்ப்பதாக ஒவ்வொரு அரசும் வெளியுலகிற்கு கூறிக்கொண்டு இலங்கைத் தீவினை கீழ்நிலைக்கு கொண்டு சென்றதில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் சாதனை படைப்பதிலேயே தீவிரம் காட்டி வந்துள்ளன.

உண்மையில் இலங்கை எங்கள் நாடு.நாட்டில் வாழும் ஒவ்வொரு இனத்தின் வளர்ச்சி தான் நாட்டின் வளர்ச்சி என்று அரசியல் கருதியிருந்தால் இப்படி ஒரு இனப்பிரச்சனையே தீவில் இருந்திருக்காது.நாடும் மேற்குலகிற்கு ஈடாக வளர்ந்திருக்கும்.

ஆனால், மேற்குலகம் போன்று சிறுபான்மை இனங்களுக்கு சம உரிமை கொடுத்தால் நாடு இரண்டாய் விடும்,நாட்டின் பாதுகாப்பிற்கு குந்தகம் என்ற உண்மைக்கு புறம்பான சோடிப்புக் கதைகளை  காலம் காலமாக பெரும்பான்மை சிங்களவர்கள்  மத்தியில்ஆழமாக விதைத்து க்கொண்டு தீர்வினைப் பற்றி கதைப்பது வெறும் வெற்றுப் பேச்சாகவே எண்ணத் தோன்றுகிறது.

 நாட்டின் வளர்ச்சியினை கருத்தில் கொண்டிருந்தால் 
 நல்லாட்சி என்று கூறிக்கொண்டிருக்கும் தற்போதைய அரசாவது.முதலில் சிங்கள மக்களிடம் காணப்படும் மேற்படி தப்புக்கணக்குகளை நீக்க முயற்ச்சி செய்யவேண்டும்.அதுவே இனப்பிரச்னைதீர்வு முயற்சிக்கு பொருத்தமான திறவுகோலாக இருக்க முடியும்.  
                   தீபத்திற்காக                        சண்டியன் சரவணை 

 

3 comments:

 1. நான் நல்லவன்; நான் பெரும் தர்மவான்; நான் மிகவும் நீதியானவன் என்று நான் என்னையே சொல்லிக்கொள்வது ரொம்ப அபத்தம். அப்படி மற்றயவர்கள்தான் என்னைப் பற்றிச் சொல்லவேண்டும்.

  இந்த அரசு பல வருடங்களாக தங்களை நல்லாட்சி அரசாங்கம் என்று சொல்லிக்கொண்டு வருகின்றதே ஒழிய இதுவரை என்ன ஒரு நல்லதை எங்களுக்குச் செய்துள்ளது?

  சிறையில் காரணம் இன்றி இருக்கும் தமிழர்களை விடுவிக்க இஷ்டமில்லை பெரும் பெரும் கொள்ளைக்காரங்களை எல்லாம் பிடிக்கப் பயம். பிடித்தால் தாங்களும் அகப்படுவோம் என்பதால் சில்லறைகள் சிலரைப் பிடித்துப் பேய்க்காட்டிக்கொண்டு திரிகின்றார்கள்.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான். ஆனால் அச் சில்லறைகளையும் கவனமாகவே கையாளுகிறார்கள்.

   Delete
 2. என்றும் அரசியல் வாதிகள் தங்கள் அரசியல் நகர்வுகளை அடுத்த தேர்தலை நோக்காக வைத்தே செயல்படுத்து கிறார்களே யன்றி மக்கள் நலன் நாட்டு நலன் என்று இங்கு சிந்திக்கவில்லை.சிங்களரை யும் உலகத்தினையும் திருப்திப் படுத்தவே முனைகிறார்கள்.தமிழருக்கு ஒன்றை செய்தால் பெரும்பான்மை எதிர்க்கும் அளவிற்கு தப்பெண்ணங்களை அவர்கள் மத்தியில் அரசியல் வாதிகள் விதைத்து விட்ட்னர்.முதலில் அவை களையப்படல் அவசியம் என்பதே இக்கட்டுரையின் கருத்தாகும்.

  ReplyDelete