எதிர் நீச்சல்: -காலையடி அகிலன்துடுப்பு இல்லா ஏழை என்றாலும் 

வாழ்வதனில் சூறாவளி போல

 பிரச்சனையை சந்திக்கும் போது 

விழுந்து விட்டாலும் 

நம்பிக்கை த்துடுப்பை க்கொண்டு

 எதிர் நீச்சல் செய்!

கார் இருள் கொண்ட

சோகமும் மறைந்து போகும். 

 இல்லையெனின் 
அது உன்னை மூழ்க வைத்து 

உன்வாழ்வை க்கரைத்து விடும். 


இடையூறுகளைக் கண்டு 

பயந்து மனம் நொந்து வெதும்பி 

மூலையில் முடங்கி இருந்து 

விதி எனப் பெயர் வைத்து 

ஒளிந்து கொள்ளாதே! 

எதிர் நீச்சல் போடாமல் 

யாரும் கனவை வென்றவர்கள் 

வையகத்தில் உண்டோ ? 

நீ மட்டும் 

எதிர் நீச்சல் போடாமல்

 ஒதுங்கி இருந்தால் 

கனவை தான் வென்றிடலாமா?வாழ்வில் எதிர் நீச்சல் 

செய்தால் தான் வெற்றி வரும்!

தாயும் மனச்சோர்வு இன்றி 

பத்து மாதம் எதிர் நீச்சல் 
செய்தால் தான் 

குழந்தையை ப்பெற முடியும் 

ஏமாற்றுதலோடு 

எதிர் நீச்சல் போடாமல் 
வலி என்று இருந்தால் 

எதிர்பார்ப்புகள்  நிறைவேறுமா ? 

மழையோடு எதிர் நீச்சல் 

போடுவதால் தான் இயற்கையும் 

அழகு அடைகிறது 
அதர்மத்தோடு 

எதிர் நீச்சல் செய்தால் தானே 

நியாயம் கிடைக்கும்! 


அழுது கொண்டு இருப்பவனுக்கு

 கண்ணீர் சொந்தமாக வருகிறது 

எதிர் நீச்சல் செய்தால் 

புன்னகை சொந்தமாக வரும் 

நீயும் எதிர் நீச்சல் செய் 

சொர்க்கமும் உன் வசமாகும்
                                                               

0 comments:

Post a Comment