ஓக்டோபர் 21 , 2017 இல் உலகம் அழியுமாம்!

உலக அழிவுபற்றி காலத்துக்கு காலம் விஞ்ஞானிகள் கூறும் கூற்றுக்கள்  அவ்வப்போது மக்கள் மத்தியில் பீதிகளையே  ஏற்படுத்தி சென்றிருக்கின்றன. அண்மையில் கூட ஒரு சில மூட சிந்தனையாளரைக் கொண்ட கூட்டுக கும்பல் ஒன்று, உலகம் செப்டெம்பர் 23 , 2017 இல் முற்றாக அழிந்து போய்விடும் என்று கூறிவந்தார்கள். அது நடை பெறவில்லை என்றதும் இப்போது ஓக்டோபர், 21 இல் அழியும் என்று திரும்பவும் பிதற்றியுள்ளார்கள்.

இந்தக் குழுவின் ஒரு தலைவர் (டேவிட் மியேட் ) மிக்கப்படித்த விஞ்ஞான ஆராட்சியாளர் என்றாலும் இப்படியான அர்த்தமற்ற, ஆதாரமற்ற முடிவுகளை அவ்வப்போது வெளியிட்டு உலகைப் மீண்டும் மீண்டும் பயமுறுத்திக்கொண்டே இருக்கின்றார்.

ஈர்ப்பே இல்லாத ஒரு மர்மக் கிரகம் 'X ' (அ+து: கிரகம் 'நிபுரு') உக்கிர வேகத்தில் வந்து பூமியில் மோதுமாம்; இதனால் பூமி எங்கும் உச்ச அளவில் இயற்கை அனர்த்தங்கள் மூலம் பேரழிவு உண்டாகி, எல்லா உயினங்களும் முற்றாக அழிக்கப்பட்டு விடுமாம்.

இவர் இப்போது சொல்கின்றார்; முன்னைய திகதி, பைபிளில் சொல்லப்படட சில வாக்கியங்களையும், எண்சார் குறியீடுகளையும் பிழையாய் விளங்கியதால் சொல்லப்படடதாம். ஆனால், நூலில் வெளிப்படுத்த்ப்பட்ட உண்மைகளின்படி உலகத்தின் இறுதி நாள் ஓக்டோபர், 21  தானாம்.

 'இறுதி நாள்' என்பதையும் சிறிது தளர்த்தி, அன்று இறுதி நாள் தொடங்கி சில வாரங்களாக அனர்த்தங்கள் நிகழும் என்கின்றார். மேலும், மேலும் இலகுவாக்கி, 7 வருடங்களாக நடக்கவிருக்கும் யுத்தங்களாலும், இயற்கை அழிவுகளாலும் 'இப்போது இருக்கும் உலகம் அப்போது இருக்காது' என்று மென்மைப்படுத்தியும் இருக்கின்றார்.  (அமெரிக்க கொரிய யுத்தத்தை எதிர்பார்க்கின்றாரோ?)

ஆனால் 'நாசா' நிறுவனம் இப்படியான மர்மக் கிரகக் கொள்கைகள் எல்லாவற்றையும் நிராகரித்து விட்டுள்ளது. அப்படி ஒரு கிரகம் எந்தவொரு அண்மித்த வெளிகளில் இல்லவே இல்லை. எந்தவொரு கிரகமும் பூமியை நோக்கி வந்துகொண்டிருப்பதாக காணப்படவே இல்லை.  

அண்டவெளியில் இருந்து எந்த ஒரு பொருளும், சிறியதோ பெரியதோ, திடுதிப்பென்று இருந்தாப்போல, இரவோடு இரவாகப் பூமியை வந்து சேர்ந்து தாக்கப்போவது என்பது முடியாத ஒன்று. எத்தனையோ கோடி கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் எந்தப் பொருளும் பூமியை நோக்கி வருவதற்க்கு பல நூறு வருடங்கள் எடுக்கும். அப்படி வருவதை முன்கூட்டியே விண்ணியல் விஞ்ஞானிகள் அறிந்துவிடுவார்கள். அது பூமியை வரும் என்று இருந்தால், அது எந்த வருடம், என்ன நாள், என்ன நேரம், எங்கு விழும் என்று முன்கூட்டியே அறிவிக்கும் நுட்பம் தற்போது உள்ளது.  

இப்படியாக ஒவ்வொரு வருடமும், ஒவ்வொரு இனத்தினரும் (மாயன் உட்பட) எதோ ஒன்றைச் சொல்லி உலக அழிவைப் பறை சாற்றிக்கொண்டே இருப்பார்கள்.

ஆனால், நீண்ட காலம் இருந்த பூமியும், உயிர்களும் இன்னும் பல காலம் சேமமாய் இருந்துகொண்டே இருக்கும் என்பதுதான் உண்மை, மேலும் கூடிய சவுகர்யங்களுடன்!  

                                          ஆக்கம் :செல்வதுரை,சந்திரகாசன் 

4 comments:

 1. கண்ணன்Friday, September 29, 2017

  அய்யய்யோ! ஓடி, ஓடிச் சேர்த்த சொத்து பத்துகள் எல்லாவற்றையும் எங்கே கொண்டு போய் பாதுகாக்கலாம்?

  ReplyDelete
 2. ஒரு 50 வருடத்திற்கு முன்னரும் கூட உலகம் அழியப்போவதாக கதை அடிபட அதை நினைத்துக்கொண்டு படுத்தபோது பெரும் வெள்ளம் வந்து எம்மையெல்லாம் அடித்துக்கொண்டு போய் அதற்குள் மூழ்க கனவுகண்டு பயந்துவிடடேன்.இப்படி எத்தனை முறை அழிந்துவிட்டொம்.

  ReplyDelete
 3. பால சர்மாWednesday, October 04, 2017

  உலகம் இப்போது அழியாது! கலியுக முடிவில்தான் கல்கி, வெள்ளைக் குதிரையில் ஒரு வாளுடன் வந்து இவ்வுலகினை அழித்திடுவார்!

  ReplyDelete
  Replies
  1. இப்படியான அதி மூடர்கள் இருக்கும் வரையில் உலகம் அழிந்தாலும் அதி மூட நம்பிக்கைகளும் அழிய போவதில்லை.

   Delete