வேலைத் தலத்தில் சிறப்பான மனிதனாக இருப்பது எப்படி?

ஒரு மனிதன் சிறப்பாக சமூகமயமாவது என்றால் என்ன? [பகுதி:01]

01]அலுவலகத்தில் பழகுதல்
02]கல்லூரியில் நமது வாழ்க்கை
03]சமூகத்தில் பழகுதல்
04]வேறு சில ஆலோசனைகள்

அலுவலகத்தில் பழகுதல்

சமூக தளத்திலும், பணி தளத்திலும், முன்பின் அறிமுகமில்லாதவர்களுடன் பேசி அறிமுகமாவதென்பது பலருக்கும் ஒரு சிரமமான காரியமாக உள்ளது. ஆனால், ஒருவருடன் பேசிப் பழகுதல் என்பது சரியான முறையில் நடைபெற்றால், பழகுதல் என்பது மிகவும் எளிது.
ஒருவர் அலுவலகத்தில் பணியாற்றும்போது, பிறரின் பெயரை சத்தமாகக் கூறிக்கொண்டிருத்தல், தேவையின்றி சத்தம் போடுதல், இங்கேயும் அங்கேயும் காரணமின்றி உலவித் திரிதல், ஒருவரிடம் தேவையற்ற, தனிப்பட்ட முறையிலான கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருத்தல் போன்றவை, நிச்சயம் வேண்டாத செயல்கள். இதுபோன்ற செயல்கள், உங்களின் பணிக்கே உலைவைக்கக் கூடியவை.
எப்போதுமே, பணிபுரியும் இடத்தில் புரபஷனலாக நடந்துகொள்ளுங்கள். பணியின்போது, பர்சனல் விஷயங்களை தவிர்த்து, பணிக் குறித்த விஷயங்களை மட்டுமே பேசுங்கள். சக ஊழியர், தேவையில்லாமல் உங்களிடம் பேசினாலும், அதை நாசுக்காக தவிர்த்து விடுங்கள்.
பொதுவாக, உடன் பணி செய்வோருடன்(colleagues) பேசிப் பழகுவதற்கு, உணவு நேரத்தையோ அல்லது டீ அருந்தும் நேரத்தையோ சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களின் கடந்தகால பணி அனுபவங்கள், பொழுதுபோக்குகள், உங்களது சக ஊழியர்கள், தங்களது பணியினை எவ்வாறு விரும்புகிறார்கள் மற்றும் அவர்களின் பணி நிலை ஆகியவைப் பற்றி உரையாடலாம்.
பணி தவிர்த்த வேறு வெளி விஷயங்களைப் பேசும்போது, தேசிய மற்றும் சர்வதேசிய அரசியல், விளையாட்டு, புதிய தொழில்முனையும் வாய்ப்புகள், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட தலைப்புகள் உகந்தவை. தேவையில்லாமல் குடும்ப விஷயங்களைப் பேசுவது, உறவுச் சிக்கல்கள் குறித்து பேசுவது மற்றும் இதர ஊழியர்களைப் பற்றி புறம்பேசுதல் போன்றவற்றை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

கார்ப்பரேட் உலகில், மிகச்சரியான மற்றும் நுட்பமான பேசும் திறன் மிகவும் முக்கியம். நமது பேச்சில் சிறு தவறுகளை செய்தாலும், அதனால் ஏற்படும் பாதிப்பு மிகப் பெரியதாக இருக்கலாம்.
[அடுத்தவாரம் ''கல்லூரியில் நமது வாழ்க்கை''  இல் தொடரும்]

0 comments:

Post a Comment