தெய்வம் இருப்பது :ஆன்மீகம்


படம். சரஸ்வதி சபதம் - வருடம் 1966
தெய்வம் இருப்பது எங்கே

தெய்வம் இருப்பது எங்கே?
அது இங்கே, வேறெங்கே?
தெளிந்த நினைவும் திறந்த நெஞ்சம்
நிறைந்த துண்டோ அங்கே!(தெய்வம்)

பொன்னும் பொருளும் நிறைந்தவர் நெஞ்சம்
பொய்யில் வளர்ந்த காடு!
எண்ணும் எழுத்தும் நிறைந்தவர் நெஞ்சம்
இறைவன் திகழும் வீடு!(தெய்வம்)

ஆடை அணிகலன் ஆடம்பரங்கள்
ஆண்டவன் விரும்புவதில்லை
அங்கொரு கண்ணும் இங்கொரு கண்ணும்
ஆலய வழிபாடில்லை!

இசையில் கலையில் கவியில் மழலை
மொழியில் இறைவன் உண்டு
இவைதான் தெய்வம் என்பதை அறிந்தால்
ஏற்கும் உனது தொண்டு!(தெய்வம்)

நன்றி நிறைந்தவர் எங்கே, தெய்வம் அங்கே
நன்மை புரிந்தவர் எங்கே, தெய்வம் அங்கே
பழமை நிறைந்தவர் எங்கே, தெய்வம் அங்கே
பாசம் நிறைந்தவர் எங்கே, தெய்வம் அங்கே(தெய்வம்) "
………………….கவியரசு கண்ணதாசன்

0 comments:

Post a Comment