உறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும்/ பகுதி: 03


 [The belief and science of the sleep]

நீங்கள் ஒரு மோசமான இரவு உறக்கத்தின் பின், உங்கள் கண் பனிமூட்டம் போல் மங்கலாக [foggy] இருப்பதை உணர்ந்து இருப்பீர்கள். எனவே, உறக்கம் மூளையின் செயல்பாட்டை கணிசமாக பாதிக்கிறது என்பதில் உங்களுக்கு ஆச்சரியம் இருக்காது. ஆகவே, நீங்கள் முதலில்  ஆரோக்கியமான அளவு உறக்கம் அவசியம் என்பதை அறிவீர்கள், ஏனென்றால், மூளையின் உள்ளீடிற்கு ஏற்ப சரிப்படுத்த மூளையின் நெகிழ்த்தன்மை அல்லது மூளையின் திறன் அவசியம் [“brain plasticity,” or the brain’s ability to adapt to input.]. உதாரணமாக, நாம் சொற்ப நேரமே உறங்கினோம் என்றால், நாம் காலையில் கற்றுக்கொண்டவைகளை மூளை செயல்முறை படுத்தவோ அல்லது அவைகளை எதிர்காலத்தில் ஞாபகத்தில் வைத்திருக்கவோ எங்களுக்கு அதிக சிக்கல் ஏற்படலாம். அது மட்டும் அல்ல விரைவாக எதாவது ஒன்றில் தேவைக்கு ஏற்ப கவனம் செலுத்துவது மற்றும் பதிலளிப்பது அல்லது பொருத்தமான பதில் நடவடிக்கை கையாளுவது கடினம் ஆகலாம். மேலும் ஆய்வுகள், மூளை செல்களில் இருந்து கழிவுப்பொருட்களை அகற்றுவதை உறக்கம் ஊக்குவிப்பதாக காட்டுகிறது. அது மட்டும் அல்ல, உடலின் மற்ற பகுதிகளுக்கும் உறக்கம் மிக முக்கியம் ஆகும்.

பொதுவாக மக்களுக்கு போதுமான உறக்கம் இல்லாத போது, அவர்களின் உடல்நல அபாயங்கள் [health risks] அதிகரிக்கின்றன. உதாரணமாக மனச்சோர்வு, வலிப்பு [திடீர் நோய்பிடிப்பு], உயர் இரத்த அழுத்தம், மோசமடையும் ஒற்றைத் தலைவலி, வலுவிழந்த நோய் எதிர்ப்பு சக்தி, போன்ற அறிகுறிகளுடன் [Symptoms of depression, seizures, high blood pressure and migraines worsen. Immunity is compromised,] நோய் மற்றும் தொற்றுக்களுக்கான சாத்தியக்கூறுகளையும்  அதிகரிக்கும். இரவு வேலை செய்பவர்கள், படுக்கைக்குச் செல்லும்போது அதிகமாக உறங்குவதற்கு கஷ்டப்படுவதுடன், வேலையில் விழித்திருப்பதிலும் பிரச்சனை படுகிறார்கள், ஏனென்றால், அவர்களின் இயற்கையான சர்க்காடியன் தாளங்கள் [circadian rhythm] மற்றும் உறக்க - விழிப்பு சுழற்சி [sleep-wake cycle] சீர்குலைக்கப்பட்டு உள்ளதால் ஆகும்.

சர்க்காடியன் தாளங்களின் செயல் பாட்டால் விளையும் இன்னும் ஒரு தாக்கத்தையும் நாம் அறியவேண்டும். இதை ஆங்கிலத்தில் 'ஜெட் லேக்' [jet lag] என்பார், இதை தமிழில் 'வின்பயண களைப்பு' என்று ஒரு வேளை சொல்லலாம். நீங்கள் எவ்வளவு அனுபவம் மிக்க மற்றும் மன கட்டுப்பாடுள்ள ஒரு பயணியாக இருந்தாலும், 'ஜெட் லேக்' இல் இருந்து விடுபடுவது கொஞ்சம்  கடினம். இது உறக்கமின்மையாக மாறும் போது, உடலுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. 'ஜெட் லேக்' தொடர்பான பிரச்சினைகளில் முக்கியமானது, தலைவலி, சோர்வு மற்றும் குமட்டல் ஆகும். எனினும் “ஜெட் லேக்” என்ற சொல் ஒரு தவறான பதம் ஆகும். உண்மையில் என்ன நடக்கிறது என்றால், பயணியின் உடலின் இயற்கையான கடிகாரமும், அவர்பயணித்த இடத்தின் உண்மையான கடிகாரமும் மாறுபட்டு ஒத்து போகாமல் இருப்பதே முக்கிய காரணமாகும் [circadian rhythms become out of synchronise with the time of day when people fly to a different time zone, creating a mismatch between their internal clock and the actual clock]. பொதுவாக, நாம் விழித்திருக்கும்போது, `இனி உறங்கலாம்' என்றும், உறக்கத்திலிருக்கும் போது, 'இனி விழித்தெழலாம்' என்றும் எப்படி நமக்கு இயற்கையாக தெரியவருகிறது? அந்த உணர்வு எப்படி ஏற்படுகிறது? இதைத்தான், எம் உடலுக்குள் இருக்கும் சர்காடியன் தாளம் (Circadian Rhythm) என்கிறது இன்றைய அறிவியல். இவை  
இயற்கையிலுள்ள அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவான ஒன்று எனலாம்.  இது, உடலின் ஒவ்வொரு பகுதியினதும் ஒரு 24 மணித்தியால சுழற்சி [24-hour cycles] ஆகும். நமது உடலின் செல்கள் அனைத்தும் அனுப்பும் சைகைகளின் [குறி / signal]  ஏற்ற இறக்க நிலைகளால் [fluctuating levels] கட்டுப்படுத்தப்படுகின்றன. எனவே இதை கூட்டாக உயிரியல் கடிகாரங்கள் [biological clocks] என அழைக்கப்படுகிறது. இந்த எல்லா உயிரியல் கடிகாரங்களும் மூளையில் இருக்கும் முதன்மை கடிகாரத்தால் ஒருங்கிணைக்கப் படுகிறது [synchronised by a master clock in our brain]. இந்த உயிரியல் கடிகாரம் பழுதடையும் போதும், அல்லது அதன் 'சர்காடியன் தாளம்' மாறும் போதும் பல்வேறு வகையான வாழ்க்கை முறை நோய்கள் ஏற்படுகின்றன என்கிறது இன்றைய ஆய்வுகள்.   

மின்சாரத்தைக் கண்டுபிடிப்பதற்கு முன் வாழ்ந்த நமது முன்னோர், இயற்கையோடு இயைந்து, சூரியன் உதிக்கும் பொழுது கண் விழித்து, நாள் முழுவதும் வெளியே பணி புரிந்து, சூரியன் மறையும்bபோது உறங்கினர். மிருகங்கள், பறவைகள், மரங்கள், செடி, கொடிகள் போலவே இவர்களும் சூரியச் சுழற்சியைப் பின்பற்றி வாழ்ந்தனர். உறங்கினர். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ந்த இந்த உறக்க நேரம் அவர்களின் உடலுடன் ஒட்டிவிட்டது எனலாம். மின்சாரம் வந்ததும் அவன் கண்டு பிடித்த மின் விளக்குதான் இந்த சர்காடியன் தாளத்தை மாற்றிய முதல் எதிரி எனலாம். ஏனென்றால், மனிதனின் பகல் நீளமாகி, இரவு குறைய ஆரம்பித்தது இதன் பின்பு தான்!

1886 ஆம் ஆண்டு அமெரிக்கா முழுவதும் எட்டு மணித்தியால வேலை கட்டுப்பாட்டை கோரி வேலை நிறுத்தம் ஆரம்பிக்கப் பட்டது, அவர்களின் முதன்மை முழக்கம் "எட்டு மணித்தியால வேலை, எட்டு மணித்தியால உறக்கம், எட்டு மணித்தியாலம் உங்கள் தேவைக்கு". இது ஒரு மனிதனுக்கு ஒரு நாளில் எவ்வளவு நேரம் உறங்க வேண்டும் என்பதை மேலோட்டமாக வரையறுக்கிறது. எனினும் இது மனிதனுக்கு மனிதனும், மற்றும் அவனின் வயதிலும் தங்கி உள்ளது. பொதுவாக 5 க்கும் 11 க்கும் இடையில் என்று கூறலாம். உங்கள் உறக்க நேரம், உங்கள் வயதுடன் மாற்றம் அடைகிறது. உதாரணமாக, ஆரம்பத்தில் 14லிருந்து 17 மணிநேரம் வரை உறங்கும் குழந்தை, தினசரி 12லிருந்து 15 மணி நேரங்கள் வரை என மாறி, பின் தினமும் 11லிருந்து 14 மணி நேரங்களாகி, பள்ளி செல்லும் முன் வயதுக் குழந்தைகள் 10லிருந்து 13 மணி நேரங்கள் உறங்கி, பள்ளி செல்லும் வயது சிறார்கள் 9 மணிநேரத்திலிருந்து 11 மணிநேரம் வரை என்றாகி, பின் பொதுவாக 7லிருந்து 9 மணி நேரங்கள் வரை ஆகிறது. என்றாலும் ஒரு மனிதன் 60 அகவையை கடந்ததும், பொதுவாக இரவு நேர உறக்கம் மேலும் குறைகிறது, அத்துடன் முதியோர் பெரும்பாலும் பல காரணங்களால் மருந்துகளை எடுத்துக்கொள்ள வாய்ப்பு அதிகம் என்பதால், இவையும் அவர்களுக்கு உறக்கத்திற்கு தலையீடாகவும் அமைகிறது.

எது எப்படியாகினும், இன்று இந்த நவீன உலகில், பல தேவைகளை முன்னிட்டு நீண்ட வேலை நேரம், நாள் முழுவதும், இரவு பகலாக கிடைக்கக் கூடிய பொழுது போக்குகள் மற்றும் பிற பல செயல்பாடுகள் காரணமாக மனிதன் குறைந்த அளவு உறக்கத்தையே பெரும் பாலும் பெறுகிறான். அவர்களில் பெரும்பாலோர், தாம் இழந்த உறக்கத்தை, வார இறுதியில் சரிக்கட்டி விடலாம் என்று தமக்கு தாமே ஆறுதலும் கூறுகிறார்கள். ஆனால், அவர்கள் எவ்வளவு உறக்கமின்மையால் அவதி படுகிறார்கள் என்பதை பொறுத்து, வார இறுதி நாட்களில் அதிக நேரம் உறங்குவது போதுமானதாக இல்லாமல் போகலாம் ? உதாரணமாக, ஒரு உறக்க கணிதத்தை கொஞ்சம் பார்ப்போம். வெள்ளிக்கிழமை ஒரு பெரிய திட்டம் [project] நிறைவேற்ற வேண்டும் என்ற காரணமாக கடந்த வாரம் ஒவ்வொரு இரவும் இரண்டு மணிநேர உறக்கத்தை இழந்தீர்கள் என்று கருதுவோம். எனவே, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், நீங்கள் மொத்தம் நான்கு கூடுதல் மணி உறங்கினீர்கள் என்று வைப்போம், திங்கள் காலை நீங்கள் மிகவும் சோர்பு அற்ற  ஒளிமயமான [பிரகாசமான] கண்களை உணரலாம்? ஆனால் உங்கள் வெளிப்படையான  தோற்றத்தால், அதாவது ஊக்கம் மற்றும் வீரியத்தால் [vim and vigor] ஏமாறவேண்டாம்.  நீங்கள் இன்னும் ஆறு மணித்தியாலம் பாக்கி உள்ளது. இதைத்தான் வல்லுநர்கள் உறக்கக் - கடன்["sleep debt"] என்கிறார்கள். நாம் எடுத்துக்கொண்ட உதாரணத்தில், இது ஆறு மணித்தியாலம், அதாவது கிட்ட தட்ட ஒரு நாள் உறக்கம்.இப்படியான குறுகிய கால உறக்கமின்மை, மந்தமான மூளை, மோசமான பார்வை, பலவீனமான வாகனம் ஓட்டுதல் மற்றும் நினைவில் கொள்வதில் [a foggy brain, worsened vision, impaired driving, and trouble remembering] சிக்கல் ஏற்படுத்துகிறது என ஆய்வுகள் எடுத்து காட்டுகின்றன. அத்துடன் இத்தகைய நிலைமையின் நீண்ட கால பாதிப்பாக அதிகமாக, உடல் பருமன், இன்சுலின் எதிர்ப்பு மற்றும் இருதய நோய்கள் [obesity, insulin resistance, and heart disease] வரலாம்.

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] 

ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக:Theebam.com: உறக்கம் பற்றிய நம்பிக்கையும், அறிவியலும் /பகுதி: 01  
 

0 comments:

Post a Comment