"பாட்டி வாரார் பாட்டி வாரார்"[இரண்டு பாட்டிகளின் கதை]
    

  
"பாட்டி வாரார் பாட்டி வாரார்
பார்த்து படியில் கால் வைத்து
பாதியில் நின்று கை காட்டி    
பாட்டி வாரார் பாட்டி வாரார்"

"பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்
பாலகனுக்கு கலந்து அன்புடன் ஊட்ட 
பாவம் பாட்டி இந்த வயதிலும்
பாசம் கொண்டு மகிழ்ந்து வாரார்"

"பாடி ஆடி விளையாட்டு காட்ட
பால் கொடுத்து கதை சொல்ல
பாயில் அணைத்து சேர்ந்து படுக்க
பாக்கியம் பெற்றேனென மகிழ்ந்து வாரார்"

"பாத்திரம் கழுவி வீடு துடைக்க
பானை நிரம்ப சோறு காச்ச 
பாதை காட்ட நல்ல கதைசொல்ல
பாசம் கொண்டு மகிழ்ந்து வாரார்" 
 ↭↭↭↭↭↭↭↭↭↭
    
    
                   
"பாட்டி வாரார் பாட்டி வாரார்
பாட்டு கேட்டு படியில் இறங்கி
பாதியில் நின்று ஐபாட் திறந்து 
பாட்டி வாரார் பாட்டி வாரார்" 

"பாத்தி கட்டி தண்ணீர் இறைத்தவர்
பாரின் வந்து சோம்பி விழுகிறார் 
பாவம் குழந்தை துள்ளி விழுகுது
பாட்டி யாருடனோ வம்பு அளக்கிறார்"    

"பாத்து தீத்தி குழந்தை வளர்க்க
பாய்ந்து பறந்து பிள்ளையிடம் வந்தவர்
பாயை விரித்து நீட்டி படுக்கிறார்
பாய்ந்து குழந்தை வெளியே ஓடுது"

"பாத்திரம் காயுது வீடு மணக்குது
பாதி வயிற்றில் பிள்ளை அழுகுது
பாரதி பாட்டு 'ஐபாட்'டில் பாடுது
பானு மாமியுடன் சமையல் கதைக்கிறார்" 

 [கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

0 comments:

Post a Comment