கனவுகள் மலருதே!&பட்டினிச் சாவு! (குறுங்கவி)

 "கனவுகள் மலருதே!!"

 


"கங்கை குளித்தேன் காவேரி வணங்கினேன்

கதிர்காமம் போனேன் நல்லூர் சுற்றினேன்

கண்டம் தீரவில்லை நாடும் சீராகவில்லை

களைப்பு வாட்ட  சொப்பனம் விரிந்தது!"

 

"கற்றதை உணர்ந்தேன் பொய்யை அகற்றினேன்

கலப்பை எடுத்தேன் மண்ணை உழுதேன்

கயவரை நீக்கினேன் ஒற்றுமையை வளர்த்தேன்

கவலை போக கனவுகள் மலருதே!!"

 💪💪💪💪💪


"பட்டினிச்சாவு"[அந்தாதிக்கவிதை]"பட்டினிச்சாவு வாட்டிடா மக்கள் எல்லாம் 

எல்லா ஊரிலும் ஆர்ப்பாட்டம் செய்ய ...

செய்கிற போராட்டத்தில் இனங்கள் ஒன்றுசேர ,

ஒன்றுசேர்ந்த வலிமையில் வீரம் பொங்க ...

பொங்கும் எழிச்சி உணர்வை தூண்ட,

தூண்டிய எண்ணங்களில் உண்மை வெளிப்பட ...

வெளிப்பட்ட மோசடிகள் தலைவர்களை காட்டிட,

காட்டிய சொத்துக்களின் விபரங்கள் வெளிவர ...

வெளிவந்த குற்றங்கள் தலைவரை துரத்த,

துரத்திய பின் ஒழிந்தது பட்டினிச்சாவு!! "

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்-/-அத்தியடி, யாழ்ப்பாணம்]

0 comments:

Post a Comment