கடைசியாக வந்த திரைப்படங்கள் எப்படி?

 

சுருக்கமான பார்வை

''டைரி'' விமர்சனம்  - (''Diary'' Cinema Movie Tamil Review)

இன்னசி பாண்டியன் இயக்கத்தில் அருள்நிதி, பவித்ரா மாரிமுத்து, அஜய் ரத்னம் எனப்  பலர்   நடித்திருக்கும் கிரைம் - திரில்லர் திரைப்படம். எஸ். கதிரேசன் தனது 5 ஸ்டார் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, ரான் எத்தன் யோஹன் இசையமைத்துள்ளார்.

விபத்துகள் நிறைந்த பாதையில், ஒரு சில பயணிகளுடன் கிளம்பும் பேருந்தில், அருள்நிதியும் இணைந்துகொள்ள அதைத் தொடர்ந்து நிகழும் மர்மங்களும் அபாயங்களும், அது எதனால் நிகழ்கிறதுஇந்த பேருந்துக்கும் என்ன சம்பந்தம் என்பது தான் கதை.

தடம்புரண்ட திரைக்கதை.(2.5/5)

 

''லைகர்''-விமர்சனம் (''Liger'' Cinema Movie Tamil Review)

 பூரி ஜெகநாத் இயக்கத்தில் விஜய் தேவர்கொண்டா,ரம்யா கிருஷ்ணன்   நடிக்கும் அதிரடி திரைப்படம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழியில்     கரண் ஜோஹர் தயாரித்துள்ளார்.

சின்ன வயசில் இருந்தே மைக் டைசனை குருவாக எண்ணி பார்த்து மார்ஷியல் ஆர்ட்ஸ் சாம்பியனாக மாற வேண்டும் என நினைக்கும் ஹீரோ, கடைசியில் அந்த மைக் டைசனே டானாக மாறி தனது காதலியை கடத்தி வைக்க அவளை மீட்க குருநாதர் மைக் டைசனை அடித்துப் போட்டு அவருடன் செல்ஃபி எடுப்பது தான் லைகர் படத்தின் கதை.

 சூப்பர் மொக்கைப்  படம் (1/5)

தொகுப்பு:செ. மனுவேந்தன்
0 comments:

Post a Comment