கடைசியாக வந்த திரைப்படங்கள் எப்படி?

சுருக்கமான பார்வை

 


 'ஜீவி - 2' விமர்சனம் [Jivi 2 Movie Review]

 

விஜே கோபிநாத் இயக்கத்தில்,  வெற்றி, மைம் கோபி, கருணாகரன், அஸ்வினி, ரோகிணி, ஜவஹர் எனப்பலர் நடித்த  திரில்லர் திரைப்படம். இப்படத்தினை  சுரேஷ் காமாட்சி தயாரிக்க,  சுந்தரமூர்த்தி கே.எஸ் இசையமைத்துள்ளார்.

 

ஜீவி படத்தின் முதல் பாகத்தில் நாயகன் வெற்றி ஒரு திருட்டை செய்ய, தொடர்ச்சியாக பல பிரச்சனைகளை சந்தித்து, முக்கோண விதி மற்றும் தொடர்வியல் விதி பற்றி அறிகிறார். அதன் தொடர்ச்சியை தடுக்க இவர் திருடிய வீட்டின் கண் தெரியாத பெண்ணை மணக்கிறார். ஒரு வழியாக முக்கோண விதி தொடர்ச்சி முடிவுக்கு வந்துள்ளதாக எண்ணி வாழ்ந்து வருகிறார்.

 

ஜீவி 2 திரைப்படம் முதல் பாகத்தின் தொடச்சியாக அமைகிறது. இரண்டாம் பாகத்தில் சொந்தமாக கார் வாங்குகிறார், தனது நண்பன் கருணாகரனுக்கு ஒரு டீ கடை வைத்து தருகிறார். பின் தன் மனைவிக்கு பார்வை பெற கண் அறுவை சிகிச்சை செய்ய முயற்சித்து வருகிறார்.

 

செழுமையாக செல்லும் இவரது வாழ்க்கை ஒரு கட்டத்தில் வறுமையாக மாறுகிறது. தொடர்ந்து பிரச்சனைகள் வருகிறது. மீண்டும் முக்கோண விதி தொடர்ச்சியில் சில பிரச்சனைகள் நடப்பதை பற்றி அறியும், வெற்றி அதிலிருந்து தப்பிக்க மீண்டும் திருட முயற்சிக்கிறார். பின் என்ன ஆனது என்பதே படத்தின் கதை.

 

முதல் பாகம் போன்று களை கட்டிடவில்லை.

[2.5/5]

  📽📽📽📽

 

'மேதகு 2 'விமர்சனம்  [ methagu   Movie Review]

 

 கிட்டு டி இயக்கத்தில் குட்டி மணி, ஈஸ்வர் பாட்ஷா, கெளரி சங்கர், நாசர்  நடித்திருக்கும் திரைப்படம்.

 

ஈழ  வரலாற்றின் தன்னெழுச்சியாக நடைபெற்ற மக்கள் புரட்சியை தலைமையேற்று நடத்திய மேதகு பிரபாகரன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றின்  இரண்டாவது திரைப்படம். இப்படம் முதல் பாகத்தை விட வீரியம் குறைவாக இருந்தாலும், உரிமை மறுக்கப்பட்ட ஈழத் தமிழர்களின் வலியை பதிவு செய்திருப்பதால் இப்படைப்பு நிச்சயம் தமிழரால்  வரவேற்கப்படும்.

 

 மேன்மை தங்கும் வரலாற்றுப் புதினம்..!

 📽📽📽📽

 

'திருச்சிற்றம்பலம்' விமர்சனம்  [  Thiruchitrambalam  Movie Review]

 

 மித்திரன் ஜவகர் இயக்கத்தில் தனுஷ், ராசி கண்ணா, பிரியா பவானி ஷங்கர், நித்யா மேனன், பிரகாஷ் ராஜ், பாரதி ராஜா எனப்  பலர்  நடித்திருக்க, கலாநிதி மாறன் தனது 'சன் பிக்சர்ஸ்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க,  அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.

 

தாத்தா பாரதிராஜா, மகன் பிரகாஷ்ராஜ், பேரன் தனுஷ் ஒரே வீட்டில் வசித்தாலும் அப்பா மகனான பிரகாஷ்ராஜும், தனுஷும் பத்து வருடங்களுக்கு மேலாக பேசிக் கொள்ளாமல் இருக்கிறார்கள். தனுஷும், கீழ் பிளாட்டில் வசிக்கும் நித்யா மேனனும் சிறு வயதிலிருந்தே நண்பர்கள்.

கிராமத்துப் பெண்ணான பிரியா பவானி சங்கர் மீது தனுஷின் காதல் முறிவடைய, நித்யா மேனன்தான் உனக்கு பொருத்தமான ஜோடி என தாத்தா பாரதிராஜா சொல்ல, அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.

 

தேவையற்ற சண்டை, பிரம்மாண்டம், ஆபாசம் இல்லாமல் ஒரு யதார்த்த காதல் குடும்பக் கதையாக இருப்பது  திருப்தி.[3/5]

தொகுப்பு :செ.மனுவேந்தன்


0 comments:

Post a Comment