வறுமை ,நினைவுகள்



 "கொடிது கொடிது இளமையில் வறுமை!"

 

"பழைய ஆடையுடன் குட்டி கால்களுடன்

பகல் இரவு அலைந்து திரிந்தேன்

பசி நடுக்கம் இரக்கமற்று வருத்த

பனிப்பொழிவு அழுது வாயை நனைத்தது

பரிதாபம் காட்ட  வேறெவரும் இல்லை?"

 

"கொடிய இருண்ட  பணக்கார தெருவில்

கொக்கு போல் கருணைக்கு நின்றேன்

கொற்றவை முன் படையல் படைத்து

கொழுகொழு மக்கள் வெறுத்து பார்த்தனர்

கொடிது கொடிது இளமையில் வறுமை!"

 

 

"தேம்பித் திரியும் நினைவுகள்!"

 

"ஆசையாக மாங்காய் களவாக பறித்தது

ஆத்திரம் கொண்டு எதிர்த்து பேசியது

ஆழம் அறியாமல்  குளத்தில் குதித்தது

ஆனந்தம் தரும் மீட்டு பார்த்தால்!"

 

 

"ஆலய கேணியில் தாமரை பிடுங்கியது

ஆலமர விழுதில் ஊஞ்சல் ஆடியது

ஆரவாரம் செய்து ஓடி விளையாடியது

ஆயிரம் தேம்பித் திரியும் நினைவுகள்!"

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

0 comments:

Post a Comment