விவாகாரத்தோ!!!

துள்ளி விளையாடும்

பள்ளிச்  சண்டையில்

உன்கூட கோவம் என்று

இருவிரலால் வெட்டிக்காட்டி

வன்வார்த்தைகூட  இலாது

வாய் பொத்தியன்று

சில மணிகள் கடந்தாலும்

சின்ன சிரிப்புடனே

தோளில் கைவைத்து

தோன்றிய பகைமறந்து

உறவாடிய

பிஞ்சு மனங்களெங்கே!

 

பெற்றவர் ஆதரவில்

உற்றாரின் கண்தங்கி

உதாரண மனிதர்களாய்

வளர்ந்த பிள்ளைகளா!

 

அக்கா  அடித்தாலும்

அண்ணன் உதைத்தாலும்

மாமன் முறைத்தாலும்

மாமி குறைத்தாலும்

அவர்கள்

மனசு  கோலாமல்

நடந்த பிள்ளைகளா!

 

திருமணம் கண்டபின்

திரும்பிய திசையெங்கும்

கண்டிடும் உறவுகள்மேல்

அரும்பிடும் வெறுப்புகள்

திரும்பிடும் துணைமேல்

கொண்டிடும் விவாகாரத்தோ!!!

 

ஆக்கம்:செ.மனுவேந்தன்

0 comments:

Post a Comment