"தமிழரின் உணவு பழக்கங்கள்" -பகுதி: 32

"FOOD HABITS OF TAMILS" PART: 32 "இன்றைய தமிழரின் உணவு பழக்கங்கள்" / "Food Habits Of present Tamils" [தமிழிலும் ஆங்கிலத்திலும் / In English and Tamil]

 


சமூகவியல் பேராசிரியர், Dr Govind Sadashiv Ghurye (12 December 1893 – 28 December 1983) அவர்களின் கருத்தின் படி, ஆவியில் சமைப்பது இந்தியாவில் நீண்ட வரலாற்றை கொண்டுள்ளது. புதிய கற்காலப் பகுதியிலும், சிந்து சம வெளிப்பகுதியிலும் கண்டு எடுக்கப் பட்ட, பல துளைகளைக் கொண்ட  உயரமான மண் உருளைகள் [சிலிண்டர்கள்] நீராவி சமையலுக்கு பாவிக்கப் பட்டு இருக்கலாம் என கருதுகிறார். ஆறாம் நுற்றாண்டை சேர்ந்த வராஹமிகிரர் என்ற பேரறிஞரின் பிருஹத் சம்ஹிதா அல்லது  பெரிய தொகுப்பு [Brahat Samhita of Varahamihira ] என்ற  சம்ஸ்கிருத நூல், ஆவியில் சமைத்த உணவை  புழுங்கல் அல்லது வியர்வை உணவு [“svinna bhaksya” / Sweat food] என குறிப்பிடுகிறது. கி பி 920 ஆண்டை சேர்ந்த சிவகோட்டியாச்சார்யர் எழுதிய வட்டராதனே [Sivakotiacharya’s Vaddaradhane] என்னும் பழமையான கன்னட நூலும் கி பி 1508 ஆண்டை சேர்ந்த மங்கராசாவின் சூப சாஸ்திரமும் [Mangarasa’s Soopa Shastra] ஆவியில் சமைப்பதை சொல்கிறது. இங்கு உணவு ஒரு மெல்லிய துணியால் சுற்றி கட்டியோ அல்லது ஒரு நாணற்கூடை அல்லது கொடிக்கூடை [wicker baskets] யில் வைத்து, அதை அகன்ற வாயை கொண்ட  நீர் கொதிக்கும் பாத்திரத்தின் மேல் வைக்கப்படுகிறது. கி பி 1250 இற்கு பின்பு தான் இப்ப நாம் செய்வது போன்ற இட்டலியை  ஆவியில் வேக வைக்கும் நடை முறை வந்ததாக கே.டி.ஆசயா கூறுகிறார். அதன் பின்பு தான் பிட்டு, இடியப்பம் போன்றவை இன்று நடைமுறையில் இருப்பது போல ஆவியில் வேகவைக்கப் பட்டன.


இலங்கையிலும். தென்னிந்தியாவிலும் உண்ணப் படும் ஒரு இனி ப்பு வகை கொழுக்கட்டையாகும். மேலும் இந்து சமயக் கடவுள்களில் ஒருவரான விநாயகர் வழிபாட்டின் போது கொழுக்கட்டை சிறப்பு உணவாக (நைவேத்தியமாக) பூசையில் வைக்கப்படுகிறது. இதுவும் ஒரு  வியில் வேகவைத்து சமைக்கும் உணவாகும். அரிசி மாவு மற்றும் தேங்காய்ப்பூ, வெல்லத்தினால் [சர்க்கரை] இது செய்யப்படுகிறது. இது மகாராஷ்டிராவில் முதல் முதல் சமைக்கப் பட்டதாக நம்பப் படுகிறது. இலங்கை வாழ் தமிழர்களின், குறிப்பாக சைவ சமயத்தவர்களின் முக்கிய நிகழ்வுகளில் கொழுக் கட்டைக்கும் ஒரு தனியிடம் இருக்கிறது. குறிப்பாக திருமணம், சாமத்தியச் சடங்கு, குழந்தைகளுக்கு முதல் பல் முளைத்தல் போன்ற பல சம்பிரதாய நிகழ்வுகளில் இது முக்கிய இடத்தை வகிக்கின்றது. உதாரணமாக குழந்தைகளுக்கு முதல் பல் முளைத்ததும், பல்லுக்கொழுக்கட்டை என்ற பெயரில் கொழுக்கட்டை அவித்து, அவர்களின் தலையில் கொட்டி கொண்டாடுகிறார்கள். இலங்கையின் கிழக்கு பகுதியில், குறிப்பாக அம்பாறை பகுதியில், பிள்ளைக்கொழுக்கட்டை எனப்படும்  சிறிய கொழுக்கட்டை செய்து நான்கு மாத கர்ப்பணித் தாய்க்கு விழா எடுப்பார்கள். இடைக்கால இந்தியாவில், தமிழர்கள் உட்பட, பெரும்பாலும் இரு நேரமே பொதுவாக உணவு உண்டார்கள் என நம்பப்படுகிறது.


இன்றைய தமிழர்கள் இன்னும் அரிசியை தினசரி அல்லது பிரதான உணவாக பொதுவாக மூன்று நேரமும் உட் கொள்கிறார்கள். உதாரணமாக நடுத்தர வர்க்க மக்கள் அரிசியை மூலப்பொருளாகக் கொண்ட இட்லி [இட்டலி], தோசை, பிட்டு, இடியப்பம் அல்லது அப்பம் தினசரி காலை அல்லது மாலை உணவாக உட்கொள்கிறார்கள். அரிசி மாவு, உளுந்து மாவு கலவையால் செய்யப்படும் ஒரு சிற்றுண்டி வகை இட்டலி. அதே போல தோசை என்ப தும் உளுந்து மற்றும் அரிசி கொண்டு தயாரிக்கப்படும் தட்டையான வட்டவடிவான உணவுப் பதார்த்தம் ஆகும். அப்படியே அரிசி மாவு, தேங்காய்த் துருவல் கொண்டு பிட்டையும் [புட்டையும்], அரிசி மாவினால் இடியப்பம், அப்பம் (ஆப்பம்) தயாரிக்கிறார்கள். இடியப்பமும் அப்பமும் இலங்கையில் அதிக அளவில் உண்ணப்படும் ஓர் உணவாகும். இடைக்காலத்தில், சமணம் போன்ற சமயங்களின் செல்வாக்கால் அசைவ உணவு அவ்வளவு பிரபலமாக இல்லாவிட்டாலும், இன்று அப்படி ஒரு விலக்கப் பட்ட உணவாக தமிழர்கள் மத்தியில் பொதுவாக இல்லை. என்றாலும் விழாக் காலங்களிலும் விரதம் அல்லது நோன்பு காலங்களிலும் இது பொதுவாக தவிர்க்கப்படுகிறது.


முன்னைய காலங்களில், இரவில் மிஞ்சிய சோற்றை நீரில், இரவின் குளிர்ச்சியில் ஊறவைத்து அதை காலையில் தயிருடன் கலந்து அல்லது தினைக்கஞ்சியை உண்பார்கள். இந்த ஆரோக்கியமான காலை உணவு எல்லோராலும் வர்க்க வேறுபாடு இன்றி அன்று உண்ணப் பட்டது. இந்த நடைமுறை இன்று கிராமப் புறங்களில் கூட மறைந்து வருகிறது. இனிப்பு பானங்களில் பாயசம் (பாயாசம்) இன்னும் விருந்துகளிலும் திருநாள்களிலும் பரிமாறப்படுகிறது. இது பால், சவ்வரிசி, சேமியா, முந்திரி, திராட்சை, ஏலக்காய் முதலிய வற்றைக் கொண்டு செய்யப் பட்ட ஒரு பானம் ஆகும். மேலும் முன்னைய காலங்களில் முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் காலை, அந்த பழஞ்சோற்றுத் தண்ணீரை குடித்தார்கள். ஆனால் இன்று இது காபி மற்றும் தேநீர்களால் மாற்றிடு செய்யப் பட்டுள்ளது. இப்படியான மாற்றங்கள் மந்த கதியில் தமிழர்களைப் பொறுத்த மட்டில் நடைபெற்றாலும், அதன் சில அறிகுறிகள் இன்று காணக்கூடியதாக உள்ளது.

 

நன்றி

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] 

 

பகுதி : 33 தொடரும்

✬✬✬அடுத்த பகுதியை வாசிக்க ... அழுத்துக...


✬✬✬ஆரம்பத்திலிருந்து வாசிக்க...அழுத்துக

Theebam.com: திருக்குறள்/01/ : கடவுள் வாழ்த்து

 

"FOOD HABITS OF TAMILS" PART: 32 "

Food Habits Of present Tamils"


According to Professor of Sociology, late Dr Govind Sadashiv Ghurye (12 December 1893 – 28 December 1983), cooking in steam has a very long history in India. He remarks that the tall earthen cylinder with many perforations all over found at excavations at Neolithic and Indus Valley sites, was a vessel used for steam cooking? Brahat Samhita [பிருஹத் சம்ஹிதா] of Varahamihira [வராஹமிகிரர்] (early sixth century) mentions steam cooked food as “svinna bhaksya” [Sweat food], food cooked using the method “svedanam” [ஸ்வேதனம்] or steaming. Jain literary works in Kannada language – Sivakotiacharya’s Vaddaradhane [சிவகோட்டி யாச்சார்யர் எழுதிய வட்டராதனே என்னும் பழமையான கன்னட நூல்] (920 AD) and Mangarasa’s Soopa Shastra [மங்கராசாவின் சூப சாஸ்திரம்] (1508 AD) – both mention steam cooking by placing food tied in thin cloth or placed in wicker baskets over a wide mouthed vessel in which water was boiled. Achaya contends that only after 1250 AD are there references to what seem to be idlis as we know them, as along with trade and commerce with Southeast Asia - food ingredients, recipes and culinary techniques also reached these ancient shores to develop new food such as Idli or modified cooking techniques for Puttu, Idiappam etc. The modak [kozhakkattai / கொழுக்கட்டை], sweet balls, an ancient ritualistic food offering to the elephant - headed deity Ganesha, is a steam - cooked preparation of rice flour dumplings filled with grated coconut and jaggery. It may originated in the Indian state of Maharashtra? Kozhukkattai form the basis of a number of natal customs among the Sri Lankan Tamil community. There is a custom in the north involving these (dumplings with edges pressed to resemble teeth) being dropped gently on a toddler's head while the family wishes for the infant to develop healthy teeth. In eastern areas, such as Amparai district, piḷḷai kozhukkaṭṭai, a smaller version, are prepared for an expectant mother at about four months time after conception by female family members. These are also commonly exchanged sweets at weddings as auspicious symbols of "plump" health and fertility. In many customs in medieval India, including Tamils, people ate only twice a day.

 

The staple cereal of Tamils is, of course, still rice, which is often eaten at all three meals. Breakfast in most middle class families consists of idli (a rice and dhal batter, steamed), dosai (the same batter fried like a pancake), puttu (a steamed rice-flour preparation served with coconut scrapings), idiappam (a rice-flour dough pressed through a mould to resemble vermicelli and steamed) or appam (a rice-flour and coconut delicacy fermented with toddy and cooked like a pancake). In mediaeval period non-vegetarian diet was no longer popular due to the spread and influence of Jainism in Tamil Nadu. Presently Non-Vegetarian diet is no longer a taboo among various communities of Tamils other than Brahmins. Yet on several days in a year, due to festivals and fasting days / days of austerity, (Nonbu), the non-vegetarian food is avoided by a majority of the Tamils.

 

In earlier days the morning food used to be the night rice soaked in water and kept to the coolness of the night. This cold rice mixed with curd, or millet gruel, was the healthy breakfast preferred by all irrespective of class and castes. This practice is fast disappearing even in rural areas. Among the sweet liquids the Payasam, a kind boiled porridge mixed often with milk, and cereals with dry fruits and nuts and spices is still familiar on special occasions. Earlier the morning drink used to be the night-rice water- a nourishing liquid and in modern times replaced by familiar drinks such as coffee and tea, served with plenty of milk and sugar. Although such changes have taken place ​​in a slow phase, some signs of it are visible now.

 

Thanks:[Kandiah Thillaivinayagalingam,Athiady, Jaffna]

PART : 33 WILL FOLLOW

0 comments:

Post a Comment