மருத்துவ செய்தி

முடி உதிர்வதைத் தடுக்க வேண்டுமா?
இன்றைய காலத்தில் சுத்தமான நீர் இல்லாததாலும், இயற்கை முறையில் தலைக்குக் குளிக்காமல், இரசாயனக் கலப்பு நிறைந்த ஷாம்பு, சோப்பு போன்றவற்றால் குளிப்பதாலும் இளம் வயதிலேயே தலை முடி கொட்டி விடுகிறது.
முடி என்னமோ எளிதாகக் கொட்டிவிடுகிறது. ஆனால், அதனை மீண்டும் முளைக்க வைக்கவோ, மேலும் முடி கொட்டாமல் காப்பாற்றுவதோ இன்றைய மருத்துவத்தில் பெரும் சவாலாக உள்ளது.

ந்நிலையில், முடி உதிர்வதைத் தடுக்கவும், இள நரையை தவிர்ப்பதும் எப்படி என்பது குறித்து இயற்கை மருத்துவம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

வேப்பிலை ஒரு கையளவு எடுத்து அதனை தண்ணீர் போட்டு கொதிக்க வைத்துவிட்டு மறுநாள் அந்தச் சாறு எடுத்து தலையைக் கழுவிக் கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

வெந்தயம், குன்றிமணியை பொடி செய்து, அதனை தேங்காய் எண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தினமும் அதனை காலையில் தலையில் தேய்த்து வந்தாலும் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

சிலருக்கு சிறு வயதிலேயே இளநரை தோன்றும். இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே போதும் இளநரை மாயமாகிவிடும்.

சிலருக்கு முழுவதும் நரையாகிவிடும். இவர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், தாமரைப் பூ கஷாயம் வைத்து தொடர்ந்து காலை, மாலை என குடித்து வரவேண்டும். முளைக்கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் நரை படிப்படியாகக் குறையும்.

சரி, முடி உதிர்வதைப் பார்த்தோம், நரை போக்க வழி பார்த்தோம். முடி வளர வழி இருக்கிறதா? ஆம் அதுவும் இருக்கிறது நம் இயற்கை மருத்துவத்தில்.

கறிவேப்பிலையை நன்கு அரைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் முடி வளரும்.

இல்லையென்றால், காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்து வந்தாலும் முடி வளரும்.

இவையனைத்திற்கும் மேலாக, சுத்தமாக முடி இல்லாமல் வழுக்கையாக இருப்பவர்களுக்கு ஒரு குறிப்பு.

கீழாநெல்லி வேரை எடுத்து சுத்தம் செய்து அதனை துண்டுகளாக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி அதனை தலையில் தொடர்ந்து தலையில் தடவி வந்தால் வழுக்கை மறையும்.

இணையத்தில் இனி ஆடையை தொட்டுப் பார்த்து வாங்கலாம்! குஷியில் பெண்கள்

இனி பெண்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான். ஏன் என்று கேட்கிறீர்களா? இன்டர்நெட் வழியாக அதாவது ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும் போதும் இனிமேல் பொருட்களை தொட்டுப் பார்த்து வாங்கலாம்.

ஷரோன் பர்லே என்ற பேராசிரியரே மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார்.. லண்டனின் ப்ரூனல் பல்கலைக்கழகத்தில் ஆடை வடிவமைப்பு துறையில் பேராசிரியராக இருக்கிறார்.

இவரது தலைமையில் ஆடை வடிவமைப்பு மற்றும் இணையதள நிபுணர்கள் கொண்ட குழுவினர்டிஜிட்டல் சென்சோரியா digital sensoria என்ற தலைப்பில் ஒரு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

ஆராய்ச்சி பற்றி ஷரோன் கருத்துத் தெரிவிக்கையில்,

அனிமேஷனில் ஒரு வகைஸ்டாப் மோஷன் அனிமேஷன். அதாவது, பொம்மைகளை கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்தி, ஒவ்வொரு நகர்வுகளையும் படமெடுத்து, அதை படமாக ஓட்டுவது.

இந்த டெக்னிக்கையும் தொடுதிரை (டச் ஸ்கிரீன்) தொழில்நுட்பத்தையும் இணைத்து புதுவித தொழில்நுட்பம் உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளோம்.

ஐபோன், ஐபேட், டேப்லட் கம்ப்யூட்டர்களின் டச் ஸ்கிரீன் உதவியுடன், நிஜத்தில் துணியை தொட்டுப் பார்ப்பதுபோன்ற உணர்வை பெற முடியும். அடிப்படை தொழில்நுட்பம் தயாராகிவிட்டது.

அதை மேம்படுத்தி மெருகூட்டுவதற்கான ஆய்வு நடந்து வருகிறது.

இனி தொட்டுப் பார்த்து பார்த்து கணினியின் தொடுதிரையும் தேயப் போகிறது.

சினிமா..கடந்த 30 நாட்களில் வந்த திரைப்படங்கள்.

2011-10-09 சதுரங்கம்
நடிகர்கள்: ஸ்ரீகாந்த், சோனியா அகர்வால், மணிவண்ணன்.  
கதை: ஒரு நிருபரின் வாழ்க்கையில் நடக்கும் சதுரங்க ஆட்டம்தான் கதை.
கருத்து: 2004-ல் எடுக்கப்பட்ட இந்த படத்தில் ஏகப்பட்ட திருப்பங்கள் இருக்கின்றன என்றாலும் இந்த காலகட்டத்தில் நிறைய படங்களில் அவைகள் எல்லாம் வந்து விட்டதால் எதுவும் புதிதாய் தோன்றவில்லே.
புள்ளிகள்:30
2011-10-08 வெடி
நடிகர்கள்: விஷால், சமீரா ரெட்டி, விவேக்.
கதை: தொலைத்து விட்ட தன் தங்கையை தேடி யலையும் ஒரு அண்ணனின் கதை.
கருத்து: பொழுதுபோகலை என்றால் பார்க்கலாம்.
புள்ளிகள்:35
2011-10-08 முரன்
நடிகர்கள்: சேரன், பிரசன்னா,ஹரிபிரியா,ஜெயப்பிரகாஷ்.
கதை: வாழ்க்கை பயணத்தில் நாம் சந்திக்கும் முரண்பட்ட மனிதர்களை பற்றிய கதை.
கருத்து: முரண் பட்ட மனிதர்களை முடித்தால்,முடிவாக எஞ்சுவது உலகில் ஒருவனே!ஏற்றுக் கொள்ள முடியாத கதை.
புள்ளிகள்:45
2011-10-03 ஆயிரம் விளக்கு
நடிகர்கள்: சாந்தனு, சுமன், சத்யராஜ், டெல்லி கணேஷ்.கஞ்சாகருப்பு.
கதை: அப்பா-மகன் பாசத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும் கதை.
கருத்து: ஆயிரம் விளக்கு - பிரகாசமில்லை!
புள்ளிகள்:30
2011-10-03 வாகை சூட வா
நடிகர்கள்: விமல்,இனியா, பாக்யராஜ்.
கதை: 1966-ல் அரசு வேலை என்பது எட்டாக்கனியாக இருந்த காலகட்டதில் குழந்தை தொழிலாளர்களை மையமாக வைத்து ஒரு கிராமத்தில் நடக்கும் கதை.
கருத்து: தரமான திரைப்படம்.
புள்ளிகள்:80
2011-09-18 எங்கேயும் எப்போதும்
நடிகர்கள்: ஜெய், அஞ்சலி.
கதை: சற்றும் சிந்திக்காத அவசரம் மனிதனின் வாழ்வையே மாற்றிவிடுகிறது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் படம்.
கருத்து: நீண்ட காலங்களின் பின் பாடம் சொல்லும் படம்.
புள்ளிகள்:80
2011-09-18 வந்தான் வென்றான்
நடிகர்கள்: ஜீவா, டாப்சி பன்னு , சந்தானம்.
கதை: தனக்கென பயணத்தை தீர்மானித்து விட்டுச் செல்லும் ஒருவனுக்கு ஏற்படும் தடைகளும், அதை வெல்வதும்தான் கதை.
கருத்து: எதோ வந்தானாம்,போனானாம்.
புள்ளிகள்:35
2011-09-17 மங்காத்தா
நடிகர்கள்: அஜித், ஜெயப்பிரகாஷ், த்ரிஷா, அர்ஜுன்.
கதை: ஒரு கொள்ளைக்கும்பல், ] வங்கியிலிருந்து தங்ககட்டிகளை கொள்ளையடிக்கிறது.
ஏமாற்றப்பட்டவர்கள் மீண்டும் தங்ககட்டிகளை எப்படி கைகப்பற்றுகிறார்கள் என்பதே கதை.
கருத்து: ஒரு தடவ பார்க்கலாம். சுமார் ரகம்.
புள்ளிகள்:50
2011-09-17 யுவன் யுவதி
நடிகர்கள்: பரத்,ரீமா,சந்தானம்.
கதை: உசிலம்பட்டி கலாசாரத்தில் இருந்து நழுவி அமெரிக்காவுக்குச் சென்று நவீன வாழ்க்கையை வாழ ஆசைப்படும் பரத்.இருவருக்குள்ளும் நடக்கும் காதல் விளையாட்டுகளே 'யுவன் யுவதி.
கருத்து: மொத்தத்தில் "யுவன் யுவதி", ரசிகர்கள் கொடுக்கும் காசுக்கு "பலன் பாதி!"
புள்ளிகள்:40
2011-09-17 முதல் இடம்
நடிகர்கள்: விதார்த், கவிதா நாயர், மயில்சாமி.
கதை: ஒரு லோக்கல் ரவுடி கிரிமினல் பட்டியலில் முதல் இடத்தில் வரத் துடிக்கும் வாலிபரின் கதை.
கருத்து: முதலிடம் இவ்வருடத்தின் கடைசியிடம்.
புள்ளிகள்:25
2011-09-17 வெங்காயம்
நடிகர்கள்: அலெக்சாண்டர், பவீனா, சத்யராஜ்
கதை: போலிச் சாமிமாரின் தோலை உரித்துக்
காட்டும் கதை.
கருத்து: மூட நம்பிக்கைகள் மலிந்த நிலத்தில் ஒரு துணிச்சலான திரைக்கதை.:
புள்ளிகள்:60