"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific
perspective" [In Tamil & English]
பகுதி: 37 B / பின் இணைப்பு - தீபவம்சம் / ''புத்தருக்கு மந்திர தந்திர சக்தி உண்டா?'
[தமிழ் விரிவாக்கம் தொடர்கிறது]
மீண்டும் அத்தியாயம் 1ல்:
76. பலமான கயிற்றால் இழுத்துச் செல்லப்படும் காளைகளின் கழுத்தை சுற்றியிருக்கும் ஒரு கடிவாளம் போல, கௌதம புத்தர் தனது (மந்திர) சக்தியால், [மற்றோரு] தீவைத் தன்னை நோக்கி இழுத்துக் கொண்டார். அதாவது இரண்டு கப்பல்கள் உறுதியான கயிற்றினால் சூழப்பட்டு இருப்பது போல, முனிவர் [புத்தர்] ஒரு தீவை மற்றொன்றை நோக்கி இழுத்தார்.
77. அழகான தீவை மற்றொன்றுக்கு இணைத்த பிறகு, ததாகதர் (மனதில் நிறைநிலை அடைந்த, கௌதம புத்தர்) அரக்கர்களை (?) அங்கு பலவந்தமாக இலங்கையில் இருந்து அகற்றி, அவர்களிடம்
"அனைத்து அரக்கர்களும் கிரிதீபாவில் [Giridīpa / An island near Sri
Lanka] வசிக்கட்டும் . . ” என்றார்.
78. கோடையில் தாகம் எடுத்த மக்கள் நதிக்கு ஓடுவது போல, [தப்பினோம் பிழைத்தோம் என்ற] எதிர்பார்ப்புடன் இயக்கர்கள் கிரிதீபாவுக்கு ஓடினார்கள்; அவர்கள் அனைவரும் திரும்பி இலங்கைக்கு வருவதில்லை என்ற உறுதியுடன் அங்கு நுழைந்தனர்; முனிவர் (பின்னர்) தீவை அதன் முந்தைய இடத்திற்கு கொண்டு சேர்த்தார்.
பௌத்த மரபு படி, புத்தருக்கு “தெய்விக ஆற்றல் (Iddhi)” என்ற மாய /மெய்ஞ்ஞான சக்திகள் (psychic / magical abilities) இருந்தன என்று நம்பப்படுகிறது. உதாரணமாக: நீரில் நடந்து செல்லும் திறன், ஒரே நேரத்தில், பல்வேறு இடங்களில் தன்னைக் காட்டுதல், வானத்தில் பறப்பது மற்றும் பிறர் சிந்தனையை அறிதல் போன்ற திறன்களைக் கொண்டு இருந்தார் என நம்பப்படுகிறது. ஆனால் புத்தர் தாமாகவே சொன்னார்: “இத்தகைய மாயங்களை வெளியே காட்டுவது தவறு; உண்மையான விடுதலை ஞானத்திலேயே உள்ளது.” என்று. எனோ அவரின் கூற்றை மறந்து விட்டார்கள்?
எனவே,
தீபவம்சம் போன்ற நூல்களில் கூறப்படும் வரலாறுகள் சில பொதுமக்களின் பக்தியை தூண்டும் வகையில் மார்க்கத்துடன் புராணத்தையும் கலந்து எழுதப்பட்டவை என்பதே உண்மை! புத்தர் மந்திர தந்திர சக்திகளில் நம்பிக்கை அல்லது விருப்பம் இல்லாதவர் என்பதே உண்மையாகும்!
இன்னும் ஒன்றையும் நான் சொல்ல வேண்டும், உதாரணமாக பத்து தலை இராவணன் என்றால், பத்து பேரின் பலத்தை உடையவன் என்று குறியீட்டு ரீதியாக அல்லது உருவகமாக [symbolically or metaphorically] நாம் எடுத்துக் கொள்ளலாம். அவ்வாறே புத்தரின் போதனைகள் எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும், 'அவரது இருப்பு பெருகுவது போலத்' [Multiplying his body] தோன்றும் அல்லது ஒரே மூலத்திலிருந்து தோன்றினாலும், உண்மை பல வடிவங்களில் வெளிப்படும் என்று 'ஒரே நேரத்தில், பல்வேறு இடங்களில் தன்னைக் காட்டுதல்' [One could create multiple visible
forms of himself, appearing simultaneously in various locations or positions —
as if there were many versions of himself present at the same time.] என்பதற்கான அர்த்தத்தை நாம் எடுத்துக் கொள்ளலாம் என்று எனக்குத் தோன்றுகிறது. உங்களுக்கு எப்படியோ?
*அடுத்த பகுதியை வாசிக்க அழுத்துக...
*ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக...
நன்றி
Thanks
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]
பகுதி / Part: 38 தொடரும் / Will follow
0 comments:
Post a Comment