"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look
at 'Lanka chronicles' from a scientific perspective" [In Tamil &
English]
[This
detailed Tamil article is based on the unfinished historical book 'History of
Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The
English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]
பகுதி: 37 A / பின் இணைப்பு - தீபவம்சம் / 'தீபவம்சத்தின் அத்தியாயம் 1 இல் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள பயங்கரவாத தந்திரங்களை புத்தர் உண்மையில் கையாண்டாரா?'
அத்தியாயம் 1, புத்தர் காற்றில் பறந்து தனது முதல் பயணத்தை இலங்கைக்கு செய்தது மட்டும் அல்ல, புத்தர் தீவின் பழங்குடியினர் மக்களை, இயக்கர்கள் (Yaksha), பூதங்கள் மற்றும் அரக்கர் என அவர்களை 'மனிதர்கள் அல்லாதவர்கள்' [non-humans; Yakkhas, Bhutas and
Rakkhasas.] என்றும் விவரிக்கிறார். இது புத்தரின் சிறந்த புனிதத்தன்மையை மதியாது செய்யும் அல்லது வர்ணிக்கும் அடாச்செயல் போல் தெரிகிறது. இது கட்டாயம் அவரின் குணங்கள் மீதான துரோகமாகும். இரண்டாயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்பு மனிதரல்லாத மனிதர்கள் உலகில் எங்கும் வாழ்ந்தார்கள் என்பதை இந்தக் காலத்தில் யாரும் நம்ப மாட்டார்கள். அதற்கான அறிவியல் சான்றுகளும் இல்லை. பகை உணர்வு கொண்ட
துறவிகள் மற்றும் கேவலமான அரசியல்வாதிகள் மற்றும் குழுநல அக்கறை மட்டுமே கொண்ட
கல்வியாளர்களின் மனதில் தவிர, இப்படியான பொய்யான வர்ணனை, முரணான செயல்கள் இடம் பெறாது என்பது வெளிப்படை. பழங்குடியினர்களின் நிலங்களை, அவர்களின் மண்ணை
முறைகேடாக அபகரிக்க முடிவு செய்யப்பட்டு, மனிதர்கள் அல்லாதவர்களின் கதையை உருவாக்கியது போலத் தோன்றுகிறது.
இரண்டு மனித பெற்றோருக்கு பிறந்த புத்தர், காற்றில் பறந்தார் என்பது வெறும் புராணக்கதை மட்டுமே. அது போலவே மற்றோரு புராணக் கதையான, மகாவம்சத்துக்கு முன்பே எழுதிய இராமாயணக் காவியத்தின்படி, அனுமன், அதுவும் ஒரு கையில், ஒரு மலையைக் காவியபடி,
இலங்கைக்குப் பறந்தார் என்று கூறுகிறது. அது மட்டும் அல்ல, அவர்கள் போரில் ஈடுபட்டு, சீதையை மீட்டு, இலங்கையை விட்டு திரும்பினர் என்று மேலும் அந்த கதை கூறுகிறது. ஆனால் அவர்கள் , அதை ஒரு சாட்டாகக் கூறி,
இலங்கைத் தீவைத் தங்களுக்குத் தான் என எடுத்துக் கொள்ளவில்லை. எனவே, அனுமானால் பறக்க முடியுமா இல்லையா என்பதைப் பற்றி அங்கு யாரும் கவலைப்படவில்லை. ஆனால், புத்தரை இங்கு ஒரு பண்டைய நாள் பயங்கரவாதியாக சித்தரிக்கப்படுகிறார்; அவர் கனமழை, குளிர் காற்று மற்றும் இருளால், அந்த பண்டைய இலங்கை
மக்களை பயமுறுத்துகிறார். துறவி ஆசிரியர்கள் தங்கள் கொடூரமான கருத்துக்களை, மிகவும் கருணையான கண்ணியமான நபரான புத்தரின் குரல் மற்றும் செயல்கள் மூலம், உண்மையில் தங்களைத் தாங்களே அம்பலப்படுத்துகிறார்கள் என்பதே உண்மை!. அது இன்னும், அதே வழியில் வந்த துறவிகளால், வடக்கிலும் கிழக்கிலும் தொடர்கிறது, அதற்கு அரசும் அரசியல் வாதிகளும், அரச படைகளும்
வெள்ளைக்கொடி ஏந்துகிறார்கள் என்பது, நாம் இன்று காணும் உண்மை. இவர்களுக்கு ஒத்து ஊதும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களையும் மற்றும் கல்வி கற்ற அறிஞர்களையும் கூடாக் காண்கிறோம். பாவம் புத்தர்!
"இதோ இயக்கர்களை கட்டாயப்படுத்தி கட்டுப்படுத்தும் புத்தரின் செயல் முடிவடைகிறது" என்று அத்தியாயம் 1 முடிவடைகிறது. இது என்னத்தைக் காட்டுகிறது?
தீபவம்சத்தின் அத்தியாயம் 1-ல் கூறப்பட்டுள்ள பயங்கரவாத தந்திரங்களை புத்தர் ஒருபோதும் கையாண்டிருக்க மாட்டார். தங்கள் நாகரிக ஐரோப்பியர்கள் என்று பெருமை கூறிக்கொண்டு, காலனித்துவ நாடுகளின் நாகரிகமற்ற காட்டுமிராண்டிகளை நாகரிகப்படுத்த வந்தனர் என்று ஐரோப்பிய காலனித்துவவாதிகள் இதே போன்ற தர்க்கத்தைத் தான்
பயன்படுத்தினர் என்பதை கொஞ்சம் ஞாபகப் படுத்துங்கள். உதாரணமாக, இந்தியப் பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் போர்த்திறஞ்சார்ந்த [மூலோபாய] இராணுவ தளங்களை நிறுவுவதற்கு அவர்கள் பல பூர்வீக மக்களை வேரோடு பிடுங்கினார்கள் என்பது இன்றைய உண்மை வரலாறு!.
---------------------------------------------------
*அடுத்த பகுதியை வாசிக்க அழுத்துக...
*ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக..
Part: 37 A / Appendix –
Dipavamsa / 'Is Buddha resorted to such terror tactics as outlined in the
chapter 1 of the Dipavamsa?'
Chapter
1 is about the Buddha’s purported first visit to Lanka by flying through air.
The Buddha describes the original (aboriginal) inhabitants of the island as
non-humans; Yakkhas, Bhutas and Rakkhasas. This is sacrilege on the excellent
benevolent and genial qualities of the Buddha. No one in this age would believe
that non-humans lived two thousand five hundred years ago anywhere in this
world, except in the minds of the nefarious monks and the vile politicians and
the vested interest academicians of same ilk. It was decided to misappropriate
the lands of the original inhabitants, and concocted the story of non-humans.
The capability of flying by humans, the Buddha was born to two human parents,
is mere legend. Hanuman, as per the epic Ramayana, flew with a mountain in one
of his hands to Lanka. They came, in the Ramayana Epic, fought a battle and
returned with their lady. It was not to take the island for themselves, and,
therefore, no one cared whether it could be possible to fly or not. The Buddha
is portrayed here as an ancient day terrorist; terrorizing the inhabitants with
heavy rains, cold winds and darkness. Monkish authors expose their cruel ideas
through the alleged voice and actions of the Buddha who is a very decent
person. The chapter 1 ends thus “Here end (Buddha’s) subjection of the
Yakkhas”. Buddha would never have resorted to such terror tactics as outlined
in the chapter 1 of the Dipavamsa. The European colonizers used similar logic
that the civilized Europeans came to civilize the uncivilized barbarians of the
colonized countries. They uprooted many native peoples to establish strategic
military bases in the Indian Ocean and the Pacific Ocean areas.
நன்றி
Thanks
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]
பகுதி / Part: 37 B தொடரும் / Will follow
0 comments:
Post a Comment