உணவின்புதினம்


முட்டை உண்டால்…..
முட்டை மீது அலாதி விருப்பம் கொண்டிருக்கிறீர்களா ? தினமும் முட்டை சாப்பிடவேண்டும் போலிருக்கிறதா ? உங்களுக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் தருவதற்காகவே வந்திருக்கிறது அமெரிக்க ஆய்வு ஒன்று.
வாரம் ஏழு முட்டைகள் அல்லது அதற்கு மேல் உண்பவர்களுக்கு மரணம் விரைவிலேயே வரும் வாய்ப்பு 23 விழுக்காடு அதிகரிக்கும் என்பதே அந்த ஆய்வு!
அதிலும் குறிப்பாக நடுத்தர வயதுடையவர்கள் இந்த எல்லையைத் தாண்டி முட்டையை உட்கொண்டால் ஆபத்து அதிகமாம்.
நீரிழிவு நோயாளிகள் எனில் முட்டையின் பக்கம் பார்வையைக் கூட திருப்பக் கூடாதாம். அவர்கள் ஒரு முட்டை சாப்பிட்டாலும் அது அவர்களுக்கு இன்னலை உண்டாக்கி விடக் கூடும். விரைவில் மரணமடையும் வாய்ப்பு 50 விழுக்காடு அதிகரிக்கும். இப்படி அடுக்கடுக்காய் சொல்லி முட்டை பிரியர்களின் விருப்பத்துக்கு முட்டுக் கட்டை போட்டிருக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
இதய நோய், வலிப்பு போன்ற பல நோய்களை இந்தஅதிக முட்டை உண்ணும் பழக்கம்இழுத்துக் கொண்டு வந்து நமது உடலுக்குள் புகுத்தி விடுகிறது. முட்டையில் காணப்படும் அதிகப்படியான கொழுப்புச் சத்து இதன் காரணமாய் இருக்கலாம் எனத் தெரிகிறது.
இந்த ஆய்வை நிகழ்த்திய ஹார்வேர்ட் குழுவினர் சுமார் இருபத்து ஏழு ஆண்டுகளாக, இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களை ஆய்வு செய்து இந்த முடிவை எட்டியிருக்கின்றனர்.
இதய நோய்க்கும் முட்டைக்கும் இடையே நிரூபிக்கப்பட்ட தொடர்பு ஏதும் இல்லையென்றாலும் இருபது ஆண்டு இடைவெளியில் அதிக முட்டை சாப்பிட்டவர்களில் 23 விழுக்காட்டினர் மரணமடைந்திருக்கிறார்கள் என்பது முட்டை உணவின் பாதுகாப்பற்ற தன்மையை விளக்குகிறது..

எனினும் அதிகபட்சமாக ஆறு முட்டைகள் வரை உண்பது கெடுதலை ஏற்படுத்துவதில்லையாம். முட்டையும் எல்லா உணவு வகைகளையும் போன்றதே ! மிக நன்று எனவோ, மிகவும் கெடுதல் எனவோ தெளிவான நிர்ணயம் செய்ய முடியாது எனவும் அவர்கள் தங்கள் ஆய்வில் தெரிவித்திருக்கின்றனர்.
முட்டை மீதான இந்த ஆராய்ச்சிஅளவோடு உண்டு வளமோடு வாழநம்மை எச்சரிக்கிறது.
கருஞ்சீரகம்
தோல் நோய்களை குறைக்கும். பசியைத்தூண்டும். சீரணத்தை சீர்படுத்தும். வயிற்றுப் போக்கை குணப்படுத்தும். புழுக்கொல்லியாக செயல்படும். வாந்தியைத் தடுக்கும். இதய வலியை குறைக்கும். சிறுநீர் சுரப்பிகளை தூண்டும். பால் சுரப்பைக் கூட்டும்.
* சிறிதளவு கருஞ்சீரகத்தை பசும்பால் விட்டு அரைத்து முகத்தில் பூசி ஊறிய பின் கழுவி வர முகப்பரு மறையும்.
* கருஞ்சீரகத்தை நீர் விட்டு, அரைத்து, நல்லெண்ணையிëல் குழைத்து கரப்பான், சிரங்கு ஆகியவற்றில் பூசி வர குணம் தெரியும்.
* கருஞ்சீரகத்தை தேன் விட்டு அரைத்து பிரசவித்த பின் ஏற்படும் வலிக்குப்பூசிட வலி மாறும்.
* கருஞ்சீரகத்தை அரைத்து தேமல் மேல் பூசி வர தேமல் சிறிது சிறிதாக மாறும்.
* கருஞ்சீரகத்தை வறுத்து காடி விட்டு அரைத்து சொறி, தேமல் மேல் பூசி வர தேமல், சொறி மறையும்.
* கருஞ்சீரகத்தையும், தும்மட்டிக்காயையும் சேர்த்து அரைத்து விலாப்பக்கம் பூசி வர குடல் பூச்சிகள் வெளியேறி விடும்.
* கருஞ்சீரகப்பொடி, மல்லிப்பொடி இரண்டையும் பாலில் கலந்து சாப்பிட அஜீரணம் மாறும்.
* கருஞ்சீரகப்பொடியை தயிரில் கலந்து சாப்பிட அஜீரணம் மற்றும் வாயு உற்பத்தி மாறும்.
* கருஞ்சீரகத்தை எருமைப்பால் விட்டு அரைத்து முகத்தில் தடவி வர முகப்பரு மாறும்.
* கருஞ்சீரகத்தை வெற்றிலை சாறு விட்டு அரைத்து காது, கன்னப் பகுதியில் ஏற்படும் வீக்கம் மேல் பற்று போட வீக்கம் மறையும்.
* கைப்பிடி கீழா நெல்லி இலைகளோடு ஒரு ஸ்பூன் கருஞ்சீரகம் சேர்த்து சிறிதளவு பால் சேர்த்து அரைத்து பின் இதை ஒரு கப் பாலில் கலந்து காலை உணவுக்கு அரை மணி நேரம் பின் மற்றும் மாலை நேரம் பருகி வர மஞ்சட்காமாலை குணமாகும்.
காபியா? டீயா?’
காலையில் சிலர் காபி முகத்தில் தான் கண் விழிப்பார்கள். இன்னும் சிலரோ டீ வாசனை முக்கைத் துளைக்கும் போதுதான் படுக்கையில் இருந்தே எழுவார்கள். இப்படி காபி, டீயுடன் அன்றைய நாளைத் தொடங்கும் சுவைப்பிரியர்களின் மனதில் கூட எப்போதாவது எட்டிப்பார்க்கும் கேள்வி: `எது நல்லது? காபியா? டீயா?’

முதலில் `டீக்கு வருவோமா? டீ குடித்தால் சில புற்று நோய்களும், இதயநோய்களும் ஏற்படும் வாய்ப்பு குறைவு என்கிறார்கள், மருத்துவ நிபுணர்கள். அதோடு ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்க டீ உதவுகிறது.
ஒரு கப் டீயில் காபியை விட குறைவான `காபினேஇருக்கிறது. அதனால் கொலஸ்ட்ரால் பற்றி கவலைப்பட அவசியமில்லை. உயர்ரத்த அழுத்தம் இருப்பவர்கள் ஒருநாளைக்கு ஒரு கப் டீயுடன்நிறுத்திக் கொள்வது நல்லது. இப்படிப்பட்டவர்கள் அதிகமாய் டீ குடிப்பது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்து விடக்கூடும்.

சிலர் டீ கொதிக்க கொதிக்க இருக்கும்போதே அதே சூட்டில் தொண்டைக்குள் இறக்குவார்கள். இப்படியே தொடர்ந்தால் தொண்டையில் புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்று எச்சரிக்கிறது, சமீபத்திய மருத்துவ ஆய்வு ஒன்று.

காபி கதைக்கு வருவோம். `டீயை விடவும் காபியில் `காபின்அதிகம் இருப்பதால் டீயை விட சிறப்பாகவும், வேகமாகவும், அதிக செயல்திறனை உணரமுடிகிறது. டீ குடிப்பவர் களுக்கு ஏற்படும் சுறுசுறுப்பை விட இது அதிகம். குறிப்பாக டிகாக்ஷன் காபிக்கு நகர்ப்புறத்தில் பிரியர்கள் அதிகம்.

வடி கட்டப்பட்ட `பிளாக் காபிக்கு அல்சைமர்ஸ், பெருங்குடல் புற்றுநோய், டைப்-2 நீரிழிவு நோய் ஆகியவற்றை தடுக்கும் வாய்ப்பு அதிகம்.

சிலர் கையில் எப்போதும் காபிக்கோப்பை புகைந்து கொண்டிருக்கும். இப்படிப்பட்டவர்கள் பின்னாளில் மனக்கவலை சார்ந்த நோய்களுக்கு உள்ளாகக்கூடும். எனவே காபியானாலும் அளவோடு குடித்து ஆரோக்கியம் காக்கலாம். காபிக்கு அடிமையாகி விட்டதை உணர்ந்து திடுமென அதை நிறுத்த முயல்பவர்கள் ஒரேயடியாக சோர்ந்து போவார்கள். கவனம் செலுத்துதலில் குறைபாடு ஏற்படக்கூடும். கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கலாம்.

கணினி நுட்பம்


விண்டோஸ் 8 இயங்குதளத்திற்கான உத்தியோபூர்வ விளம்பரத்தை வெளியிட்டது மைக்ரோசொப்ட்

கணனி உலகில் கொடிகட்டி பறக்கும் நிறுவனங்களுள் ஒன்று மைக்ரோசொப்ட்.
இந்நிறுவனத்தினால் உருவாக்கப்படும் விண்டோஸ் இயங்குதளத்தின் புதிய பதிப்பான விண்டோஸ் 8 ஆனது ஒக்டோபர் 26ஆம் திகதி உத்தியோக பூர்வமாக வெளியிடப்பட இருக்கின்றது.
இதனை அடிப்படையாக வைத்து அவ் இயங்குதளத்திற்கான விளம்பரங்களையும் மைக்ரோசொப்ட் நிறுவனம் உத்தியோகபூர்வமாக யூ டியூப் தளத்தில் வெளியிட்டுள்ளது.
கணனிப் பாவனையாளர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியுள்ள இந்த இயங்குதளமானது முன்னைய பதிப்புக்களை விடவும் மெட்ரோ பயனர் இடைமுகம் உட்பட பல புதிய அம்சங்களுடன் வெளிவரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விரைவில் சந்தைக்கு வருகிறது Bluetooth-வுடன் கூடிய Tooth Brush

Bluetooth உதவியுடன் செயல்படும் Tooth Brush-ஷை அமெரிக்க நிறுவனம் உருவாக்கியுள்ளது.
குழந்தைகளை பல் தேய்க்க வைப்பது, ஒழுங்காக பல் தேய்க்க வைப்பது தாய்மார்கள் அனுபவிக்கும் அன்றாட கொடுமைகளில் ஒன்று.
சில சோம்பேறி பெரியவர்களும் இந்த ரகத்தினர் தான். ஒப்புக்கு பல் தேய்த்துவிட்டு வந்துவிடுவார்கள்.
இதுபோன்ற அவதிகளை தடுக்கும் வகையில் அமெரிக்காவை சேர்ந்த பீம் டெக்னாலஜீஸ் நிறுவனம் Digital Brush-ஷை அறிமுகப்படுத்தியுள்ளது.
Smartphone-னின் Bluetooth உதவியுடன் இது செயல்படும். Smartphone-ல் அலாரம் செட் செய்தால், பல் துலக்க தினமும் நினைவூட்டும்.
அது மட்டுமின்றி Bio-Electric முறையில் பற்களுடன் பிரஷ் நன்றாக, போதிய அளவில் உராய்ந்ததா அதாவது, நீங்கள் ஒழுங்காக பல் தேய்த்தீர்களா என்பது கண்காணிக்கப்பட்டு, அந்த தகவலும் Smartphone-க்கு அனுப்பப்படும்.
ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருக்கும் அளவுடன் இது ஒத்துப்போனால், ‘Well done Boss’ என்று Message வரும். இந்த Brush அடுத்த மாதம் சந்தைக்கு வரவிருக்கிறது.

ஒன்லைனில் Curriculum Vitae தயாரிப்பதற்​கு

எந்தவொரு வேலைக்கு விண்ணப்பிப்பதற்கும் Curriculum Vitae அவசியமானதாகும்.
தற்போதைய தொழில்நுட்ப உலகில் கணனித் தட்டச்சு மூலமான Curriculum Vitae-யே வேலைவாய்ப்பை வழங்கும் எந்தவொரு நிறுவனத்தினாலும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இவ்வாறிருக்கையில் அநேகமானவர்கள் மைக்ரோசொப்ட்டின் Word மென்பொருளின் உதவியுடன் தமக்குரிய Curriculum Vitaeயினை தயாரிக்கின்ற போதிலும், சில சமயங்களில் Curriculum Vitaeயின் வடிவம், அதில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் என்பனவற்றை தெரியாத நேரத்தில் இணையத்தளங்கள் சில வழிகாட்டியாக அமைகின்றன.
அதாவது உங்களுக்குத் தேவையான Curriculum Vitaeயினை ஒன்லைனில் உருவாக்கும் வசதியினை சில இணையத்தளங்கள் தருகின்றன. அவற்றுள் சிறந்த ஐந்து இணையத்தளங்கள் இதோ!


சினிமா


2012-10-09    இங்கிலீஷ் விங்கிலீஷ்
நடிகர்கள்:- அதில் ஹுசைன்,ஸ்ரீதேவி,ஷிவான்ஸ்கோட்டியா,மேதி.
கதை: - ஆங்கிலம் தெரியாத ஒரே காரணத்துக்காக கணவனிடமும் மகளிடமும் சின்னச் சின்ன அவமானங்களைச் சந்தித்து மனதுக்குள் வெம்பும் ஒரு மனைவி, தாய்..அந்த தாழ்வுணர்ச்சியிலிருந்து மீண்டு, தனக்கான மரியாதையை மீட்டெடுப்பதுதான் இங்கிலீஷ் விங்கிலீஷ்.
கருத்து: குடும்பத்துடன் குழந்தைகளும் ரொம்பவே ரசித்தார்கள்.
புள்ளிகள்:-50
2012-10-01    தாண்டவம்
நடிகர்கள்:- விக்ரம்,அனுஷ்கா,நாசர், சந்தானம்,சரண்யா.
கதை: - வழக்கமான பழி வாங்கும் படலம் அடங்கிய கமர்ஷியல் படம்தான்..!
கருத்து: இயக்குனர் விஜய், தாண்டவத்தை எதிர்பார்த்த அளவுக்கு தராதது விக்ரம் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றம்.
புள்ளிகள்:-45
2012-09-26    சாட்டை
நடிகர்கள்:- சமுத்திரகனி, மகிமா,யுவன்,தம்பி ராமையா.
கதை: - தங்கள் கடமையை மறந்து கண்ணியம் தவறும் ஆசிரியர்களுக்கும், பிள்ளைகளை சரிவர புரிந்து கொள்ளாத பெற்றோருக்கும் கொடுக்கப்படும் அடியே சாட்டை.
கருத்து: சாட்டை சுழற்றிய விதம் மிகவும் அருமை...
புள்ளிகள்:-60
2012-09-19    சுந்தரபாண்டியன்
நடிகர்கள்:- சசிகுமார்,விஜய் சேதுபதி, லஷ்மி மேனன்.
 கதை: -  நண்பர்களுக்காக எதுவும் செய்யத் துணியும் ஹீரோவின் கதை
கருத்து: குடும்பத்துடன் சென்று பார்க்க வேண்டிய படம்
புள்ளிகள்:-50

திரைக்குப் பின்னால்..
 மாற்றான்…. 21 நிமிடங்கள் கட்!
சூர்யா நடித்து கடந்த வெள்ளிக்கிழமை திரைக்கு வந்த மாற்றான் படத்தின் நீளம் இப்போது 21 நிமிடங்கள் குறைத்து ட்ரிம் செய்யப்பட்டுள்ளது.
மாற்றான் படம் குறித்து எதிர்மறை விமர்சனங்கள் நிறைய வந்தன. மேலும் படம் மிக நீளமாக உள்ளதாகவும், இடைவேளைக்குப் பிறகு போரடிப்பதாகவும் ரசிகர்கள் தரப்பில் கூறப்பட்டது.
படத்தின் நீளம் மொத்தம் 2 மணி 47 நிமிடங்கள். எனவே படத்தில் போரடிக்கும் காட்சிகளைத் தூக்கிவிட தயாரிப்பாளர் தரப்பு முடிவு செய்தது.
அதன்படி 21 நிமிடக் காட்சிகள் வெட்டப்பட்டு படம் ட்ரிம் செய்யப்பட்டுள்ளது.
வசூல் எப்படி?
விமர்சனங்கள் கலவையாக இருந்தாலும் படத்துக்கு வெகு சிறப்பான ஓபனிங் கிடைத்ததால், உலகம் முழுவதும் கடந்த மூன்று தினங்களில் மட்டும் ரூ 19 கோடியை மாற்றான் வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேரளாவிலும் இதுவரை ரூ 2.86 கோடியை இந்தப் படம் வசூலித்துள்ளதாம்.
விடுமுறை நாட்கள் அதிகம் உள்ளதாலும், படம் ட்ரிம் செய்யப்பட்டுள்ளதாலும் இனி வசூல் அதிகரிக்கும் என்று தயாரிப்பாளர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.
அடுத்த வருடம் வெளியாகிறது கௌரவம்

டூயட் மூவிஸ் தயாரிப்பில் உருவாகி வரும் கௌரவம் படம் அடுத்த வருடம் ஜனவரி 25ம் திகதி வெளியாகும் என்று பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.
பிரகாஷ் ராஜ்- ராதா மோகன் கூட்டணியில் உருவான மொழி, அபியும் நானும், பயணம் படங்களைத் தொடர்ந்து தற்போது கௌரவம் உருவாகி வருகிறது.
பொதுவாக படப்பிடிப்பு தொடங்கி ஒரு படம் இப்போது வெளியாகும், அப்போது வெளியாகும் என்று தள்ளிப் போய்க்கொண்டே இருக்கும் சூழ்நிலையில், பிரகாஷ் ராஜ் தயாரிப்பில் உருவாகும் படங்கள் சொல்லி வைத்தாற்போல வெளியாவது சிறப்பான விடயமாகும்.
அதேப்போல இம்முறையும், கௌரவம் ஜனவரி 25ம் திகதி வெளியாகும் என்று திட்டவட்டமாக ஒரு திகதியை அறிவித்துள்ளார் நடிகர் பிரகாஷ் ராஜ்.
இதற்குக் காரணம், தனது படக்குழுவின் மீதுள்ள நம்பிக்கையே என்று சிரித்தபடியே பிரகாஷ் ராஜ் கூறுகின்றாராம்.
நீர்ப்பறவை படத்தின் பாடல் வரியை நீக்கிய இயக்குனர்

கொலிவுட்டில் தேசிய விருது பெற்ற தென்மேற்கு பருவக்காற்று படத்தை இயக்கியவர் சீனு ராமசாமி.
இவர், தற்போது மீனவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட நீர்பறவை என்ற படத்தை எடுத்துள்ளார்.
இப்படத்தில் இடம் பெற்ற 'பற..பற..' என்ற பாடலில் இடம் பெற்ற வரியினை நீக்குவதாக இவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், மனித நேயர், பேராயர் எஸ்றா சற்குணம் அவர்களின் வேண்டுகோளை ஏற்று, நீர்ப்பறவை திரைப்படத்தில் பற.. பற.. என்கிற பாடலில் இடம் பெற்ற... ஸ்தோத்திரம் மற்றும் சத்தியமும் ஜீவனுமாய் நிலைக்கிறேன்.. என்கிற சொற்களை நீக்குகிறோம் என்றார்.
சிறுபான்மை மக்களின் அன்பான வாழ்க்கையை சொல்லும் திரைப்படம் நீர்ப்பறவை எனவும் அவர் கூறியுள்ளார்.
இப்படத்தில் நாயகனாக விஷ்ணுவும், நாயகியாக சுனைனாவும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

22 கோடி சொன்னார்… 42 கோடிக்கு இழுத்துவிட்டுட்டார்!

ரூ 22 கோடிக்கு படம் எடுத்துத் தருவதாக உறுதியளித்துவிட்டு, ரூ 43 கோடி வரை இழுத்திவிட்டுவிட்டார் என நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் மீது புகார் கொடுத்துள்ளனர் தெலுங்குப் பட தயாரிப்பாளர்கள்.
நடிகரும், இயக்குனருமான லாரன்ஸ் தெலுங்கில் ‘ரெபெல்’ என்ற படத்தை இயக்கினார். பிரபாஸ் – தமன்னா, தீக்ஷா சேத் நடித்தனர். படம் வெளியாகி நல்ல வசூலையும் பார்த்துவிட்டது.
இந்த நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர்கள் பசவான், புல்லாரோ ஆகியோருக்கும், லாரன்சுக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டுள்ளது.
ரூ 22.50 கோடி செலவில் பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் இந்தப் படத்தை இயக்கித் தர ஒப்புக் கொண்ட லாரன்ஸ், ரூ 42 கோடிக்கு செலவை இழுத்துவிட்டதாகவும், பட்ஜெட்டுக்கு மேல் ஆன தொகையை லாரன்ஸ் தங்களுக்குத் தரவேண்டும் என்றும் புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.
தயாரிப்பாளர்களுக்கு எதிராக லாரன்சும், இயக்குனர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். தன்னிடம் தெரிவிக்காமல் படத்தின் டப்பிங் மற்றும் ரீமேக் உரிமையை தயாரிப்பாளர்கள் விற்றுவிட்டதாக அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையில் இந்த சண்டைக்கு காரணமே, படத்தின் தமிழ் உரிமையை தனக்கு எழுதித் தர வேண்டும் என ராகவா லாரன்ஸ் அடம் பிடித்ததுதானாம். ஏற்கெனவே போட்ட பட்ஜெட்டுக்கு மேல் செலவழித்து எடுக்கப்பட்ட படத்தின் தமிழ் உரிமையை தரமுடியாது என தயாரிப்பாளர்கள் கூற, லாரன்ஸ் தன் பங்குக்கு எகிறினாராம். விளைவு தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துவிட்டனர்.